Netflix பட்ஜெட் விலையில் புதிய திட்டத்தை சோதனை செய்கிறது! விலை என்ன தெரியுமா?

|

Netflix மிகவும் பிரபலமான வீடியோ-ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும், ஆனால் இதன் விலை நிர்ணயம் என்பது மற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகத் தான் இருக்கிறது. விலை அதிகமாக உள்ளதினால் பலரும் இதன் சந்தாவை வாங்க யோசித்து, நண்பர்களுடன் ஒரு ஐடியை ஷேர் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைக் கருத்தில் கொண்டு Netflix நிறுவனம் தற்பொழுது குறைந்த விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வீடியோ ஸ்ட்ரீமிங்

அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் திட்டங்களுடன் ஒப்பிடும்போது நெட்ஃபிலிக்ஸ் திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. நெட்ஃபிலிக்ஸ் இல் உயர் தரத்தில் வீடியோ அனுபவத்தை அனுபவிக்க விரும்பினால் நிச்சயம் அதிகம் தொகை செலுத்தவேண்டும். இருப்பினும், கடந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் மொபைல் பயனர்களுக்காக ரூ. 199 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் மொபைல் போனில் மட்டும் நெட்ஃபிலிக்ஸை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நெட்ஃபிலிக்ஸ் OTT சேவை

இருப்பினும், சில பயனர்களுக்கு இது சிக்கலாகவே இருந்து வந்தது ஆகையால், இந்த சிக்கலை மேலும் தீர்க்க, நெட்ஃபிலிக்ஸ் OTT சேவை இப்போது சிறந்த அம்சங்களுடன் கூடிய மற்றொரு மலிவு திட்டத்தைச் சோதிக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் சோதனை செய்துவரும் அந்த புதை திட்டம் ரூ.349 என்ற விலையில் பயனர்களுக்குக் கிடைக்குமென்று தெரிகிறது.

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

நெட்ஃபிலிக்ஸ் ரூ. 349 சோதனை திட்டம்

நெட்ஃபிலிக்ஸ் ரூ. 349 சோதனை திட்டம்
நெட்ஃபிலிக்ஸ் இந்த புதிய திட்டத்திற்கு மொபைல் பிளஸ் என்று பெயரிட்டுள்ளது. இந்த சோதனை திட்டத்தின் கீழ், நெட்ஃபிலிக்ஸ் பயனர்களுக்கு ரூ. 199 மொபைல் மட்டும் திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை விடக் கூடுதல் நன்மைகள் மலிவு விலை கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் நன்மையாக ரூ. 199 திட்டத்தில் கிடைக்காத எச்டி ஸ்ட்ரீமிங் தரம் இந்த ரூ. 349 திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் மொபைல் மட்டுமின்றி கூடுதல் சாதனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

புதிய திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சாதனமாகக் கணினி

இந்த புதிய திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சாதனமாகக் கணினி அல்லது லேப்டாப்பை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த திட்டம் வரவேற்பு அம்சமாக இருக்கும், இதன் பொருள் இனி இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர், அவர்களின் ஒரு ஸ்மார்ட்போனில் மட்டுமே நெட்ஃபிலிக்ஸ் பார்ப்பதற்குக் கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள், அதற்குப் பதிலாக மொபைல் போனுடன் சேர்த்து லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வழியாக நெட்ஃபிலிக்ஸ் கணக்கைப் பயன்படுத்த முடியும்.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!புதிய சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

30% விலை குறைவுடன் அதிக நன்மை

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட புதிய திட்டத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இத்திட்டம் நெட்ஃபிலிக்ஸின் ரூ. 499 அடிப்படை திட்டத்தை விட 30% விலை குறைவுடன் அதிக நன்மையுடன் வருகிறது. நெட்ஃபிலிக்ஸ் இந்த ரூ. 349 திட்டத்தின் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் இன்னும் அதிக பயனர்களை ஈர்க்க உதவும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix Aims To Attract More Users In India By Providing Rs.349 Plan For Mobile And Laptop : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X