நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேர் பண்ணக்கூடாதா? டிவைஸ் எண்ணிக்கை என்னாச்சு? முழு விளக்கம்!
இந்தியாவில் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தின் பாஸ்வேர்ட் ஷேர் (Password Sharing) செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் யாரேனும் ஏற்கனவே பாஸ்வேர்ட் ஷேர் செய்திருந்தாலோ அல்லது இனிமேல் ஷேர் செய்ய விருப்பப்பட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அண்மை காலமாக தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் வழக்கம் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. புதுப்புது படங்களை அலைச்சல் இல்லாமலும், அதிகம் செலவில்லாமலும் வீட்டில் இருந்தேபடியே பார்க்க முடிந்தால் யாருக்கும் தியேட்டருக்கு செல்ல தோன்றாது. இதுவே ஓடிடி நிறுவனங்களில் அதீத வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.

இந்த வரிசையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஸ்ட்ரேஞ்ஜர் திங்ஸ் (Stranger Things), ஸ்க்விட் கேம் (Squid Game), மணி ஹீஸ்ட் (Money Heist) போன்ற வெப் சீரிஸ்கள் மூலம் இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. சொல்லப்போனால், மாதந்தோறும் நெட்பிளிக்ஸ் சந்தா கட்டுவதற்காகவே பட்ஜெட் போடும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருக்கிறது.
இந்த நேரத்தில், நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் பாஸ்வேர்ட் ஷேர் செய்வதற்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. அதோடு பாஸ்வேர்ட் ஷேர் செய்திருக்கும் சப்ஸ்கிரைபர்களுக்கு இமெயில் மூலம் வார்னிங் கொடுத்து வருகிறது. ஆனால், நெட்பிளிக்ஸ் தளத்தை சப்ஸ்கிரைப் செய்யும் போதே, ஒவ்வொரு பிளானிலும் எத்தனை டிவைஸ்களில் பயன்படுத்தலாம் என்ற சலுகை வழங்கப்படுகிறதே என்று உங்களுக்கு சந்தேகம் வருவது புரிகிறது.
ஏனென்றால், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பாஸ்வேர்ட் ஷேரிங் தடையானது, அந்த நிறுவனத்தின் பிளான்களில் கொடுக்கப்படும் டிவைஸ்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு பொருந்தும். அதாவது, 3 டிவைஸ்களில் பயன்படுத்தும் சலுகையுள்ள பிளானை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருந்தால், அந்த 3 டிவைஸ்களை வைத்திருக்கும் நபர்களையே குடும்ப உறுப்பினர்களாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கருதும்.
இந்த உறுப்பினர்களுக்கு, நீங்கள் புரொபைல் உருவாக்கியிருக்க வேண்டும். இந்த உறுப்பினர்களுக்கு மேல், யாராவது பயன்படுத்தினால், மட்டுமே உங்களுக்கு இமெயில் மூலம் வார்னிங் கொடுக்கப்படும். இதனடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மேல் பாஸ்வேர்ட் ஷேர் செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். முதலில் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்டின் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி செட்டிங்ஸ் பக்கத்து சென்று, அனைத்து டிவைஸ்களையும் சைன் அவுட் செய்ய வேண்டும்.
இதையடுத்து உங்களது பிளானில் எத்தனை டிவைஸ்களுக்கு அனுமதி உள்ளதோ அந்த டிவைஸ்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் புரொபைலை உருவாக்க வேண்டும். இதற்கு பின்பு பாஸ்வேர்ட் ஷேர் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








