ரூ.100க்கும் குறைவா? Netflix அறிமுகம் செய்யும் புதிய பிளான்- ஆனால் இதுக்கு ஓகே சொல்லனும்!

|

Netflix, சமீப காலமாக விளம்பர அடிப்படையிலான திட்டங்களை அறிமுகம் செய்வது தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் விளம்பர அடிப்படையிலான திட்டத்தை அறிமுகம் செய்தால் அதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் அமெரிக்க விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து புதிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதோடு நெட்ஃபிளிக்ஸ் இன் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்படுகிறது.

மாதத்திற்கு எவ்வளவு கட்டணம்?

மாதத்திற்கு எவ்வளவு கட்டணம்?

Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் விலை என்னவாக இருக்கும் என்பதை வெளியான தகவல் தெளிவுப்படுத்தியுள்ளது.

Netflix விளம்பர அடிப்படையிலான திட்டங்களுக்கு மாதத்திற்கு USD 7 முதல் USD 9 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.559 முதல் ரூ.719 ஆகும்.

ரூ.100 என்று தலைப்பில் குறிப்பிட்டுவிட்ட இங்கே ரூ.559 என குறிப்பிட்டால் எப்படி? என்ற கேள்வி வருகிறதா?. அமெரிக்க கதை வேறு, இந்திய கதை வேறு.

அமெரிக்க கதை வேறு., இந்திய கதை வேறு..

அமெரிக்க கதை வேறு., இந்திய கதை வேறு..

தற்போதுவரை அமெரிக்காவில் நெட்ஃபிளிக்ஸ் 1 மாத திட்டத்திற்கான விலை USD 9.99 (சுமார் ரூ.799), USD 15.49 (சுமார் ரூ.1,239), மற்றும் USD 19.99 (சுமார் ரூ.1,599) என வசூலிக்கப்படுகிறது.

மொபைல், டிவி, இரண்டு மொபைல்கள் என்ற ஸ்க்ரீன்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை மாதாந்திர கட்டணத்தின் விலை இந்த அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

வியூகத்தை தீட்டும் நெட்ஃபிளிக்ஸ்

வியூகத்தை தீட்டும் நெட்ஃபிளிக்ஸ்

கொரோனா தொற்று பரவல் காலத்தின் போது அசுர வளர்ச்சி அடைந்த Netflix நிறுவனம் அதன் பிறகு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதையடுத்து தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்களை வகுக்கத் தொடங்கியது.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் மேற்கொண்ட ஒரு திட்டம் தான் "விளம்பர திட்டம்" ஆகும். நெட்ஃபிளிக்ஸ் சமீபகாலமாக விளம்பர திட்டங்கள் தொடர்பான வியூகத்தை தீட்டி வருகிறது. இந்த திட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிட விளம்பரங்கள்?

ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிட விளம்பரங்கள்?

Netflix நிறுவனத்தின் விளம்பர திட்டங்களை பொறுத்தவரை, ஒரு மணி நேர உள்ளடக்கத்திற்கு சுமார் நான்கு நிமிட விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.

விளம்பரங்கள் மூலமாக வருவாய் ஈட்டும் அதேசமயத்தில் குறைந்த விலை திட்டத்தின் மூலம் சந்தாதாரர்களையும் அதிகரிக்க முடியும்.

ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கும் அதன் காலஅவகாசத்திற்கு ஏற்ப விளம்பரங்கள் நடுநடுவில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கன்டென்களுக்கு மட்டும் விளம்பரம் இல்லை

இந்த கன்டென்களுக்கு மட்டும் விளம்பரம் இல்லை

அதேபோல் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், குழந்தைகள் உள்ளடக்கம் (Kids Content)கள் நடுவில் விளம்பரங்கள் வைக்கப்படாது என்பதை நெட்ஃபிளிக்ஸ் முன்னதாகவே உறுதிப்படுத்திவிட்டது.

குழந்தைகள் தொடர்பான கன்டென்ட்கள் என்பது நாம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தனியாக குழந்தைகளின் நலன் கருதி தேர்ந்தெடுக்கப்படும் தேர்வு ஆகும்.

ஒரிஜினல் திரைப்படங்களிலும் விளம்பரமா?

ஒரிஜினல் திரைப்படங்களிலும் விளம்பரமா?

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் முன்னதாகவே விளம்பரங்கள் தொடர்பான கூட்டாண்மையை அறிவித்துவிட்டது.

நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்களில் குறிப்பிட்டவைகளில் மட்டும் விளம்பரங்களை தவிர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் விளம்பர அடிப்படையிலான திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கட்டணம் எவ்வளவு?

இந்தியாவில் கட்டணம் எவ்வளவு?

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் விளம்பர திட்டங்கள் விலை மாறுபட்டதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை மொபைல திட்டம் ரூ.149 என வசூலிக்கப்படுகிறது.

எனவே நெட்ஃபிளிக்ஸ் விளம்பர திட்டங்கள் விலை இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாதாந்திர திட்டம் விலை ரூ.149 ஆக இருக்கும் காரணத்தால், விளம்பர திட்டங்களின் விலை ரூ.100க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Netflix Ad Based Plans: New Plan Price Might be Less than Rs.100 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X