Home
News

திடீரென காணாமல் போன பாட்டி.. சாமர்த்தியமாக டெக்னாலஜி உதவியுடன் கண்டுபிடித்த பேரன்.. நடந்தது இதுதான்..

புதிய தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் காணாமல் போன பாட்டியை ஒரே நாளில் கண்டுபிடித்துள்ளார் அவரது பேரன். இதற்கு அதிநவீன தொழில்நுட்பம் அதாவது டெக்னாலஜி தான் உதவியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது தெற்கு மும்பை பகுதியைச் சேர்ந்த 79 மதிக்கத்தக்க பாட்டி சாயரா பீ தாஜுதீன் முல்லா தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இவர் எப்போதும் போலவே கடந்த டிசம்பர் 3-ம் தேதி நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த பாட்டி வீட்டிற்குத் திரும்பவே இல்லை.

திடீரென காணாமல் போன பாட்டி.. டெக்னாலஜி உதவியுடன் கண்டுபிடித்த பேரன்..

இதனால் அவருடைய குடும்பத்தினர் பதற்றமடைந்து, பாட்டியைத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில் பாட்டியின் பேரனின் புத்திசாலித்தனத்தால், டெக்னாலஜி உதவியுடன் ஒரே நாளில் அவரை கண்டுபிடித்து விட்டனர். அதாவது பாட்டி நடைப்பயிற்சிக்குச் சென்ற போது எதிர்பாரா விதமாக செவ்லி எனும் பகுதியில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

ஜிபிஎஸ் கருவி

இது தெரியாமல் அந்த பாட்டியின் குடும்பத்தினர் அவரை தேடிவந்துள்ளனர். அப்போது தான் அந்த பாட்டியின் பேரனான முகமது வசீம் அயூப் முல்லாவிற்கு, அவரது கழுத்தில் இருந்த நெக்லஸ் நினைவுக்கு வந்தது. இது தங்க நெக்லஸ் (Necklace) மட்டுமல்ல இதில் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டு ஜிபிஎஸ் (GPS) கருவியும் உள்ளது. இந்த கருவியை அவரது பேரன் தான் பொருத்தியிருந்தார்.

உடனடியாக அவர் ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்து, பாட்டியின் இருப்பிடத்தைக் கண்டறிய முயன்ற போது, பரேலில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் பாட்டி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற பாட்டியின் உறவினர்கள், அவரது உடல்நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்தனர். அப்போது பாட்டிக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்பு உறவினர்கள் பாட்டியை தங்களுக்கு அருகாமையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றினர். பாட்டிக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருக்கிறார். குறிப்பாக தொழில்நுட்பத்தை இப்படி கூட பயன்படுத்தலாம் என்பதற்கான சான்று தான் மும்பையில் நடந்திருக்கும் இந்த சம்பவம்.

குறிப்பாக பாட்டியின் பேரன் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு பாட்டியைக் கண்டுபிடித்த சம்பவம் தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி வருகிறது. அதுவும் வயதானவர்களைப் பாதுகாக்க, அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு பொருளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவது மிகவும் நல்லது.

கூகுள் மேப்ஸ்
மேலும் சமீபத்தில் கூகுள் மேப்ஸில் பவர் சேவிங் மோடு (Power Saving Mode) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாம் பயணம் செய்யும் போது கூகுள் மேப்ஸில் பவர் சேவிங் மோடு பயன்படுத்தினால் நமது போனின் பேட்டரியை சேமித்து, பயன்பாட்டு நேரத்தை நீட்டிக்க முடியும்.

திடீரென காணாமல் போன பாட்டி.. டெக்னாலஜி உதவியுடன் கண்டுபிடித்த பேரன்..

பவர் சேவிங் மோடு என்பது எளிமையான கருப்பு-வெள்ளை வரைபட காட்சி ஆகும். இதைச் செயல்படுத்தியதும், வழக்கமான நேவிகேஷன் அனுபவம் மாற்றப்பட்டு கருப்பு-வெள்ளை நிறத்தில் அடிப்படை வழி அறிவுறுத்தல்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். அவசியமில்லாத தகவல்கள் இந்த பவர் சேவிங் மோடு முறையில் காட்டப்படாது. இதன் விளைவாக, நமது போனின் பேட்டரியை அதிகமாகச் சேமிக்க முடியும்.

இந்த பவர் சேவிங் மோடு அம்சம் தற்போது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதவது பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் போன்ற போன்களுக்கு மட்டுமே பவர் சேவிங் மோடு அம்சம் கிடைக்கும். கூடிய விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

photo credits: Pexels

More from GizBot

Best Mobiles in India

English summary
necklace GPS was used by her grandson to locate 79 year old woman who disappeared in Mumbai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X