Home
News

நெட்ஃபிக்ஸ் ஹவுஸ் என்று ஸ்டோர் விரைவில் திறக்கப்படுகிறது.. முதல் ஹவுஸ் எங்கே எப்போது திறக்கப்படுகிறது?

நெட்ஃபிக்ஸ் (Netflix) தனது ஆன்லைன் ஓவர்-தி-டாப் (OTT) சேவையுடன் சேர்த்து, இனி விரைவில் ஆப்லைன் நெட்ஃபிக்ஸ் ஸ்டோர் வழியாக அதன் ரசிகர்களை வியப்படைய வைக்க திட்டமிட்டுள்ளது. ஆம், நெட்ஃபிக்ஸ் அதன் முதல் அரங்கம் அல்லது பிஸிக்கல் ஸ்டோரை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்பாராத ஒரு வித்தியாசமான நிகழ்வுகளில், நெட்ஃபிக்ஸ் அமெரிக்கா முழுவதும் சில்லறை விற்பனைத் தளங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த தளம் ஒரு சிறிய திரைப்பட அரங்கம் போல செயல்படும். ஆனால், இங்கு நெட்ஃபிக்ஸ் தொடர்பான மூவிஸ், சீரிஸ், கேம்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே இடம்பெறும் என்று நெட்ஃபிக்ஸ் கூறியுள்ளது.

நெட்ஃபிக்ஸ் ஹவுஸ் என்று ஸ்டோர் விரைவில் திறக்கப்படுகிறது..

நெட்ஃபிக்ஸ் ரசிகர்கள் இங்கு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்து உண்ணலாம். பிரபலமான நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய போஸ்டர்ஸ், ஆக்ஷன் பிகர்ஸ் போன்ற டிவி பொருட்களை வாங்க அனுமதிக்கும். ஸ்க்விட் கேம் போன்ற சில விளையாட்டு போட்டிகளையும் ரசிகர்கள் விளையாடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகத்தின் மிகவும் பிரபலமான டிஸ்னிலேண்ட் போன்ற போக்கை இந்த நெட்ஃபிக்ஸ் ஸ்டோர்கள் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிஸ்னிலேண்ட் போல் பெரியளவில் இல்லாமல் இது சிறியதாகவும் இன்னும் பல இடங்களில் ரசிகர்களால் எளிதில் அணுக கூடிய வகையில் நிறுவப்படும் என்று நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது.

நெட்ஃபிக்ஸ் (Netflix) இன் நுகர்வோர் தயாரிப்புகளின் VP, ஜோஷ் சிமோம், இந்த ஸ்டோர்கள் "Netflix House" என்று பெயரிடப்படும் என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) இடம் கூறியுள்ளார். முதல் இரண்டு அரங்குகள் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Netflix தனது கடைகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் நிறுவனத்தால் இது மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

நெட்ஃபிக்ஸ் ஹவுஸ் என்று ஸ்டோர் விரைவில் திறக்கப்படுகிறது..

நெட்ஃபிக்ஸ் பல ஆண்டுகளாக பல பாப்-அப் அனுபவங்களை அதன் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. தி குயின்ஸ் பால்: எ பிரிட்ஜெர்டன் எக்ஸ்பீரியன்ஸ் (The Queen's Ball: A Bridgerton Experience) என்பது பிரபலமான ஷோண்டலாண்ட் கால நாடகத்தின் (Shondaland period drama) அதிவேக அனுபவமாக அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் உள்ள 10 நகரங்களுக்கு பயணித்த ஒரு நிகழ்வாகும்.

நெட்ஃபிக்ஸ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உலகில் ரசிகர்கள் எவ்வளவு தங்களை மூழ்கடிக்க விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம், மேலும் அதை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம் என்பதைப் பற்றி நெட்ஃபிக்ஸ் நிறைய யோசித்து வருகிறது என்று சைமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நெட்ஃபிக்ஸ் ஹவுஸில் பிரபலமான தொடர்கள் மற்றும் துரித உணவு மற்றும் உயர்தர உணவகங்களின் அடிப்படையில் டிக்கெட்டு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து பார்க்கலாம். நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இன்னும் இந்த முயற்சிக்கான சாத்தியமான இடங்களைத் தேடி வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், நெட்ஃபிக்ஸ் ஹவுஸ் முதலில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தோன்றும் என்று எதிர்பார்க்கலாம். அதனை தொடர்ந்து, நெட்ஃபிக்ஸ் ஹவுஸ் அரங்கம் மற்ற நாடுகளிலும் விரிவால் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நெட்ஃபிக்ஸ் ஹவுஸ்கள் முதலில் மும்பை அல்லது பெங்களூரு பகுதிகளில் திறக்கப்படலாம் என்று வதந்திகள் லீக் ஆகி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Netflix is opening physical stores named Netflix House soon in US and Canada
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X