90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா? பிஎஸ்என்எல் கவலை.!

|

பிஎஸ்என்எல் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் பிஎஸ்என்எல் கொண்டு வரும் என்ற நிலை இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

அது என்னவென்றால் கடந்த ஆண்டு டிசம்பர் வரை பிஎஸ்என்எல் நிறுவனம் 90ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து, நாட்டிலேயே அதிக நட்டத்தை சந்திதத்த முதன்மையாக பொதுதுறை நிறுவனமாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 பிஎஸ்என்எல்-ன் கடன்

பிஎஸ்என்எல்-ன் கடன்

குறிப்பாக 2018 முதல் 2019 வரை பிஎஸ்என்எல்-ன் கடன் 14ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது, மேலும் இந்நிறுவனம் கடைசியாக லாபமீட்டியது எப்போது என்றால் 2008-2009 கால கட்டத்தில் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயம் 575கோடி ரூபாய் மட்டுமே லாபத்தை ஈட்ட முடிந்தது.

இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்!இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்!

மாத ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை

மாத ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை

பின்பு தொடர்ச்சியாக சரிவை சந்தித்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் ஒரு லட்சத்து 70ஆயிரம் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு காரணம் ?

இந்த நிலைக்கு காரணம் ?

மேலும் 8லட்சம் கிலோ மீட்டர் தெலைவுக்கு ஒளியிழையால் இணைக்கப்பட்டு, 65 ஆயிரம் செல்போன் கோபுரங்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல் இந்த நிலைக்கு காரணம் என்னவென்றால் ஊழியர்களுக்கான மாத ஊதியம் செலவு அதிகரித்தல், மோசமான மேலாண்மை, மற்றும் நவீனமயமாக்கலில் தாமதம் ஆகியவையே என்று கூறப்படுகிறது.

10.8-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனம் அறிமுகம்.!10.8-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனம் அறிமுகம்.!

3ஜி  சேவையிலேயே தொடருவது..

3ஜி சேவையிலேயே தொடருவது..

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையை தொடர்ந்து 5ஜி சேவைக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில்
பிஎஸ்என்எல் மட்டும் 3ஜி சேவையிலேயே தொடருவது, நட்டத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

10சதவீதம் அளவுக்கு குறைநது விட்டன

10சதவீதம் அளவுக்கு குறைநது விட்டன

அதன்பின்பு மொபைல் சந்தாதாரர்களின் பங்குகள் 10சதவீதம் அளவுக்கு குறைநது விட்டன. மேலும் பிஎஸ்என்எல் இயக்குவதற்கான செலவில் 66 விழுக்காடு ஊழியர்களுக்கான ஊதியத்திற்கே சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

மகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.!மகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.!

மத்திய அரசின் உதவி

மத்திய அரசின் உதவி

இநந்நிலையில் ஜீன் மாதம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 850கோடி ரூபாய் ஊதியத்தை மத்திய அரசின் உதவியை பிஎஸ்என்எல் கேட்டுள்ளது. தொலைதொடர்பு நிறுவனத்தின் இணை செயலருக்கு இது தொடர்பான எழுதப்பட்டுள்ள
கடிதத்தில் உடனஎ நிதி அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. எதுவும் இல்லாதபட்சத்தில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்கும் நிலை இல்லாத சூழல் உள்ளது.

Best Mobiles in India

English summary
nearly-impossible-to-run-operations-bsnl : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X