Home
News

சத்தமின்றி சூப்பரான வசதியை அறிமுகம் செய்த Google: சந்தோஷத்தில் ஆண்ட்ராய்டு பயனர்கள்.!

கூகுள் நிறுவனம் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.

அதாவது ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோஸ்-க்கு எளிதாக ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோ ஷேர் செய்யும் வகையில் Nearby Share desktop ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோஸ்-க்கும், வீண்டோஸ்ஸில் இருந்து ஆண்ட்ராய்டு போனிற்கும் ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோ ஷேர் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமின்றி சூப்பரான வசதியை அறிமுகம் செய்த Google.!

இப்போது கூட பலரும் யுஎஸ்பி கேபிள் மூலம் தான் ஃபைல்ஸ், போட்டோ போன்ற அனைத்தையும் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது கூகுள் கொண்டு வந்துள்ள புதிய வசதி அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த புதிய வசதியானது தற்போது பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதி அனைத்து பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் ஆண்ட்ராய்டு போன் மற்றும் லேப்டாப் மாடல்களில் கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்தி Sign in செய்ய வேண்டும். குறிப்பாக இதைப் பயன்படுத்த விண்டோஸ் 10 அல்லது அதற்கு மேல் இருக்கும் 64 பிட் வெர்ஷன் உள்ள கருவிகள் வேண்டும். ஏஆர்எம் கருவிகள் வேலை செய்யாது.

வழிமுறை-2: அதன்பின்பு ஆண்ட்ராய்டு அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று Nearby Share என்று search செய்யவும். அதில் வரும் முதல் ஆப்ஷனை கிளிக் செய்து get started எனக் கொடுக்கவும். குறிப்பாக இதைச் செயல்படுத்த உங்களது போன், லேப்டாப் மாடல்களில் வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதி இருக்க வேண்டும்.

சத்தமின்றி சூப்பரான வசதியை அறிமுகம் செய்த Google.!

வழிமுறை-3: மேலும் இப்போது ஆப் ஓபன் செய்து ஷேர் செய்ய வேண்டிய ஃபைல்களை தேர்வு செய்து drag செய்து இந்த ஆப்பில் போடவும். அதன்பின்பு பைல் மேல் வலப்புறத்தில் கிளிக் செய்தால் Send with Nearby Share என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து எளிமையாக அனுப்பலாம். இதன்மூலம் உங்களது ஃபைல் எளிமையாக ஷேர் செய்யப்படும்.

தற்போது இந்தியாவிலும் Nearby Share Desktop ஆப் பயன்படுத்த கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது Beta வெர்ஷனில் இருப்பதால் 2MPஅளவு உள்ள டேட்டா பகிர 1 நிமிடங்கள் ஆகிறது. இருந்தபோதிலும் இதன் முழு வெர்ஷன் மேம்படுத்தப்பட்டு வெளியானால் மட்டுமே நமக்கு தேவையான வேகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமின்றி சூப்பரான வசதியை அறிமுகம் செய்த Google.!

அதேபோல் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. மேலும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு கூட இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nearby Share desktop app introduced by Google: How to use it? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X