புது ரூல்ஸ் தெரியாம நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேர் பண்ணாதீங்க.. ஒருவேளை மீண்டும் பண்ணா என்ன நடக்கும்?
பிரபல ஓடிடி (OTT) தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) பாஸ்வேர்ட் ஷேர் (Password Share) செய்யும் சப்ஸ்கிரைபர்களுக்கு ஷாக் கொடுக்கும்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் சப்ஸ்கிரைபர்களுக்கு என்ன நடக்கும்? இப்போது ஷேர் செய்திருந்தால் முடக்கப்படுமா? இதுகுறித்த விவரங்கள் இதோ.
இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர். இந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் மணி ஹீஸ்ட் (Money Heist), ஸ்ட்ரேஞ்ஜர் திங்ஸ் (Stranger Things), வெட்னஸ்டே (Wednesday), ஸ்க்விட் கேம் (Squid Game) போன்ற வெப் சீரிஸ்கள் காரணமாகவே நாள்தோறும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இருப்பினும், லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என்று விருப்பானாவர்களிடம் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை ஷேர் செய்து வரும் பழக்கம் கொண்டுள்ளனர். சொல்லப்போனால், மொத்தம் உள்ள 60 லட்சம் அக்கவுண்ட்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடியோக்களை ஷேரிங் மூலம் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி உலகம் முழுக்க நடப்பதால், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது.
இதனால், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேர் செய்ய கூடுதல் கட்டணத்தையும், சில நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேர் செய்ய தடையும் விதித்து வருகிறது. இப்போது, இந்தியாவிலும் பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் சப்ஸ்கிரைபர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் சப்ஸ்கிரைபர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "இன்று முதல் (ஜூலை 20) குடும்ப உறுப்பினர்களை தவிர, மற்றவர்களுக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் சப்ஸ்கிரைபர்களுக்கு வார்னிங் இமெயில் அனுப்பப்படும். எங்களது சப்ஸ்கிரைபர்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்கள் இருக்கின்றன. இதனாலேயே புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக முதலீடு செய்துவருகிறோம்.
இதற்கேற்ப கட்டுப்பாடுகளும் தேவைப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பாஸ்வேர்ட் ஷேர் செய்த சப்கிரைபர்களுக்கு இமெயில் வந்துகொண்டிருக்கிறது. அந்த மெயிலில், உங்களது அக்கவுண்ட் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறொருவரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, உங்களது பாஸ்வேர்ட் மற்றும் புரொபைல் விவரங்களை மாற்றுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் பாஸ்வேர்ட் ஷேர் செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்டின் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி செட்டிங்ஸ் பக்கத்து சென்று, மேனேஜ் அக்சஸ் அண்ட் டிவைசஸ் டேப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் சைன் அவுட் டிவைசஸ் கிளிக் செய்தால், அனைத்து டிவைஸ்களிலும் அக்கவுண்ட் சைன் அவுட்டாகிவிடும்.
அதன்பின் உங்களது பிளானில் எத்தனை டிவைஸ்களுக்கு அனுமதி உள்ளதோ அதை மட்டும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு பின்பும் பாஸ்வேர்ட் ஷேர் செய்தால், கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அக்கவுண்ட் முடக்கப்படுமா என்பதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








