அள்ளி வீசும் ஜியோ, ஏர்டெல்.. 84 நாள் வேலிடிட்டி.. ஓடிடி.. தினமும் 3ஜிபி டேட்டா.. என்ன விலை?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. அதுவும் பட்ஜெட் விலையில். இப்போது இந்த இரண்டு நிறுவனங்கள் வழங்கும் நெட்பிளிக்ஸ் சந்தா ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1099 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜியோ பயனர்கள் இந்த ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டாவை பெறமுடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
அதாவது ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றை எளிமையாகப் பார்க்க முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் ஜியோ நிறுவனம் மற்றொரு நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கும் திட்டத்தையும் வைத்துள்ளது.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1499 Plan) ஆனது இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.
மேலும் ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்.
இதுதவிர ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. பின்பு இந்த திட்டமும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் பல அசத்தலான நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1499 Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
இதுதவிர ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. பின்பு விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) போன்ற சலுகைகள் கூட இந்த ஏர்டெல் திட்டம் வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








