கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து பார்ன் சைட்-க்கு அரசு தடை.!

ஆபாச உள்ளடக்கங்களை அணுகுவதை தடுக்க நேபாள அரசு வலைதளங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

நேபாள அரசு, நாட்டின் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டில் உள்ள இணையதளத்தில் ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுவதையும் பரப்புவதையும் தடை செய்வதாக கடந்த தற்சமயம் அறிவித்துள்ளது.

குற்றவியல் கோட் 2071 மற்றும் 121 பிற பரவலான சட்டங்கள் படி பாலியல், ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தடை செய்வதாக நேபாள அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து பார்ன் சைட்-க்கு தடை.!

மேலும் ஆபாச உள்ளடக்கங்களை அணுகுவதை தடுக்க நேபாள அரசு வலைதளங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதே போன்ற சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபாச  வளைதளங்கள்

ஆபாச வளைதளங்கள்

கடந்த வாரங்களில் கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது என்று நேபாளம் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆபாச வளைதளங்களே மூலக் காரணம் என்று கூறப்படுகிறது.

பள்ளி மாணவி

பள்ளி மாணவி

சமீபத்தில் நேபாளத்தில் உள்ள ஒரு பகுதியில் பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றதற்கு எதிராக எழுந்த எழுச்சியின் போது, நேபாள அரசாங்கம் ஆபாசமான உள்ளடக்கத்தை கொண்ட இணையதளத்தை தடை செய்ய நேரிட்டது

ஆராய்ச்சிகள்

ஆராய்ச்சிகள்

இது சரி, இது தவறு, இது சாத்தியம், இது சாத்தியமில்லை - என்று நாம் நமக்கு தோன்றியதையெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் மறுபக்கத்தில் யதார்த்தம், நிதர்சனம் என்று ஒன்று உள்ளது, அவைகளை அறிவியல் மற்றும் அதனை அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் தான் வெளிக்கொணர முடியும்.

'பார்னோ கிராஃபி'

'பார்னோ கிராஃபி'

அப்படியாக 'பார்னோ கிராஃபி' (Pornography) எனப்படும் பாலுணர்வுக் கிளர்ச்சியம் என்பது ஒருவகை போதை என்றும், அது பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு தூண்டுதல் காரணமாக திகழ்கிறது என்றும், அது ஒரு அபாயகரமான பாலியல் உறவுகளை ஏற்படுத்தி மனித உறவுகளை சிதைக்கும் என்றும் பெரும்பாலோனோர்களால் நம்பப்படுகிறது.

நேர்மறையான மனப்பான்மை

நேர்மறையான மனப்பான்மை

பார்ன் அடிக்ஷன் (Porn Addiction) என்பது நாம் நினைப்பது போல ஒரு போதையே கிடையாது என்கிறது நரம்பியல் ஆராய்ச்சிகள்..உண்மையில் சில மக்களுக்கு பார்னோகிராஃபியை எப்படி கட்டுப்படுத்துவது என்ற பிரச்சனை இருக்கிறது தான் ஆனால் அது போதைத்தனம் அல்ல என்கிறது நரம்பியல் ஆராய்ச்சிகள். கட்டுப்படுத்த முடியாத ஒரு மனநிலையானது அவரவர்களின் சொந்த எதிர்விளைவுகளை உண்டாக்கும் சொந்த பிரச்சனையே தவிர இயற்கையிலேயே ஒரு போதை கிடையாது. பார்னோகிராஃபி பெண்கள் மீது நேர்மறையான மனப்பான்மையை தான் உருவாக்குமே இன்றி எதிர்மறை மனப்பான்மையை உருவாக்குவதில்லை

Best Mobiles in India

English summary
Nepal to ban porn sites to curb rising rape cases: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X