Home
News

இனி அப்படியெல்லாம் பண்ண முடியாது., பயனர் ஐடி பகிர்ந்தால் கட்டணம்: நெட்பிளிக்ஸ் பயனர்களே உஷார்!

ஓடிடி தளங்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகிறது. திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும் குறுகிய காலங்களிலேயே ஏதாவது ஒரு ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது. சினிமா கலெக்ஷனில் ஓடிடி விற்பனையும் தற்போது இணைந்திருப்பது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்

யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்

ஓடிடி தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்வது உண்டு. இதை தடுப்பதற்கு ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. பாஸ்வேர்ட் பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க நெட்பிளிக்ஸ் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் உறுப்பினர்களுக்கான கட்டணத்தை வசூலிக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

பரிசோதனை தொடங்க இருப்பதாக அறிவிப்பு

பரிசோதனை தொடங்க இருப்பதாக அறிவிப்பு

நெட்பிளிக்ஸ் கணக்கு யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை யார் யாருக்கு பகிருகிறார்கள் இல்லை அவர்களே பிற சாதனங்களில் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்காணிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயனர்கள் பிறருக்கு தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிர்வதை தடுப்பதற்கான முதற்கட்ட பரிசோதனையை தொடங்க இருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த முதற்கட்ட பரிசோதனையானது சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தாதாரர்களின் வளர்ச்சி குறைந்து வருவதாக தகவல்

சந்தாதாரர்களின் வளர்ச்சி குறைந்து வருவதாக தகவல்

நெட்பிளிக்ஸ் நீண்ட காலமாகவே பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிர்வதை பொறுத்துக் கொண்டு இருந்தது. ஆனால் சமீபத்திய தகவலின்படி நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களின் வளர்ச்சி குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் நெட்பிளிக்ஸ் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் இரண்டு நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது. அது "கூடுதல் உறுப்பினரை சேர்" மற்றும் "புதிய கணக்கு சுயவிவரத்தை மாற்று" போன்ற அம்சமாகும். கூடுதல் உறுப்பினர் சேர் என்ற விருப்பம் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரீமியம் நெட்பிளிக்ஸ் திட்டங்களில் வழங்குகிறது. ஒவ்வொருவரும் அவரவர் சுயவிவரம் ஆனது தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்க இருக்கிறது.

விலைக் குறைப்பை அறிவித்த நெட்பிளிக்ஸ்

விலைக் குறைப்பை அறிவித்த நெட்பிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தியேட்டர்கள் ஓபன் செய்த நிலையில் இருந்தாலும் குறிப்பிட்ட திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலும், பிரலமான வெப் சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு என குறைந்த ஒரு ஓடிடி தளங்களிலாவது ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

ப்ரீமியம் திட்டங்களின் விலை

ப்ரீமியம் திட்டங்களின் விலை

ரூ.199-க்கு கிடைத்த மொபைல் பயனர்களுக்கான அடிப்படை திட்டம் தற்போது ரூ.149 என்ற விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ப்ரீமியம் திட்டங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.499-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.199 எனவும் ரூ.649 என்ற விலைக்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.499 எனவும் ரூ.799-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.649 எனவும் கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் தற்போது சிறந்த விலைக் குறைப்பை பெற்றுள்ளது.

ஓவர் தி டாப் ஓடிடி இயங்குதளம்

ஓவர் தி டாப் ஓடிடி இயங்குதளம்

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓவர் தி டாப் ஓடிடி இயங்குதளமாக இருப்பது நெட்ஃபிளிக்ஸ். தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளம் மிகவும் மலிவாக மாறி இருக்கிறது. தளத்தின் அனைத்து திட்டங்களும் விலைக் குறைப்பை பெற்றிருக்கின்றன. மறுபுறம் அமேசான் பிரைம் சந்தா உறுப்பினர் விலை உயர்ந்த நிலையில் தற்போது அதன் முக்கிய போட்டியாளரான நெட்பிளிக்ஸ் விலைக் குறைப்பை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் புதிய விலை

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் புதிய விலை

ரூ.199-க்கு கிடைத்த மொபைல் உறுப்பினர்களுக்கான அடிப்படை திட்டம் தற்போது ரூ.149 என கிடைக்கிறது. அதேபோல் ரூ.499-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.199 எனவும் ரூ.649 என்ற விலைக்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.499 எனவும் ரூ.799-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.649 எனவும் கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது சிறந்த விலைக் குறைப்பை பெற்றுள்ளது. இது இதற்கு முன்பு இல்லாத நடவடிக்கையாகும், நெட்ஃபிளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலை குறையும் என்று தற்போது வரை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி தளத்தில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் இது விரைவாக வளர்வதற்கான நேரம் ஆகும் என கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix Might Charging Extra Money to Sharing Your Account ID and Password
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X