இது தான் நெட்ஃப்ளிக்ஸ், நீங்க வாங்க போறீங்களா.??

By Meganathan
|

இந்தியா உட்ப்பட சுமார் 130 சந்தைகளில் நெட்ஃப்ளிக்ஸ் துவங்கப்பட்டுள்ளது. தற்சமயம் சீனாவை தவிற உலகின் முக்கிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் சேவை துவங்கப்பட்டு விட்டது, இதற்கான மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என நெட்ஃப்ளிக்ஸ் சிஇஓ துவக்க விழாவில் தெரிவித்தார்.

நெட்ஃப்ளிக்ஸ் என்பது தொலைகாட்சி தொடர் மற்றும் வீடியோ போன்றவைகளை அதிக தரத்தில் பார்க்க வழி செய்யும் ஓர் இணைய சேவை ஆகும். இதன் மூலம் இணையத்தில் கிடைக்கும் சில சமயங்களில் கிடைக்காத வீடியோ போன்றவைகளையும் அதிக தரத்தில் பார்க்க முடியும்.

  வெளியீடு

வெளியீடு

தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இசை மற்றும் ஆன்லைன் வீடியோ தொகுப்பு போன்றவை நெட்ஃப்ளிக்ஸ் சேவையில் சுமார் 190 நாடுகளில் தற்சமயம் கிடைக்கின்றது.

கட்டணம்

கட்டணம்

இந்த சேவைக்கான கட்டணம் 1 எஸ்டி திரைக்கு இந்தியாவில் மாதம் ஒன்றிற்கு ரூ.500 இல் இருந்து துவங்குகின்றது. இதுவே மாதம் ரூ.650 செலுத்தினால் எச்டி தரத்தில் வீடியோக்களை இரு எஸ்டி திரைகளில் பார்க்க முடியும், மேலு்ம ரூ.800 செலுத்தினால் 4கே வீடியோக்களை சுமார் 4 திரைகளில் கண்டுகளிக்க முடியும்.

பதிவு

பதிவு

இந்த சேவையை பெற நெட்ஃப்ளிக்ஸ் இணையதளம் அல்லது செயலிகளை ஐஓஎஸ், விண்டோஸ் அல்லது மற்ற இயங்குதளங்களை கொண்டு பதிவு செய்ய முடியும்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

நெட்ஃப்ளிக்ஸ் மூலம் எச்டி தரத்தில் இருக்கும் வீடியோக்களை ஒரு மணி நேரத்திற்கு ஸ்ட்ரீம் செய்ய 3ஜிபி டேட்டா பயன்படுத்தும் என்றும் எஸ்டி வீடியோக்களுக்கு 300 முதல் 700 எம்பி டேட்டா பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

தற்சமயம் வரை உலகம் முழுக்க சுமார் 70 மில்லியன் பயனாளிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதோடு கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வரை நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்து இதன் வாடிக்கையாளர்கள் சுமார் 12 பில்லியன் மணி நேரத்திற்கு வீடியோவினை பார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு

தொகுப்பு

உலகளவில் பிரபலமான தொலைகாட்சி தொடர்கள், புதிய திரைப்படங்கள், இசை வீடியோ போன்றவைகளை அதிக தரத்தில் பார்க்க நெட்ஃப்ளிக்ஸ் வழி செய்வதோடு தேவையான இடங்களில் சப்-டைட்டில் எனும் துணைத்தலைப்பையும் செட் செய்ய முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Netflix in India, Here's How You Get It. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X