கைப்புள்ள நீயுமா.. Netflix கொண்டு வந்த புது 'ரிமோட் ஒன்லி' ரூல்ஸ்.. மொபைல், TV ரெண்டுமே மாட்டுச்சு!
மாதந்தோறும் யுபிஐ, ஆதார், ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட்களில் தான் புதுசு புதுசா ரூல்ஸ் வரும். இதற்கிடையில் உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் ஆனது 'ரிமோட் ஒன்லி' (ரிமோட் வழியாக மட்டுமே) என்கிற புதிய விதியை அமல்படுத்தி உள்ளது.
நெட்பிளிக்ஸ் ஆனது ஸ்மார்ட்போன்கள் வழியாக ஸ்மார்ட் டிவிகளுக்கு காஸ்டிங் (Casting) செய்யும் திறனை சத்தமின்றி நீக்கியுள்ளது, இதனால் ஆயிரக்கணக்கான நெட்பிளிக்ஸ் பயனர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த மாற்றம் கடந்த சில வாரங்களாக நடைமுறைக்கு வந்ததாக தெரிகிறது. சில பயனர்கள் கடந்த மாதம் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இந்த அம்சம் அகற்றப்பட்டதாக கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

(ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியின் படி) முதலில் - நெட்பிளிக்ஸ் இனி ஒரு மொபைல் டிவைஸில் இருந்து பெரும்பாலான டிவிகள் மற்றும் டிவி ஸ்ட்ரீமிங் டிவைஸ்களுக்கு நிகழ்ச்சிகளை காஸ்டிங் செய்வதை ஆதரிக்காது. நெட்பிளிக்ஸ்-ஐ நேவிகேட் செய்ய உங்கள் டிவி அல்லது டிவி ஸ்ட்ரீமிங் டிவைஸ் உடன் வந்த ரிமோட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஆதரவுப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் - நெட்பிளிக்ஸ் அந்த பகுதியை அகற்றிவிட்டதாக தெரிகிறது, மேலும் இது க்ரோம்காஸ்ட் 3வது தலைமுறை அல்லது அதற்கு மேற்பட்ட (பிஸிக்கல் ரிமோட் இல்லாமல்), கூகுள் நெஸ்ட் ஹப் ஸ்மார்ட் டிஸ்பிளே, தேர்ந்தெடுக்கப்பட்ட காஸ்ட்-எனேபிள்டு விஜியோ டிவிகள் மற்றும் காம்பல் டிவிகளுக்கு மட்டுமே காஸ்டிங் செய்யும் திறன் ஆதரிக்கப்படும் என்று மீண்டும் நெட்பிளிக்ஸ் ஆதரவு பக்கம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் கஸ்டமர் கேர் பிரதிநிதி ஒருவரை ரத்தின சுருக்கமாக - "ஒரு டிவைஸ்-க்கு அதன் சொந்த ரிமோட் இருந்தால், நீங்கள் காஸ்டிங் செய்ய முடியாது" என்று ஒரு ரெடிட் பயனரிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், சொந்த நெட்பிளிக்ஸ் ஆப் இல்லாத டிவைஸ்களால் இன்னும் காஸ்டிங் செய்ய முடியும் என்பது போல் தெரிகிறது ஆனால் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஆப் ஆதரவுடன் கூடிய பிற பிக் ஸ்க்ரீன் டிவைஸ்களில் பெரும்பாலும் நீங்கள் ரிமோட்டையே பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஐஓஎஸ் மற்றும் கூகுள் டிவி ஆப்பில் ஏர்பிளேக்க்கான ஆதரவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே நீக்கியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. விளம்பர ஆதரவு திட்டத்தில் இருந்தால் அல்லது அவர்கள் காஸ்டிங் செய்யும் டிவைஸ் ஆனது பெறுநரின் அதே வைஃபை நெட்வொர்க்கில் இல்லாவிட்டால், பயனர்கள் தங்கள் காஸ்டிங் அல்லது மிரரிங் அம்சத்தை பயன்படுத்த முடியாது" என்றும் நெட்ப்ளிக்ஸ் ஆதரவு பக்கம் கூறுகிறது.
காஸ்டிங் பட்டனை அகற்றுவது குறித்த விளக்கத்தில் - இந்த புதிய நடவடிக்கை "வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக" என்று கூறும் ஒரே ஒரு டெக்ஸ்ட்டை தவிர வேறு எந்த தெளிவான அல்லது விரிவான விளக்கத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நெட்பிளிக்ஸ் திட்டங்களின் விலை விவரங்கள்: இந்தியாவில் தற்போது மொத்தம் 4 நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கிறது - மொபைல், பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம். நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.149 ஆகும். இது 480பி ரெசல்யூஷனின் கீழ் வீடியோ தரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் ஒரு வீட்டிற்குள் ஒரு நேரத்தில் ஒரு மொபைல் அல்லது ஒரு டேப்லெட்டை என்கிற சிங்கிள் டிவைஸ் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் பேஸிக் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.199 ஆகும். இது 720பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இருப்பினும், இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸின் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.499 ஆகும். இது 1080பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் 2 டிவைஸ் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
கடைசியாக உள்ள, நெட்பிளிக்ஸ் பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.649 ஆகும், இது 4கே ரெசல்யூஷன், ஸ்பேஷியல் ஆடியோ, ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களின் வழியாக ஸ்ட்ரீமிங் செய்யும் ஆதரவு, எந்த நேரத்திலும், எந்தவொரு கன்டென்ட்டையும் 7 டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்யும் ஆதரவு ஆகியவைகளை வழங்கும்.


Click it and Unblock the Notifications








