ஆயுதத்தை கையில் எடுத்த Netflix.. வரிசைக்கட்டி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள்! காரணம் இதோ!

|

ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக Netflix, Amazon Prime, Disney+ Hotstar போன்ற முன்னணி ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும் குறுகிய காலங்களிலேயே ஏதாவது ஒரு ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

விளம்பர ரீசார்ஜ் திட்டங்கள்

விளம்பர ரீசார்ஜ் திட்டங்கள்

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை குறிப்பிட்ட நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறது. நீண்ட நாட்களாக இந்த திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு ஓடிடி வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஒரு வழியாக தற்போது இதுகுறித்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது.

விளம்பர திட்டங்களின் விலை

விளம்பர திட்டங்களின் விலை

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் விளம்பர திட்டங்களின் விலை $6.99 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

15 முதல் 30 வினாடிகள் விளம்பரம்

15 முதல் 30 வினாடிகள் விளம்பரம்

Basic with Ads திட்டங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு முதல் ஐந்து விளம்பரங்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு விளம்பரங்களும் 15 முதல் 30 வினாடிகள் நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. உலகளாவிய விளம்பர திட்டங்களுக்கு என நெட்பிளிக்ஸ் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சாதனங்களில் இது கிடைக்காது

குறிப்பிட்ட சாதனங்களில் இது கிடைக்காது

திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் 720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் வரையறுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் இந்த திட்டத்தில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் லாக் (பூட்டு) ஐகான் உடன் காட்டப்படும். அதேபோல் ஆப்பிள் டிவி உள்ளிட்ட சில சாதனங்களில் விளம்பர அடுக்கு திட்டங்கள் வேலை செய்யாது எனவும் கூறப்படுகிறது.

டிஸ்னி ப்ளஸ் விலையை விட குறைவு

டிஸ்னி ப்ளஸ் விலையை விட குறைவு

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிஸ்னி ப்ளஸ் இன் விளம்பர அடுக்கு ரீசார்ஜ் திட்டம் $7.99 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்ட விலை $6.99 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ் திட்டத்தின் விலையை விட டிஸ்னி ப்ளஸ் விலை $1 அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வாடிக்கையாளர்களை அதிகரிக்கத் திட்டம்

வாடிக்கையாளர்களை அதிகரிக்கத் திட்டம்

Netflix சமீப காலமாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இழந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து நிறுவனம் அதிரடி நடவடிக்கையை கையில் எடுக்கத் தொடங்கியது. Netflix வெளியிட்ட தகவலின்படி, பாஸ்வேர்ட் பகிர்வு பயனர்களின் இழப்புக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. இதை பலரும் பணம் சம்பாதிக்க செய்கின்றனர். எனவே இனி யாரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிர முடியாது என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் கணக்கு "உங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படக்கூடாது" என நிறுவனக் கொள்கை கூறுகிறது. இந்த கொள்கையை மீறும் பயனர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்க நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

மாதம் 500 ரூபாயா?

மாதம் 500 ரூபாயா?

அதேபோல் Netflix புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் மலிவு விலையில் விளம்பர சந்தா திட்டங்களை வெளியிடுகிறது. நெட்பிளிக்ஸ் விளம்பரத் திட்ட விலை $6.99 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு சுமார் ரூ.500 ஆகும். மாதம் 500 ரூபாயா என்று ஆச்சரியப்பட வேண்டாம். அமெரிக்கா நிலை வேறு, இந்தியா நிலை வேறு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய விலை என்ன?

இந்திய விலை என்ன?

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை மொபைல் திட்டம் ரூ.149 என வசூலிக்கப்படுகிறது. எனவே நெட்ஃபிளிக்ஸ் விளம்பர திட்டங்கள் விலை இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாதாந்திர திட்டம் விலை ரூ.149 ஆக இருக்கும் காரணத்தால், விளம்பர திட்டங்களின் விலை ரூ.100க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix launched Ad-Supported Recharge Plan at a Lower Price than Disney+ Hotstar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X