யுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணமா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: என்பிசிஐ அளித்த விளக்கம்!

|

புத்தாண்டு முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களுக்கு என்பிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்(என்பிசிஐ) தெரிவித்துள்ளது. 2021 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என வதந்திகள் தொடர்ந்து பரவியது.

தகவல்களை நம்ப வேண்டாம்

தகவல்களை நம்ப வேண்டாம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என என்பிசிஐ விளக்கமாக தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற கதைகளை நம்ப வேண்டாம் எனவும் தடையின்றி வசதியாக யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படியும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் என்பிசிஐ வலியுறுத்தியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது

2021 ஜனவரி 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. ஆனால் புத்தாண்டு முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் தவறானவை என என்பிசிஐ பதிலளித்துள்ளது.

தடையின்றி பரிவர்த்தனை செய்யுங்கள்

தடையின்றி பரிவர்த்தனை செய்யுங்கள்

மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு இரையாக வேண்டும் எனவும் என்பிசிஐ பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தடையின்றி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படியும் என்பிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம்

கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம்

இதன்மூலம் அனைத்து பயனர்களுக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளை முன்பு போன்றே தொடரலாம் என என்பிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் கட்டணமின்றி தொடர்ந்து யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது.

Source: livemint.com

Best Mobiles in India

English summary
NBCI Explained About UPI Transaction Being Charged From 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X