இன்டெர்நெட் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

By Meganathan
|

இன்டெர்நெட் சக்திவாய்ந்த கண்டுபிடிப்பாக இருக்கும் ஆனால் அவை சரியான நோக்கில் பயன்படுத்தப்பட்டால். இன்டெர்நெட்டில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாகி வரும் இந்த காலத்தில் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் தான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இதன் மூலம் ஏற்படும் சில நன்மைகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் இன்டெர்நெட் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் சில பாதிப்புகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

No Face to Face Communication

No Face to Face Communication

இன்டெர்நெட்டில் அதிக நேரம் செலவிடுவதால் முகம் பார்த்து தகவல் பறிமாறி கொள்ளும் வழக்கம் குறைந்து விடுகின்றது. நாள் முழுக்க பேஸ்புக் பயன்படுத்துவதால் மாணவர்கள் தங்கள் உறவினர்களுக்கு நேரம் ஒதுக்குவதும் குறைந்து விடுகின்றது.

Thinking Capacity Reduced

Thinking Capacity Reduced

மாணவர்கள் இந்த காலத்தில் பெரும்பாலான வீட்டு பாடங்களை முழுமையாக இன்டெர்நெட்டில் இருந்து எடுத்து விடுவதால் அவ்ரகளின் நினைவாற்றல் பாதிக்கப்படுவதோடு அவர்களை சோம்பேறிகளாகவும் மாற்றிவிடுகின்றது. இந்த பழக்கம் எதிர்காலத்தில் எதற்கெடுத்தாலும் இன்டெர்நெட் பார்க்க வழிவகுக்கும்.

Sexual Exploitation

Sexual Exploitation

ப்ளோரிடா பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை இன்டெர்நெட் பயன்படுத்தும் மாணவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும், பிற்காலத்தில் இது மனநல பிரச்சனையாக மாறி யாரிடமும் கூற முடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Privacy is disturbed

Privacy is disturbed

இன்டெர்நெட் அதிகமாக பயன்படுத்தும் போது மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் இதன் மூலம் ஒருவரின் தனிமை பாதிக்கப்படுவதோடு அவர்களின் சொந்த விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரிய வருகின்றது. மாணவர்கள் இன்டெர்நெட் பயன்படுத்தும் போது அவர்களின் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

Addiction

Addiction

மது மற்றும் போதைக்கு அடுத்தப்படியாக இந்டெர்நெட் தான் அடிமையாக்கும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளது. இன்டெர்நெட் அதிகம் பயன்படுத்தினால் நாளடைவில் அதற்கு அடிமைகளாகி விடுவதோடு இதன் உச்சக்கட்டமாக குறிப்பிட்ட மாணவரின் குடும்பமும் பாதிக்கப்படும்.

Insomnia

Insomnia

இன்டெர்நெட் பயன்படுத்துவதால் பலரும் தங்கள் தூக்கத்தை தியாகம் செய்கின்றனர், இது பல உடல் கூறுகளுக்கு வழி வகுக்கின்றது. ஆய்வுகளின் படி தேவையான அளவு தூக்கமில்லை என்றால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

Moral corruption

Moral corruption

மாணவர்களுக்கு கிடைக்க கூடாத பல விஷயங்கள் அவர்களுக்கு இணையத்தில் கிடைக்கின்றது. 5 வயதுடையவரால் எளிதாக 18 வயதுக்குறியவர்களுக்கான தளங்களில் நுழைய முடிகின்றது. இது பல விதங்களில் மாணவர்களின் மனதை பாதிப்பதோடு பல தீய செய்லகளுக்கும் வழி வகுக்கின்றது.

Cyber bullying

Cyber bullying

மாணவர்கள் இன்டெர்நெட் பயன்படுத்தும் போது ஒரே வயதுடையவர்களுக்கு கொடுமை விளைவிக்க நினைக்கின்றனர், இது ஒரு வகையான மனதளவில் துன்புறுத்துவதாகும். இதன் மூலம் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றது.

Wastage of Time

Wastage of Time

இன்டெர்நெட் பயன்படுத்தும் நேரம் அதிகரித்தால் தானாக மாணவர்கள் படிக்கும் நேரம் குறைந்து விடும், இது பரீட்சை நேரம் நெருங்கும் போது உணரும் மாணவர்கள் மனதளவில் அதிக பாரத்தை எதிர்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.

Inactivity

Inactivity

இந்த காலத்தில் பல மாணவர்களும் அதிகமாக விளையாட்டில் ஈடுபடுவதில்லை, பலரும் சைக்கிள்களை விட பைக்கில் செல்வதையே விரும்புகின்றனர். இதன் மூலம் சிறு வயதில் உடல் பருமன் ஏற்படுகின்றது. நாளடைவில் இது பல உடல் கூறுகளுக்கும் வழி வகுக்கின்றது.

Best Mobiles in India

English summary
Negative Effects of Internet on Students. Here you will come to know Negative Effects of Internet on Students.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X