Jio பயனர்கள் கவனத்திற்கு.. நெட்பிளிக்ஸ் சந்தா.. இனி இவ்வளவு செலவு பண்ணனும்.. முழு விவரம்..
ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியது. அதுவும் முக்கியமான ஓடிடி சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை கூட உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் (netflix) சந்தா வழங்கி வந்த ஜியோ ரூ.1099 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிக எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பத குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம். அதாவது ஜியோவின் ரூ.1299 மற்றும் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்குகின்றன. இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 1299 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
குறிப்பாக ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 1799 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
மேலும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தா வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டாம் அமேசான் பிரைம் வீடியோ வேண்டும் என எதிர்பார்க்கும் மக்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதாவது அமேசான் பிரைம் வீடியோ சந்தா முன்பு குறைந்த விலையில் கிடைத்தது. தற்போது இந்த திட்டத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சரி இப்போது ஜியோ ரூ.1029 திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது (Jio rs 1029 plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








