Netflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா? அப்போ இதை உடனே படியுங்கள்!

|

தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. அப்படி இந்த OTT ஸ்ட்ரீமிங் தளங்களில் அக்கௌன்ட் இல்லாத பயனர்களுக்கு நெட்பிலிக்ஸ் ஒரு நம்ப முடியாத சலுகையை வழங்கியுள்ளது.

நம்பினால் நம்புங்கள்!

நம்பினால் நம்புங்கள்!

ஆம், நம்பினால் நம்புங்கள்! நெட்பிலிக்ஸ் சேவை வேண்டும் என்று நினைக்கும் பயனர்களுக்கு வெறும் ரூ.5 செலவு செய்தால் போதும், உங்களுக்கான சேவையை உடனே நெட்பிலிக்ஸ் தளத்தில் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வெறும் 5 ரூபாய்க்குத் திட்டமா? எத்தனை நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ற விபரத்தைக் கீழே படிக்கவும்.

வெறும் ரூ.5-க்கு நெட்பிலிக்ஸ் திட்டமா?

வெறும் ரூ.5-க்கு நெட்பிலிக்ஸ் திட்டமா?

நெட்பிலிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கப் பல புதிய சலுகைகளைச் சோதனை செய்து வருகிறது. அப்படி, நெட்பிலிக்ஸ் சோதனை செய்துவரும் சலுகைகளில் ஒரு புதிய சலுகை தான் இந்த ரூ.5 திட்டம். இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு வெறும் ரூ.5 க்கு ஒரு மாத கால சேவையை நெட்பிலிக்ஸ் இந்த திட்டத்தின் கீழ் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

ஆம், மக்களே வெறும் ரூ.5 க்கு நெட்பிலிக்ஸ் சந்தா இனி கிடைக்கவுள்ளது. ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவையான நெட்பிலிக்ஸ் உடன் இணையும் பயனர்கள் அவர்களின் முதல் மாத சந்தாவை வெறும் ரூ.5 க்கு பெறலாம் என்று நெட்பிலிக்ஸ் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த சலுகை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்காது என்றும், இதற்கான சில நிபந்தனைகளை நெட்பிலிக்ஸ் முன்வைத்துள்ளது.

அனைவருக்கும் கிடையாது! ஆனால், இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்

அனைவருக்கும் கிடையாது! ஆனால், இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்

நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் நிபந்தனை படி, முதல் முறையாக நெட்ஃபிக்ஸ் சேவையுடன் இணையும் முதல் முறை சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த 5 ரூபாய் சலுகை அணுகக் கிடைக்கும் என்று நெட்பிலிக்ஸ் தெளிவாகக் கூறியுள்ளது. குறிப்பாக இதற்கு முன் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் நெட்பிலிக்ஸ் பயன்படுத்தாத பயனர்களுக்கு மட்டுமே இந்த ரூ.5 திட்டம் வழங்கப்படும்.

அடுத்த இடி., மார்ச் 1 முதல் அந்த வங்கி ஏடிஎம்களில் ரூ.2000 போடவும் முடியாது., எடுக்கவும் முடியாது!

ரூ.5 செலுத்தி உங்கள் சந்தாவை தேர்வு செய்யுங்கள்

ரூ.5 செலுத்தி உங்கள் சந்தாவை தேர்வு செய்யுங்கள்

நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின், இந்த புதிய ரூ.5 சலுகையின் கீழ், பயனர்கள் எந்தவொரு நெட்பிலிக்ஸ் திட்டத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம். நெட்பிலிக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.199 மொபைல் திட்டம், ரூ.499 திட்டம், ரூ.649 ஸ்டாண்டர்ட் திட்டம் மற்றும் ரூ.799 பிரீமியம் திட்டம் என்ற நான்கு திட்டங்களை வைத்துள்ளது. இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து வெறும் ரூ.5 செலுத்தி உங்கள் சந்தாவைப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாம் மாதம் முதல் அசல் கட்டணம்

இரண்டாம் மாதம் முதல் அசல் கட்டணம்

நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் முதல் மாத கட்டணமாக மட்டுமே ரூ.5 வசூலிக்கப்படும். அதற்குப் பின்னர் வரும் இரண்டாம் மாதம் முதல் நீங்கள் தேர்வு செய்த சந்தா திட்டத்தின் அசல் கட்டண விலை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத் தான், கடந்த டிசம்பரில் இந்தியா மற்றும் பிற சந்தைகளில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் தனது ஒரு மாத இலவச சோதனை சலுகையை ரத்து செய்ததது என்று இப்போது விளங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Netflix Is Running New Promo Discount In India That Offers Rs.5 For First Month Subscription : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X