Netflix இல் தெரியாம கூட இந்த 3 மேட்டரையும் செஞ்சிடாதீங்க.. இல்லனா Account சோலி முடிஞ்ச்சு!

|

ஆங்கிலத்திலும் சரி, தங்கிலீஷிலும் சரி.. நெட்பிளிக்ஸிற்கு (Netflix) பிடிக்காத ஒரே வார்த்தை "பாஸ்வேர்ட் ஷேரிங்" தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அது என்னவோ உண்மைதான்.

ஆனால் அந்த பட்டியலில் பாஸ்வேர்ட்-ஐ பகிர்வது மட்டுமே நெட்பிளிக்ஸிற்கு பிடிக்காத ஒரு காரியம் அல்ல. இன்னும் இரண்டு முக்கியமான 'மேட்டர்களும்' உள்ளன.

அதென்ன மேட்டர்கள்?

அதென்ன மேட்டர்கள்?

இப்படி நெட்பிளிக்ஸிற்கு மிகவும் பிடிக்காத மூன்று முக்கியமான சமாச்சாரங்கள் உள்ளன. இது ஏன் முக்கியம் என்றால், இவைகளை நீங்கள் செய்யும் பட்சத்தில் நெட்பிளிக்ஸில் இருந்து "தடை" செய்யப்படுவீர்கள்.

இது எப்போத்துல இருந்து? என்று ஷாக் ஆகும் நெட்பிளிக்ஸ் யூசர்கள், அலெர்ட் ஆக இருக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

'அக்செஸ்' காலி ஆகும்.. இல்லனா அக்கவுண்ட்டே காலியாகும்!

'அக்செஸ்' காலி ஆகும்.. இல்லனா அக்கவுண்ட்டே காலியாகும்!

செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துவதை செய்யும் யூசர்களிடம் நெட்பிளிக்ஸ் இரக்கமோ, சகிப்புத்தன்மையையோ வெளிப்படுத்துவதில்லை.

இந்த ஸ்ட்ரீமிங் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட விதிகளை நீங்கள் மீறும் பட்சத்தில், உங்கள் அக்கவுண்ட்டிற்கான அணுகலை நீங்கள் இழப்பீர்கள் அல்லது "இன்னும் ஒரு படி கீழே இறங்கி இருந்தால்" நெட்பிளிக்ஸில் இருந்து நீங்கள் தடை செய்யப்படுவீர்கள்.

இது பயமுறுத்தும் ஒரு வேலை அல்ல!

இது பயமுறுத்தும் ஒரு வேலை அல்ல!

ஏனெனில் சமீபத்தில் 200,000 சந்தாதாரர்களை இழந்ததாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. மேலும் நெட்பிளிக்ஸ் மேலதிக சந்தாதாரர்களை இழக்கவும் விரும்பவில்லை.

ஒருவேளை நீங்களும் நெட்பிளிக்ஸ் உடன் "ஒற்றுப்போய் வாழ வேண்டும்" என்று நினைத்தால், அதாவது உங்கள் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்டை-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், கீழ்வரும் மூன்று விடயங்களை செய்வதிலிருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.

VPN-ஐ பயன்படுத்துவது!

VPN-ஐ பயன்படுத்துவது!

அறியாதோர்க்ளுக்கு, விபிஎன் - ஆன்லைனில் உங்களை பிரைவேட் ஆக வைத்திருக்க உதவும் ஒரு சேவை ஆகும். பெரும்பாலும் விபிஎன்-கள் ஆன்லைன் நிகழ்த்தப்படும் செயல்பாட்டை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது.

ஆக இது உங்கள் நெட்வொர்க்கை சைபர் கிரிமினல்களிடமிருந்து பாதுகாக்கும் மற்றும் உங்கள் ஐபி அட்ரெஸ், ப்ரவுஸிங் ஆக்டிவிட்டி மற்றும் பெர்சனல் டேட்டா ஆகியவற்றையும் மறைக்க உதவும். இது பிரைவசி-ஐ பற்றியது என்றாலும் கூட, நெட்பிளிக்ஸ் விபிஎன் நெட்வொர்க்கின் கீழ் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை.

WhatsApp-க்கு வந்த தரமான Update: இனிமேல் WhatsApp-க்கு வந்த தரமான Update: இனிமேல் "எல்லாத்தையுமே" மறைக்கலாம்! அதெப்படி?

இதில் நெட்பிளிக்ஸிற்கு என்ன பிரச்சினை?

இதில் நெட்பிளிக்ஸிற்கு என்ன பிரச்சினை?

