என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO

|

Cannes Lions விளம்பர விழாவில் பங்கேற்ற Netflix CEO டெட் சரண்டோஸ், நெட்ஃபிளிக்ஸ் பட்டியலில் விளம்பரத்துடன் கூடிய ஒரு மலிவு விலை பிளான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் மலிவு விலை பிளான் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைமஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

விளம்பர ஆதரவு சந்தா திட்டங்கள் உறுதி

விளம்பர ஆதரவு சந்தா திட்டங்கள் உறுதி

Netflix இன் விளம்பர ஆதரவு சந்தா திட்டங்கள் குறித்த தகவல் பல நாட்களாக உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது தகவல் அல்ல உறுதி என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cannes Lions விளம்பர விழாவில் ஒரு நேர்காணலில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் பங்கேற்றார். அதில், பிளான் பட்டியலில் விளம்பர ஆதரவுடன் கூடிய ஒரு மலிவு விலை திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக உறுதிப்படுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தி நியூயார்ட் டைமஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

புதிய சந்தாதாரர்களை இணைக்கும் முயற்சி

புதிய சந்தாதாரர்களை இணைக்கும் முயற்சி

Netflix நிறுவனம் புதிய சந்தாதாரர்களை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாதாந்திர ஊதியம் பெறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நெட்ஃபிளிக்ஸ் பெரும் சரிவை சந்தித்து வருவதாக கணித்துள்ளது. இது நிறுவனத்தின் வருமான வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை சரி செய்யும் வகையில் நிறுவனம் விளம்பர சந்தாவுடன் கூடிய மலிவு விலை திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி இருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் தகவல்

நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் தகவல்

இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் Cannes Lions விளம்பர விழாவில் கூறுகையில், "நாங்கள் ஒரு பெரிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இழந்துவிட்டோம். 'ஏய், நெட்ஃபிளிக்ஸ் எனக்கு குறைந்த விலை திட்டம் வேண்டும், விளம்பரங்களை நான் பார்க்கத் தயார்' என கூறும் நபர்களுக்காக ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளோம்". இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் இல் விளம்பரத்துடன் கூடிய ஒரு மலிவு விலை திட்டம் வருவது உறுதி அதன் சிஇஓ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ்

மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ் தற்போது 222 மில்லியன் சந்தாதாரர்கள் உடன் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமாக இருக்கிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பெரிய சரிவை சந்தித்தது. இது நிறுவனத்தின் வருவாயை மட்டும் பாதிக்கவில்லை ஊழியர்கள் வேலையை விட்டு விழகும் நிலையையும் ஏற்படுத்தியது. இந்த இழப்பு பாதிப்பில் இருந்து வெளிவர நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ் இன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

நெட்ஃபிளிக்ஸ் இன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

The Variety அறிக்கையின் படி, நிறுவனம் துரதிருஷ்டவசமாக 300 ஊழியர்களை பணியில் இருந்து விடுவித்தது. இந்த பெரும்பாலான வேலை இழப்புகள் அமெரிக்காவில் நடந்தது. நெட்ஃபிளிக்ஸ் இல் மொத்தம் 11,000 பணியாளர்கள் இருப்பதாக வெரைட்டி அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகரிக்கும் ஓடிடி பயன்பாடுகள்

அதிகரிக்கும் ஓடிடி பயன்பாடுகள்

ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும் குறுகிய காலங்களிலேயே ஏதாவது ஒரு ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது.

யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பகிர்ந்தால் நடவடிக்கை

யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பகிர்ந்தால் நடவடிக்கை

ஓடிடி தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்வது உண்டு. இதை தடுப்பதற்கு ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் முன்னதாக ஒரு நடவடிக்கை எடுத்தது. பாஸ்வேர்ட் பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க நெட்ஃபிளிக்ஸ் தயாராகி இருக்கிறது. தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் உறுப்பினர்களுக்கான கட்டணத்தை வசூலிக்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

கூடுதல் பணம் வசூல்

கூடுதல் பணம் வசூல்

நெட்ஃபிளிக்ஸ் கணக்கு "உங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படக்கூடாது" என நிறுவனக் கொள்கை கூறுகிறது. இந்த கொள்கையை மீறும் பயனர்களிடம் கூடுதல் பணம் செலுத்தும்படி நிறுவனம் கோருவதாக அறிக்கைத் தகவல் வெளியானது. அதாவது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல்லை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Netflix Confirms launching Cheap Subscription Plans with Ad-Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X