SQUID GAME-ஆல் வந்த வினை.. ரூ.85 எக்ஸ்ட்ரா.. Netflix திட்டத்தின் விலை திடீர் உயர்வு.. எந்தெந்த நாடுகளில்?
கடந்த 2024 கிறிஸ்துமஸ் மற்றும் 2025 புத்தண்டு விடுமுறைக் காலத்தில், பிரபல ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் சந்தாதாரர்கள் தளமானது 18.9 மில்லியன் என்கிற அதிகரிப்பை கண்டு, மொத்தம் 302 மில்லியன் என்கிற உலகளாவிய சந்தாதாரர்களை எட்டியுள்ளது. இதற்கு லைவ் ஸ்ட்போர்ட்ஸ், ஸ்க்விட் கேம் சீசன் 2 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் காரணமாக இருந்துள்ளன.
இதன் விளைவாக அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல் மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலைகள் திடீரெனெ உயர்தத்தப்பட்டுள்ளன. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனக்கு கிடைத்துள்ள இந்த பிரபலத்தை சரியாக பயன்படுத்தி அதை பணமாக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

தற்போது அமெரிக்காவில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் உடனான 1 மாத கால சந்தா திட்டம் $7.99 (தோராயமாக ரூ.690) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது $6.99 (தோராயமாக ரூ. 605) ஆக இருந்ததது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.85 விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் சேவையின் பிரீமியம் பேக்கேஜ் $24.99 (தோராயமாக ரூ. 2,163) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பழைய விலையை விட 9% அதிகமாகும்.
நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்வுகளின் மீது நெட்பிளிக்ஸ் செய்த முதலீடுகள் ஆனது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. கடந்த நவம்பர் மாதம் ஜேக் பால் மற்றும் மைக் டைசன் இடையே நடந்த ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டி 65 மில்லியன் ஸ்ட்ரீம்களை ஈர்த்தது. கிறிஸ்மஸ் தினத்தன்று நடந்த இரண்டு நேஷனல் கால்பந்து லீக் விளையாட்டுகள், பியோனஸின் ஹால்ப்-டைம் பெர்பார்மென்ஸ் ஆகியவைகள், சராசரியாக 30 மில்லியன் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்து, லீக் வரலாற்றில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட போட்டிகள் என்கிற வரிசையில் இடம்பிடித்தது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நெட்பிளிக்ஸ் தளத்தின் மிகவும் பிரபலமான வெப் சீரிஸ் ஆன வெட்னஸ்டே" மற்றும் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்" ஆகியவைகளின் அடுத்தடுத்த சீசன்கள் இன்னும் பல சந்தாதாரர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் நெட்பிளிக்ஸ் ஆனது 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடக்கும் பிஃபா மகளிர் உலகக் கோப்பைக்கான உரிமைகளையும் பெற்றுள்ளது.
அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல் மற்றும் அர்ஜென்டினாவை போல இதியாவிலும் நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலைகள் அதிகரிக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் அமெரிக்காவில் முதல் முறையாக விளம்பரங்களுடன் வரும் சந்தா திட்டத்தின் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆக இந்த விலை உயர்வு மற்ற நாடுகளுக்கு பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியாவில் நெட்பிளிக்ஸ் திட்டங்களின் விலை விவரங்கள்: இந்தியாவில் தற்போது மொத்தம் 4 நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கிறது - மொபைல், பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம். நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.149 ஆகும். இது 480பி ரெசல்யூஷனின் கீழ் வீடியோ தரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் ஒரு வீட்டிற்குள் ஒரு நேரத்தில் ஒரு மொபைல் அல்லது ஒரு டேப்லெட்டை என்கிற சிங்கிள் டிவைஸ் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் பேஸிக் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.199 ஆகும். இது 720பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இருப்பினும், இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸின் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.499 ஆகும். இது 1080பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் 2 டிவைஸ் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
கடைசியாக உள்ள, நெட்பிளிக்ஸ் பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.649 ஆகும், இது 4கே ரெசல்யூஷன், ஸ்பேஷியல் ஆடியோ, ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களின் வழியாக ஸ்ட்ரீமிங் செய்யும் ஆதரவு, எந்த நேரத்திலும், எந்தவொரு கன்டென்ட்டையும் 7 டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்யும் ஆதரவு ஆகியவைகளை வழங்கும்.


Click it and Unblock the Notifications








