Home
News

Netflix இல் குவியும் புது சீரீஸ், புது படங்கள்... 3 மாதங்களுக்கு இலவச சந்தாவை கொடுக்கும் 2 Jio திட்டங்கள்!

சோஷியல் மீடியா மற்றும் ஆன்லைன் சமூகங்களில் மட்டுமின்றி ஊரெல்லாம் கூட நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 குறித்த பேச்சுக்கள் தான் அடிபடுகின்றன. ஓவர் ஹைப் இருக்கத்தானே செய்யும் - கடைசியாக 2022 ஆம் ஆண்டில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4 க்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் சீசன் 5 வந்துள்ளது

போதாக்குறைக்கு 5வது சீசன் ஆனது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரீஸின் கடைசி சீசன் வேறு! ஒருவேளை ​​நீங்களும் இந்த வெப் சீரீஸை இலவசமாகப் பார்க்க விரும்பினால், உங்களிடம் ஜியோ சிம் கார்டு இருந்தால், வெவ்வேறு விலையில் உள்ள 2 திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை பெறலாம்.

3 மாதங்களுக்கு Netflix இலவச சந்தாவை கொடுக்கும் 2 Jio திட்டங்கள்!

1. ஜியோ ரூ.1299 திட்டம்: இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய "வழக்கமான" நன்மைகளை வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) உடன் சேர்த்து 3 மாதங்களுக்கான இலவச நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தாவையும் (Netflix Mobile Subscription) வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் எந்த வரம்பும் இல்லாமல் ட்ரூ 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் " லோ டேட்டா" அறிவிப்பை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு பிடித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்ட்ரீம் செய்யலாம். எல்லாவற்றை விட முக்கியமாக ரூ.1299 திட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கான இலவச கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் (Google Gemini Pro Subscription) கிடைக்கும்.

2. ஜியோ ரூ.1799 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

கூடவே இது ஜியோஹோம் 2 மாத இலவச சோதனையையும் வழங்குகிறது. டிவி அல்லது லேப்டாப் வழியாக வெப் சீரீஸ் மற்றும் மூவீஸ் பார்க்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான திட்டமாகும். ஏனெனில் இது மூன்று மாதங்களுக்கு ஸ்டாண்டர்ட் நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. மேலும் இது ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடனும் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த திட்டத்துடன் கூகுள் ஜெமினி ப்ரோ அணுகலும் கிடைக்கும்.

ஒருவேளை உங்களுக்கு ஓடிடி நன்மை தேவை ஆனால் அதில் நெட்பிளிக்ஸ் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, அதே சமயம் ரூ.1000 க்கு மேலான திடமாக இருக்க கூடாது, மிகவும் மலிவான விலைக்கு இருக்க வேண்டும் என்றால்.. அதற்கும் ஜியோவிடம் ஒரு திட்டம் உள்ளது.

அது ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இதுவொரு ஆட்-ஆன் பேக் ஆகும். அதாவது பிரதானமாக டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் ஒரு பிளான் ஆகும். இதன்கீழ் கிடைக்கும் டேட்டாவிற்கு மற்றும் இதர நன்மைகளுக்கு 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த திட்டத்திற்க்கென சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் கிடையாது. இதை ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்திற்கு மேலாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.

ரூ.100-ன் கீழ் உங்களுக்கு மொத்தம் 5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா உங்கள் அக்கவுண்டில் மொத்தம் 30 நாட்களுக்கு இருக்கும். இதை நீங்கள் 30 நாட்களுக்கு சிறிது சிறிதாவும் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் ஹெவி டேட்டா பயன்பாட்டிற்கு ஏற்ப ஒரே நாளில் கூட காலி செய்யலாம். ஆகையால் இந்த திட்டத்தின் கீழ் "சிறப்பான, தரமான" 3 கூடுதல் நன்மைகளை ஜியோ வழங்குகிறது.

முதலாவதாக - 30 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை (மொபைல் / டிவி) கிடைக்கும். இரண்டாவதாக தகுதியுள்ள பயனர்களுக்கு ஜியோ கோல்டில் 1% கூடுதல் தங்கம் கிடைக்கும். இந்த சலுகையை பெற +91-8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் கோரலாம். மூன்றாவதாக ஜியோஹோம் சேவையின் கீழ் புதிய கனெக்ஷனில் 2 மாத இலவச சோதனையை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Netflix Is Filling With New Web Series Jio Users Can Watch It Free By Recharging These 2 Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X