Home
News

Netflix அதிரடி.. முழுமையான இலவச Netflix சந்தா.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? லாபத்தை பெருக்க புது ஐடியா..

நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் அதன் நெட்ஃபிலிக்ஸ் சேனலுக்கான சந்தாவை முழுமையாக இலவசமாக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் இப்படி ஒரு செய்தி வெளிவந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் உள்ள காஸ்ட்லீ OTT சந்தா (India's Costliest OTT Subscription) என்றால், நாம் நெட்ஃபிலிக்ஸ் சந்தாவை (Netflix subscription) குறிப்பிடலாம். காரணம், மற்ற தளங்கள் எல்லாம் அரையாண்டு, முழு ஆண்டு சேவைகளை குறைந்த விலையில் வழங்கி வருகையில், நெட்ஃபிலிக்ஸ் மட்டுமே மாதாந்திர சந்தாவை வழங்குகிறது.

நெட்ஃபிலிக்ஸ் இன் அதிகபட்ச சந்தாவாக (Netflix subscription price) அதன் Premium 4K + HDR சந்தா திகழ்கிறது. இதன் மாத கட்டணம் ரூ.649 ஆக இருக்கிறது. மாத கட்டணம் ரூ. 649 என்றால் ஒரு வருடத்திற்கு சுமார் 7788 ரூபாய் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் வருடாந்திர கட்டணமாக ரூ. 2000 வரை வசூலிக்கப்படுகிறது.

Netflix அதிரடி.. முழுமையான இலவச Netflix சந்தா.. யாருக்கு கிடைக்கும்?

முழுமையான இலவச Netflix சந்தாவை அறிமுகம் செய்ய முடிவா? உண்மை என்ன?

இதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இப்போது பல நாடுகளில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பல விலை பிரிவில் பல விதமான சந்தாவை வழங்கி வருகிறது. இதற்கு நடுவே விளம்பரம் (Netflix ad subscription) மற்றும் விளம்பரம் இல்லாத தனித்தனி சந்தாக்களை வெவ்வேறு கட்டணத்துடன் வழங்கி வருகிறது. அதிக விலை காரணமாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது.

சில நாடுகளில், பயனரக்ளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதினால், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அதிரடியாக அதன் சந்தாவை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கென்யாவில் (Kenya) முழுமையான இலவச சந்தாவை வழங்கி வந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் முடிவுக்கு கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இப்போது இலவச சந்தாவை பரிசீலிப்பது ஒரு பெரிய படியாகும். ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மிகப் பெரிய சந்தைகளில் இலவச சந்தா சேவையை வழங்க நெட்ஃபிலிக்ஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள சந்தாதாரர்கள் அத்தகைய சலுகைக்கு வேட்பாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

லாபத்தை பெருக்க புது Netflix ஐடியா:

இருப்பினும், இந்த நேரத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் Netflix அதன் இலவச சந்தாவை அறிமுகம் செய்யாது என்று கூறப்பட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் இன் இந்த புதிய இலவச சந்தா முயற்சி தொடங்கப்படுவது இன்னும் அதிகமான சந்தாதாரர்களைப் பதிவுசெய்ய உதவும் என்பதில் கட்டாயமாக சந்தேகமில்லை. இலவச சந்தா பயனர்கள் கட்டாயமாக விளம்பரங்களை பார்க்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது.

பயனர்கள் விளம்பரங்களை பார்வையிடுவதன் மூலம் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அதற்கான வருவாயை ஈட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவேபல OTT தளங்களில் விளம்பரங்கள் மூலம் வருவாய் காணும் திட்டங்கள் பின்பற்ற படுகிறது. ஆனால், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் மட்டுமே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரங்களே இல்லதாக ஒரு தளமாக திகழ்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Netflix Is Considering Completely Free Version Of The Service In Few Markets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X