2 வார முழு ஊரடங்கு: மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் தேவையா? இதோ முழுவிவரம்.!

|

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கைகள் பதிவாகின. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

 வூஹான் நகரிலிருந்து பரவத்

அதாவது சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கியாதாகக் கூறப்படும் இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.

 இரண்டாம் அலை பரவலை

இந்த கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பேருந்து பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வீடு வீடுக்கு மதுபானம் டெலிவரி- ஆன்லைன் ஆர்டர்- வேற வழியில்ல கடை பூட்டினால் கண்டதையும் குடிக்கிறாங்க!இனி வீடு வீடுக்கு மதுபானம் டெலிவரி- ஆன்லைன் ஆர்டர்- வேற வழியில்ல கடை பூட்டினால் கண்டதையும் குடிக்கிறாங்க!

 திருமணம்,

ஆனாலும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணம், மருத்துவ தேவைகள், மரணம் போன்ற முக்கிய காரணங்களுக்கு உரிய அவணங்களுடன்
பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி பொ

குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை இருப்பதால், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் அனுமதி தேவையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சான்றிதழ்கள் அவசியம்

ஆனாலும் திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்றிதழ்கள் அவசியம் என்று காவல்துறைஅறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலியன்களால் 52 முறை கடத்தப்பட்ட பெண்.. இத்தனை புகார்கள் வந்திருக்கா? உண்மையாதான் சொல்றீங்காளா?ஏலியன்களால் 52 முறை கடத்தப்பட்ட பெண்.. இத்தனை புகார்கள் வந்திருக்கா? உண்மையாதான் சொல்றீங்காளா?

வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்

மேலும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இல்லை என்றாலும் கூட, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும். குறிப்பாக வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளத்தில் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

முதல் அலை நாடு முழுவதும் அதிக

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

வி பாதிப்பை ஏற்படுத்து

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள்மக்களை எச்சரித்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Need an e-pass to travel between districts? Here is the full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X