Netflix பாஸ்வேர்ட் ஷேர் பண்ணாதீங்க.. கூடுதல் கட்டணம் விதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
பிரபல ஓடிடி (OTT) தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) பாஸ்வேர்ட் ஷேர் (Password Share) யூசர்களுக்கு அதிரடியாக கூடுதல் கட்டணத்தை விதித்துள்ளது. அதன்படி, முக்கிய பிளான்களில் பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் யூசர்கள் இனிமேல் கூடுதலாக கட்டணம் செலுத்தினால் மட்டுமே, நெட்பிளிக்ஸ் பயன்படுத்த முடியும். இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் (Netflix OTT Platform) கொண்டுள்ளது. இந்தியாவிலும் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்த நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் (Streaming) செய்யப்படும் ஸ்ட்ரேஞ்ஜர் திங்ஸ் (Stranger Things), மணி ஹீஸ்ட் (Money Heist), வெட்னஸ்டே (Wednesday), ஸ்க்விட் கேம் (Squid Game) போன்ற வெப் சீரிஸ்களை பார்க்க நாள்தோறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நெட்பிளிக்ஸ் சந்தா மொபைல் (Mobile), பேஸிக் (Basic), ஸ்டாண்டர்ட் (Standard), பிரீமியம் (Premium) என நான்கு பிளான்களில் வருகிறது. இவை அனைத்தும் மாதாந்திர பிளான்களாகும். இவற்றின் விலையை பொறுத்தவரையில் முறையே ரூ.149, ரூ.199, ரூ.499 மற்றும் ரூ.649ஆக உள்ளது. இதில் மொபைல், பேஸிக் பிளான்களில் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸில் மட்டுமே ஸ்டிரீமிங் செய்ய முடியும்.
ஆனால், ஸ்டாண்டர்ட் பிளானில் 2 டிவைஸ்களையும், பிரீமியம் பிளானில் 6 டிவைஸ்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இருப்பினும், மொபைல், பேஸிக் பிளான்களில் பாஸ்வேர்ட் ஷேர் செய்துகொள்ளலாம். ஸ்டிரீமிங் நேரத்தை பிரிந்துகொண்டு 2 டிவைஸ்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு அதிக சந்தாதாரர்கள் கிடைத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் ஸ்டாண்டர்ட் பிளானில் பாஸ்வேர்ட் ஷேர் செய்ய வேண்டும் என்றால், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தை நெட்பிளிக்ஸ் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் வரும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்: அமெரிக்காவில் ஸ்டாண்டர்ட் பிளானின் கட்டணம் ரூ.1,280ஆக உள்ளது. இந்த சந்தாதார்கள் பாஸ்வேர்ட் ஷேர் செய்தால், கூடுதலாக ரூ.660 செலுத்த வேண்டும். அதேபோல இங்கிலாந்தில் ஸ்டாண்டர்ட் பிளானின் கட்டணம் ரூ.980ஆக உள்ளது. இவர்கள் பாஸ்வேர்ட் ஷேர் செய்தால் கூடுதலாக ரூ.445 செலுத்த வேண்டும். அந்த வகையில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல மொபைல் மற்றும் பேஸிக் பிளான்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தால் நெட்பிளிக்ஸ் யூசர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான நெட்பிளிக்ஸ் யூசர்கள் பாஸ்வேர்ட் ஷேர் செய்து மட்டும் வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் அமெரிக்காவைப்போல இங்கேயும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால், பல யூசர்கள் சந்தாவை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








