Home
News

நெட்பிளிக்ஸ் பரிதாபம்: ஒரே அறிவிப்பு., 2 லட்சம் சந்தாதாரர்கள் க்ளோஸ்- புகுந்து ஆட்டையை கலைக்கும் எலான் மஸ்க்!

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்த காலாண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து ஆறு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார்

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார்

ஓடிடி தளங்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகிறது. திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும் குறுகிய காலங்களிலேயே ஏதாவது ஒரு ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது. சினிமா கலெக்ஷனில் ஓடிடி விற்பனையும் தற்போது இணைந்திருப்பது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

சுமார் 2 லட்சம் சந்தாதாரர்கள் இழப்பு

சுமார் 2 லட்சம் சந்தாதாரர்கள் இழப்பு

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்த காலாண்டில் மட்டும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைப் செய்திருப்பவர்கள் தங்கள் யூஸர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பகிர்வதால் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது என எண்ணி யூஸர் ஐடி கடவுச்சொல்லை பகிரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நிறுவனம் அறிவித்தது. மறுபுறம் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ரஷ்யாவில் தனது சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிறுத்தி அறிவித்தது. இது அனைத்துமே வாடிக்கையாளர்களை இழந்ததுக்கு காரணமாக கருதப்படுகிறது.

20 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்

20 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்

அதேபோல் வரும் காலாண்டில் கூடுதலாக 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என தனது பங்குதாரர்களுக்கு நெட்பிளிக்ஸ் கடிதம் அனுப்பி இருக்கிறது. நெட்பிளிக்ஸ் உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்ட்ரீமிங் சேவை வழங்கத் தொடங்கிய ஆறு ஆண்டுகளில் இத்தனை பெரிய வீழ்ச்சி அடைந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மீது உக்ரைன் தொடுத்துள்ள போரை கண்டிக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் தனது சேவையை ரஷ்யாவில் இருந்து திரும்பப் பெற்றது. இதையடுத்து மார்ச் தொடக்கத்தில் மட்டும் 700,000 சந்தாதாரர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. முதல் காலாண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை நெட்பிளிக்ஸ் இழந்ததாக அறிவித்ததையடுத்து அதன் பங்கு மதிப்பு கால் பகுதி அதாவது 25% குறைந்தது.

நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் சரிவு

நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் சரிவு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதன் சந்தாதாரர்களின் தரவரிசை சுருங்குவதை நிறுவனம் வெளிப்படுத்தியதை அடுத்து, நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் செவ்வாயன்று அவற்றின் மதிப்பில் கால் பகுதியை இழந்தன. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் இந்த காலாண்டில் 1.6 பில்லியன் டாலராக இருக்கிறது. இது கடந்த காலாண்டில் 1.7 பில்லியன் டாலராக இருந்தது. 10 ஆண்டுகளில் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் இவ்வளவு வீழ்ச்சியை கண்டது இதுவே முதன்முறை என நெட்பிளிக்ஸ் போட்ட பதிவுக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். சந்தாதாரர்களின் இழப்பு காரணமாக நெட்பிளிக்ஸ் பங்கு விலை வீழ்ச்சிடைந்து இருக்கிறது.

எலான் மஸ்க் தெரிவித்த கருத்து

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை இழந்ததற்கான காரணம் குறித்து டுவீட் செய்திருக்கிறார். அந்த டுவிட்டர் பதிவில், "நெட்பிளிக்ஸ்-ல் சமூகநீதி, மனித உரிமைகளுக்கு ஆதரவான குரல்கள் அதிகமானதால் நெட்பிளிக்ஸ் பார்க்க முடியாததாகிவிட்டது" என குறிப்பிட்டுள்ளார். மஸ்க் ஆங்கிலத்தில் வோக் மைன்ட் (Woke Mind) என குறிப்பிட்டுள்ளார். இதில் வோக் என்ற வார்த்தைக்கு விளக்கம் பார்க்கையில், அது சமூக நீதி, மனித உரிமைகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை குறிக்கும். "The woke mind virus is making Netflix unwatchable." என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். அதில் சமூக விழிப்புணர்வு வைரஸ் நெட்பிளிக்ஸ் தளத்தை பார்க்க முடியாததாகி விட்டது என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Netflix Lost 2 Lakhs Subscribers in First Quarter: Here What Elon Musk Tweet About it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X