விதியை மீறினால் கூடுதல் கட்டணம் கட்டாயம்- நெட்ஃபிளிக்ஸ் பயனர்களே உஷார்!

|

ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும் குறுகிய காலங்களிலேயே ஏதாவது ஒரு ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது.

நெட்ஃபிளிக்ஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை

நெட்ஃபிளிக்ஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை

ஓடிடி தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்வது உண்டு. இதை தடுப்பதற்கு ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. பாஸ்வேர்ட் பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க நெட்ஃபிளிக்ஸ் தயாராகி இருக்கிறது. தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் உறுப்பினர்களுக்கான கட்டணத்தை வசூலிக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படக்கூடாது

அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படக்கூடாது

நெட்ஃபிளிக்ஸ் கணக்கு "உங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படக்கூடாது" என நிறுவனக் கொள்கை கூறுகிறது. இந்த கொள்கையை மீறும் பயனர்களிடம் கூடுதல் பணம் செலுத்தும்படி நிறுவனம் கோருவதாக அறிக்கைத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல்லை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது.

கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்

கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்

தங்களது நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட்டை பகிரும் வாடிக்கையாளர்களிடம் நிறுவனம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. பயனர்கள் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டி பகிர்வதற்கு நிறுவனம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதன்படி கடவுச்சொற்கள் பகிர்வதை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட சோதனையை நிறுவனம் சிலி, பெரு மற்றும் கோஸ்டாரிகாவில் மேற்கொண்டது. ஆனால் இந்த முயற்சி திட்டமிட்டபடி செயல்படவில்லை. இருப்பினும் வெளியாகியுள்ள Rest of World-ன் அறிக்கைப்படி, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கொள்கையை மீறும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் செலுத்தும்படி கோருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட நபர்களுடன் கடவுச்சொல்லை பகிரக்கூடாது என நிறுவனக் கொள்கை தெரிவிக்கிறது.

வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் கொள்கை

வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் கொள்கை

முதற்கட்ட சோதனையின் போது வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் கொள்கையை மீறும் பயனர்களிடம் பணம் வசூலித்ததாகவும் இதன் காரணமாக பல பயனர்கள் சந்தாவை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் புதிய கொள்கையை அறிவித்து அதை மீறும் பயனர்களிடம் பணம் வசூலித்த போதிலும் முதற்கட்ட சோதனை நடந்த பெரு நகரில் பல பயனர்கள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது.

கூடுதல் கட்டணங்களுக்கான அறிவிப்பு

கூடுதல் கட்டணங்களுக்கான அறிவிப்பு

அதேபோல் சில பயனர்கள் கணக்குகளை பகிர்ந்தாலும் கூடுதல் கட்டணங்களுக்கான அறிவிப்பை பெறவில்லை. இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் செய்தித் தொடர்பாளர் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டிடம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் குறித்து பார்க்கையில், புதிய கொள்கை வெளியீடு படிப்படியாக நடந்து வருகிறது எனவும் வெவ்வேறு சந்தாதாரர்களுக்கு வெவ்வேறு வகையிலான கட்டணம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடவுச்சொல் பகிர்வதை தடுக்கும் நெட்ஃபிளிக்ஸ்

கடவுச்சொல் பகிர்வதை தடுக்கும் நெட்ஃபிளிக்ஸ்

கடவுச்சொல் பகிர்வதை தடுக்கும் நெட்ஃபிளிக்ஸ்-ன் இந்த நடவடிக்கை தற்போது வரை பெரு, சிலி மற்றும் கோஸ்டாரிகாவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் மூலமாக பயனர்களுக்கு விளக்குவது எப்படி, கட்டணம் வசூலிக்கும் வழிமுறை, கடவுச்சொல் பகிர்வதை கண்டறியும் வழிமுறை உள்ளிட்டவைகள் முழுமையாக கண்டறிந்த பிறகு பல நாடுகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் இந்த முறையானது எப்போது செயல்படுத்தப்படும் என்ற தகவல் இதுவரை இல்லை. இருப்பினும் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யும்பட்சத்தில் இந்தியாவிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்

யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்

நெட்ஃபிளிக்ஸ் கணக்கு யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை யார் யாருக்கு பகிருகிறார்கள் இல்லை அவர்களே பிற சாதனங்களில் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்காணிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து பயனர்கள் பிறருக்கு தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிர்வதை தடுப்பதற்கான முதற்கட்ட சோதனை முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில் பிற நாடுகளிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix Starts Charging Extra Money For Sharing Your Account ID and Password

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X