மிக மலிவு விலை.. வாடிக்கையாளர்களை அதிகரிக்க Netflix பக்கா பிளான்!

|

Netflix புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் மலிவு விலையில் விளம்பர சந்தா திட்டங்களை வெளியிட இருக்கிறது. பயனர்களை கவரும் விதமாக இந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விளம்பர திட்டங்கள் வெளியிடப்பட இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் இன் விளம்பர திட்டங்கள் பிற ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களுடன் போட்டியை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் அமெரிக்க விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த புதிய விளம்பர திட்டத்தின் மூலம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதோடு நெட்ஃபிளிக்ஸ் இன் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் விலை

விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் விலை

Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் விலை என்னவாக இருக்கும் என்பதை தகவல் தெளிவுப்படுத்தியுள்ளது.

Netflix விளம்பர அடிப்படையிலான திட்டங்களுக்கு மாதத்திற்கு USD 7 முதல் USD 9 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.559 முதல் ரூ.719 ஆகும்.

தற்போதுவரை அமெரிக்காவில் நெட்ஃபிளிக்ஸ் 1 மாத திட்டத்திற்கான விலை USD 9.99 (சுமார் ரூ.799), USD 15.49 (சுமார் ரூ.1,239), மற்றும் USD 19.99 (சுமார் ரூ.1,599) என வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை விலை இந்த அளவிற்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரூ.100க்கும் குறைவாக இருக்க வாய்ப்பு

ரூ.100க்கும் குறைவாக இருக்க வாய்ப்பு

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை மொபைல திட்டம் ரூ.149 என வசூலிக்கப்படுகிறது. எனவே நெட்ஃபிளிக்ஸ் விளம்பர திட்டங்கள் விலை இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாதாந்திர திட்டம் விலை ரூ.149 ஆக இருக்கும் காரணத்தால், விளம்பர திட்டங்களின் விலை ரூ.100க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திட்டங்களின் விலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் இந்த திட்டங்களின் விலை மிக மலிவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விளம்பர திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவு விலை Netflix திட்டங்கள்

மலிவு விலை Netflix திட்டங்கள்

இந்தியாவை பொறுத்தவரை Netflix இன் சந்தா திட்டம் ரூ.149 முதல் தொடங்குகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் இன் சந்தா திட்டங்கள் விலை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

அதோடு குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் டிடிஎச் ரீசார்ஜ் திட்டங்களில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை Netflix திட்டங்களின் விலை விரிவாக பார்க்கலாம்.

ரூ.149 திட்டம்:

ரூ.149 திட்டம்:

Netflix வழங்கும் இந்த திட்டமானது மொபைல் அல்லது டேப்லெட்டுக்கான சந்தா திட்டமாகும். 480p ஸ்ட்ரீமிங் வீடியோ தர ஆதரவு இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு சாதனத்திற்கான அணுகல் மட்டுமே கிடைக்கும்.

ரூ.199 திட்டம்:

ரூ.199 திட்டம்:

ரூ.199 திட்டமானது அடிப்படை சந்தா திட்டமாகும். இந்த திட்டத்தில் 480 பிக்சல் தீர்மானம் வழங்கப்படுகிறது. மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் டிவி உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் இந்த திட்டத்தை இயக்க முடியும்.

ரூ.499 திட்டம்:

ரூ.499 திட்டம்:

ரூ.499 திட்டமானது நிறுவனத்தின் சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. 1080P தீர்மானம் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை போன், டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் டிவி உள்ளிட்ட சாதனங்களில் இயக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீமிங் செய்ய இந்த திட்டம் அனுமதிக்கிறது.

ரூ.649 திட்டம்:

ரூ.649 திட்டம்:

ரூ.649 திட்டத்தை போன், டேப்லெட், கணினி அல்லது டிவி உள்ளிட்ட அனைத்திலும் இயக்கலாம். 4K HDR ஸ்ட்ரீமிங் வீடியோ தரத்தை இதில் பெறலாம்.

நிறுவனத்தின் ப்ரீமியம் சந்தா திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை ஒரு நேரத்தில் நான்கு சாதனங்களில் இயக்கலாம்.

உயர்திறன் வீடியோ தரத்தை விரும்பும் பயனர்களுக்கு இது மலிவு விலை திட்டமாக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Netflix Plans: Low Price Ad Based Plans Available Soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X