விபிஎன்-கள், நீங்கள் வேறு நாட்டில் இருக்கிறீர்கள் என்று நம்பும்படி தளங்களை ஏமாற்றுகின்றன. அதாவது, ஒரு விபிஎன்-இன் கீழ் உங்கள் நாட்டில் கிடைக்காத டிவி நிகழ்ச்சிகளை கூட நீங்கள் அணுகலாம். நெட்பிளிக்ஸ் இந்த செயல்முறைக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இந்த மேட்டர் நெட்பிளிக்ஸின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீறி.. நீங்கள் ஒரு விபிஎன் நெட்வொர்க்கின் கீழ் ப்ரவுஸ் செய்வதை நெட்பிளிக்ஸ் கண்டறிந்தால், அதை நிறுத்தும்படி கேட்கும் பாப்-அப் மெசேஜை பெறுவீர்கள். ரிமைண்டர்களை நீங்கள் தொடர்ச்சியாக புறக்கணித்தால், ஒருகட்டத்தில் நீங்கள் தடை செய்யப்படுவீர்கள்.

அடுத்தது நெட்பிளிக்ஸின் ஒரிஜினல் கன்டென்ட்-ஐ ரீப்ரொட்யூசிங் (Reproducing) செய்வது!

அடுத்தது நெட்பிளிக்ஸின் ஒரிஜினல் கன்டென்ட்-ஐ ரீப்ரொட்யூசிங் (Reproducing) செய்வது!

இது நெட்பிளிக்ஸில் மட்டுமல்ல. எந்தவொரு கன்டென்ட் -ட்ரிவன் ஆப் அல்லது வெப்சைட்டிலும் செய்ய கூடாத ஒரு செயல் ஆகும். ஒரிஜினல் கன்டென்ட்-ஐ நீங்கள் திருடவோ அல்லது மீண்டும் உருவாக்கவோ கூடாது. மீறினால், நெட்பிளிக்ஸ் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் / எடுக்கிறது.

"பிளாட்பார்மில் உள்ள எதையும் ஆர்ச்சிவ் செய்யவோ, ரீப்ரொட்யூஸ் செய்யவோ, விநியோகிக்கவோ, மாற்றவோ, காட்சிப்படுத்தவோ, வெளியிடவோ, உரிமம் கோரவோ, வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்கவோ, விற்பனைக்கு வழங்கவோ வேண்டாம்" என்று நெட்பிளிக்ஸ் தன் யூசர்களிடம் கேட்டுக்கொள்கிறது.

"மீறினால்.. எங்கள் சேவையை பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்தலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்" என்றும் நெட்பிளிக்ஸ் எச்சரிக்கிறது.

கடைசியாக... பாஸ்வேர்ட் ஷேரிங்!

கடைசியாக... பாஸ்வேர்ட் ஷேரிங்!

இன்று, நேற்றல்ல நெட்பிளிக்ஸ் நீண்ட காலமாகவே பாஸ்வேர்ட் ஷேரிங் சிக்கலை எதிர்த்துப் போராடி வருகிறது. முதலில் இந்நிறுவனம், குறிப்பிட்ட சிக்கலை சரி செய்வதில் கண்மூடித்தனமாக இருந்தது, ஆனால் இப்போது தெளிவான நடைமுறையை செயல்படுத்த விரும்புகிறது. இதற்காக நெட்பிளிக்ஸ், பெரு, சிலி மற்றும் கோஸ்டாரிகாவில் பாஸ்வேர்ட் ஷேரிங்-ஐ தடுக்கும் ஒரு சோதனையை நடத்தியது.

ஆனால், பாஸ்வேர்டு பகிரப்படுவதை தடுக்கும் நிறுவனத்தின் முயற்சி திட்டமிட்டபடி செயல்படவில்லை. ஆக நெட்பிளிக்ஸ் தன் கொள்கைகளை மீறுபவர்களிடம் கூடுதல் பணம் செலுத்துமாறு கேட்க தொடங்கி உள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் புதிய கொள்கை 'பெரு'வில் உள்ள நெட்பிளிக்ஸ் யூசர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆக மொத்தம், பாஸ்வேர்ட் ஷேரிங் சமாச்சாரத்தில் நெட்பிளிக்ஸே குழப்பத்தில் தான் உள்ளது போல் தெரிகிறது

Best Mobiles in India

English summary
Still, you are still sharing your Netflix password with your friends and family, and keep streaming Netflix using a VPN means it's time to stop, or else your Netflix account could be banned. Check details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X