இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.! எப்போது முதல் தெரியுமா?

|

நெட்ஃபிளிக்ஸ் சேவையை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் ஒரு வாரம் இலவச சேவையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.! எப்போது முதல் தெரியுமா?

குறிப்பாக கடந்த மாதம் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் உள்ள தங்களுடைய பயனர்களுக்கு ஒரு வார இறுதியில் இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது.

அதன்படி தறபோது டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 இரவு 12 மணி வரை இரு நாட்களுக்கும் நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம் எனத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள், மிகப்பெரிய தொடர், விருது பெற்ற ஆவணப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பார்க்கலாம்.

இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.! எப்போது முதல் தெரியுமா?

மேலும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின்படி,நாட்டில் உள்ள அனைவருக்கும் வார இறுதியில் இலவச சேவை வழங்குவதன் மூலம் எங்கள் சேவையின் தரம் குறித்து முழுவதுமாக பயனர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு நெட்ஃபிளிக்ஸில் உள்ள மிக அற்புதமான கதைகளை இந்தியாவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு ரசிகர்களுக்கும் கொண்டு வர விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் ஸ்ட்ரீம்ஃபெஸ்டை ஹோஸ்ட் செய்கிறோம் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.! எப்போது முதல் தெரியுமா?

பயனர்கள் இந்த இலவச சேவையைப் பெற netflix.com/StreamFest என்ற தளத்தைக் காணவும். இதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவுபெற்று ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கலாம். குறிப்பாக இதற்கு கடன் அல்லது பற்று அட்டை அல்லது கட்ணம் எதுவம் தேவையில்லை.

மேலும் நெட்ஃபிளிக்ஸ் இப்பொழுது 'ஆடியோ மோடு (Audio Mode)' எனப்படும் பேக்கிரௌண்ட் பிளேபாக் அம்சத்தைத் தனது ஆண்ட்ராய்டு நெட்பிளிக்ஸ் பயன்பாட்டின் 7.9.1 வெர்ஷனில் சேர்த்துள்ளது. இந்த அம்சம் பயனர்களை விரைவில், அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வீடியோவைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் பின்னணியில் கேட்க மட்டும் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.! எப்போது முதல் தெரியுமா?

இந்த புதிய அம்சம் தொடர்பான சில செய்திகள் வெளியாகியுள்ளது. அதில், "வீடியோவை முடக்கி, உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் உங்கள் தரவைச் சேமிக்க முடியும்" என்றும், "வீடியோ முடக்கப்பட்ட நேரத்தில், நீங்கள் மற்ற விஷயங்களைச் செய்வதில் பிஸியாக இருக்கும்போது உங்கள் நிகழ்ச்சியை ஆடியோ மூலம் தொடர்ந்து கேட்கலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Netflix's free weekend access to roll out in December And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X