மனித மூளையில் பொருத்தும் சிப் தயார்! மனித குலத்துடன் விளையாட போகும் Elon Musk.. ரெடியா இருங்க?

|

எலான் மஸ்க் என்ற உடன் நியாபகத்திற்கு வருவது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தான். சமீபகாலமாக ட்விட்டர் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு தகுந்த நபர் எலான் மஸ்க் தான். மஸ்க் ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் வித்தியாசமாக இருப்பார். இது மட்டும் அல்ல அவரது சிந்தனையும் அப்படி தான் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மேலோங்கி இருக்கும்.

நியூரோலிங்க் சிப்

நியூரோலிங்க் சிப்

எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் தான் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான நியூரோலிங்க். விரைவில் இந்த நிறுவனமும் பிரபலமடைய இருக்கிறது.

எலான் மஸ்க் நியூரோலிங்க் நிறுவனத்தின் மூலம் மனித மூளையில் பொறுத்தக்கூடிய சிப் ஒன்றை தயாரித்து சோதித்து வந்தார். தற்போது இந்த சிப் மனித மூளையில் பொருத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அரசு அனுமதிக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ கேம் விளையாடிய குரங்கு

வீடியோ கேம் விளையாடிய குரங்கு

இந்த சிப் ஆனது எலோன் மஸ்க் தனது பிரைன் சிப் இன்டர்ஃபேஸ் ஸ்டார்ட்அப் மூலம் உருவாக்கப்பட்ட வயர்லெஸ் சாதனம் ஆகும். ஆறு மாதங்களில் நியூராலிங்கின் சிப்பை மனித மூளையில் சோதிக்க மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். நியூராலிங்க் சிப் ஆனது கணினி, மொபைல் போன் அல்லது வேறு எந்த சாதனத்தையும் மூளையின் செயல்பாட்டின் மூலம் நேரடியாகக் கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.

இந்த சிப்பை குரங்கின் மூளையில் பொருத்தி சோதித்த வீடியோவை மஸ்க் முன்னதாகவே பகிர்ந்திருந்தார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதில் குரங்கு வீடியோ கேம் விளையாடியது.

மனித மூளைக்குள் கணினி சிப்கள்

மனித மூளைக்குள் கணினி சிப்கள்

எலோன்மஸ்க்-ன் நியூரலிங்க், மனித மூளைக்குள் கணினி சிப்களை பொருத்தும் நடவடிக்கை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய உள்வைப்புகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் மனிதகுலத்தை எதிர்காலத்தில் சூப்பர் புத்திசாலித்தனமான கணினிகளுடன் இன்னும் அதிக அளவில் நிலைநிறுத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

உலகம் அடுத்ததடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. முன்னற்றம் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வைத்தே கணிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.

இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் முயற்சி

இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் முயற்சி

அதன்படி எலோன் மஸ்க்-ன் நியூரோலிங்க் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மனிதனின் மூளையை இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சியை ஆராய்கிறது.

பன்றி மீது சோதனை

பன்றி மீது சோதனை

மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சியின் முன்னோட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டது. பன்றியின் மூளையில் இரண்டு மாதங்களாக 8 மிமீ அளவு கொண்ட கணினி சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப் பொருத்தப்பட்ட பன்றிக்கு எந்தவித உடல் நலக் குறைவும் ஏற்படவில்லை. சிப் பொருத்தப்பட்ட நாளில் இருந்தே பன்றி நலமுடனே காணப்பட்டது.

அடுத்தக்கட்ட முன்னேற்றம்

அடுத்தக்கட்ட முன்னேற்றம்

கம்பியூட்டர் சிப் பொருத்தும் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை அடுத்த கட்டமல்ல பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் என கூறப்படுகிறது.

எலான் மஸ்க் அறிவிப்பு

எலான் மஸ்க் அறிவிப்பு

மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோப்போகள் உதவியுடன், மனிதர்களின் தலைமுடியை விட சிறய கம்யூட்டர் சிப்கள் மூளையில் பொருத்தப்பட உள்ளது. மனிதன் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்த இருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Neuralink Human brain implantation chip is ready! Awaiting government approval Says Elon Musk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X