விசாரணைக்கு பிறகு மீண்டும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பிய பிரபலம்!

ஃபாக்ஸ் மற்றும் நேசனல் ஜியோகிராபி ஆகியவை இணைந்து, ஆஸ்ட்ரோபிசிஸ்ட் மற்றும் அறிவியல் செய்திதொடர்பாளரான நீல் டிகிரேசி டைசன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை நடத்தி முடித்து

|

ஊடகங்களின் அறிக்கையின் அடிப்படையில், நீல் டிகிரேசி டைசன் விரைவில் டிவி நிகழ்ச்சிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு மீண்டும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பிய பிரபலம்!

ஃபாக்ஸ் மற்றும் நேசனல் ஜியோகிராபி ஆகியவை இணைந்து, ஆஸ்ட்ரோபிசிஸ்ட் மற்றும் அறிவியல் செய்திதொடர்பாளரான நீல் டிகிரேசி டைசன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை நடத்தி முடித்து, அவர் தொலைக்காட்சிக்கு திரும்புவதற்கு அனுமதியளித்துள்ளன.


நேசனல் ஜியேகிராபி நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த டைசனின் டாக் ஹோ நிகழ்ச்சியான "ஸ்டார் டாக்"ஐ அடுத்த மாதம் முதல் மீண்டும் ஒளிபரப்பவுள்ளது. ஃபாக்ஸ் மற்றும் நேசனல் ஜியோகிராபி இரண்டும் டைசன் தொகுத்து வழங்கும் தொடரான "காஸ்மோஸ் : பாசிஃபில் வோர்ல்டுஸ்" என்ற நிகழ்ச்சியை வருங்காலத்தில் குறிப்பிட்ட தேதியிலிருந்து ஒளிபரப்பவும் திட்டமிட்டு வருகின்றன.

விசாரணைக்கு பிறகு மீண்டும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பிய பிரபலம்!

"விசாரணை முடிவடைந்துள்ளது. மேலும் நாங்கள் '' ஸ்டார்டாக் 'மற்றும்' காஸ்மோஸ் "நிகழ்ச்சிகளுடன் முன்னோக்கி நகர்கிறோம்" என ஃபாக்ஸ் மற்றும் நேசனல் ஜியோகிராபி நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன. "'ஸ்டார் டாக்" நிகழ்ச்சியின் மீதமுள்ள 13 அத்தியாயங்கள் ஏப்ரல் மாதத்தில் நேசனல் ஜியோகிராபி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். "காஸ்மாஸ்" நிகழ்ச்சியை ஒளிபரப்ப பாக்ஸ் மற்றும் நேசனல் ஜியோகிராபி நிறுவனங்கள் தேதியை முடிவுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக வேறெந்த கருத்துக்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைசன் தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாக மூன்று பெண்கள் பொதுவெளியில் குற்றஞ்சாட்டினர். 2009 ஆம் ஆண்டு மாநாட்டின் போது வரம்புமீறியதாக வானியல் ஆய்வாளர் கேடலின் அயர்ஸ் என்பவரும், டைசனின் முன்னாள் உதவியாளர் ஆஷ்லே வாட்சன் என்பவர் டைசன் தனக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பதாக கூறி அவரிடம் இருந்து வெளியேறி பின்னர் குற்றஞ்சாட்டினர்.

விசாரணைக்கு பிறகு மீண்டும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பிய பிரபலம்!

மூன்றாவது பெண்ணான டிசியா அமட், 1984 இல் டைசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், அப்போது இருவரும் ஆஸ்டினில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்கள் எனவும் கூறியுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த டைசன், எவ்வித விசாரணையை வரவேற்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Neil deGrasse Tyson Returning to TV After Fox NatGeo Investigation: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X