Netflix பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: நீங்கள் எதிர்பார்த்த புதிய வசதி அறிமுகம்.!
தற்போது தியேட்டர் சென்று படம் பார்ப்பதை விட அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் படம் பார்ப்பவர்கள் தான் அதிகம். குறிப்பாக இந்த ஓடிடி ஆப்ஸ்கள் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு கூட நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். அதேபோல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் ஒரு சில தொடர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

புதிய ஆடியோ தொழில்நுட்பம்
இந்நிலையில் Netflix தளத்தில் ஒரு புதிய ஆடியோ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் தளத்தில் 5.1 சர்ரவுண்டு சவுண்டு, டால்பி அட்மோஸ் போன்றவையுடன் படம் பார்ப்பது ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும். ஆனால் வெறும் ஸ்டீரியோஸ்பீக்கர் வசதியுடன் இருப்பவர்களால், இந்த அனுபவத்தை பெற முடியாமல் உள்ளது.

சென்ஹைசர் நிறுவனம்
எனவே இதை மாற்றும் வகையில் சென்ஹைசர் நிறுவனத்துடன் இணைந்து ஆம்பியோ 2 சேனல் ஸ்பேஸல் ஆடியோ தொழில்நுட்பத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாதாரண ஆடியோ செட் அப்
குறிப்பாக ஆம்பியோ 2 சேனல் ஸ்பேஸல் ஆடியோ தொழில்நுட்பத்த்தின் முலம் இனி சாதாரண ஆடியோ செட் அப் வைத்திருப்பவர்களும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை பெறலாம்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சாதாரணமான டிவியில் இருக்கும் ஸ்பீக்கர், ஸ்டீரியோ சிஸ்டம்கள், ஹெட்போன்கள், டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களில் கூட டால்பி அட்மோஸுக்கு இணையான ஆடியோ அனுபவம் பெறமுடியும்.

ஆம்பியோ தொழில்நுட்பம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆம்பியோ தொழில்நுட்பம் ஆனது ஸ்டீரியோ அவுட்புட்டுக்கு பதிலாக, இரண்டு சேனல் ஏ.டி.எம் அல்லது ஐ.ஏ.பி ஆடியோ பார்மெட்டாக மாற்றி வழங்கிவிடும். எனவே இதன்மூலம் எந்தவொரு ஸ்டீரியோ ஸ்பீக்கர் அல்லது ஹெட்போனிலும், டால்பி அட்மோஸ்அல்லது எம்பெக் எச் ஆடியோக்கு இணையான அனுபவத்தை பெறலாம்.

புதிய முயற்சி
அதேபோல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய சந்தாதாரர்களை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்தால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.

பெரிய சரிவை சந்தித்தது
குறிப்பாக நெட்பிளிக்ஸ் தற்போது 222 மில்லியன் சந்தாதாரர்கள் உடன் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமாக இருக்கிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டின்முதல் காலாண்டில் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பெரிய சரிவை சந்தித்தது. இது நிறுவனத்தின் வருவாயை மட்டும் பாதிக்கவில்லைஊழியர்கள் வேலையை விட்டு விழகும் நிலையையும் ஏற்படுத்தியது. எனவே தான் இழப்பு பாதிப்பில் இருந்து வெளிவர நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications