Home
News

உஷார் மக்களே: பேடியம் அக்கௌன்ட் இல் ரூ.90,000 திருடிய சேவை மைய ஊழியர்.!

நம்மில் பலரும் பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பண பரிமாற்ற செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம்.

நம்மில் பலரும் பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பண பரிமாற்ற செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம்.

இந்தச் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானது என்று நம்பிப் பயன்படுத்தி வந்த நமக்கு, தற்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவம் சற்று ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.

பேடியம் அக்கௌன்ட் ஹேக்

பேடியம் அக்கௌன்ட் ஹேக்

பழுதான ஒரு ஸ்மார்ட் போன்னை, சேவை மையத்தில் சரி செய்து வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில், அவரின் பேடியம் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டு சுமார் ரூ.90,000 வரை திருடப்பட்டுள்ளது. பழுதான மொபைல் போன்னை வைத்து இப்படிப்பட்ட மோசடி நடந்தேறியுள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

மொபைல் போன் சர்வீஸ்

மொபைல் போன் சர்வீஸ்

புது டெல்லியைச் சேர்ந்த யூசுப் கரீம் என்ற 28 வயது நபர் தந்து மொபைல் போன்னை சர்வீஸ் செய்து வாங்குவதற்காகச் சேவை மையத்தில் கொடுத்திருக்கிறார். ஒரே நாளில் அவரின் மொபைல் போன் சரி செய்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாளே யூசுப் இன் பேடியம் அக்கௌன்ட்டை வேறு யாரோ லாகின் செய்துள்ளதாக ஈமெயில் தகவல் அவரின் ஸ்மார்ட் போனிற்கு வந்துள்ளது.

ஈமெயில்

ஈமெயில்

அடுத்த சிறு வினாடிகளில் யூசுப் இன் ஈமெயில் முகவரி மாற்றப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது, அதனைத் தொடர்ந்து சிறு வினாடியில் யூசுப் இன் மொபைலிற்கு அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.19,999 வேறு ஒரு வாங்கி கண்ணகிக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸ்

இதே போல் தொடர்ந்து அவரின் அக்கௌன்ட் இல் பணம் திருடப்பட்டிருக்கிறது. சேவை மையத்தில் மொபைல் போன் கொடுத்த பின்தான் இப்படி தனது அக்கௌன்ட் இல் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதாக யூசுப் அளித்த புகாரின் பெயரில் டெல்லி போலீஸ்விசாரணை தொடங்கியது.

 மொபைல் வாலெட்

மொபைல் வாலெட்

விசாரணையின் முடிவில் சேவை மையத்தில் பணிபுரிந்த மொபைல் சர்வீஸ் மேன், யூசுப் இன் அக்கௌன்ட் விபரங்களை மாற்றி பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களை சேவை மையங்களில் கொடுக்கும் பொழுது உங்களின் மொபைல் வாலெட் விபரங்களை அழித்துவிட்டுக் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Nearly Rs 91000 withdrawn from mans mobile wallet by service centre staff : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X