Home
News

மகத்தான வெற்றி: கப்பலே பிளந்துருச்சு., ஒரே இடத்தில் இரண்டு குறி- ஒலியை விட வேகம் கொண்ட இந்திய பிரமோஸ் ஏவுகணை!

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஒரே இலக்குக்கு எதிராக இரண்டு வெற்றிகரமான நேரடித் தாக்குதல் சோதனையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. செயலற்று பயன்பாடில்லாமல் இருந்த கடற்படை கப்பலை பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கியுள்ளது இதன்மூலம் இந்த சோதனை வெற்றி பெற்றதாக இந்திய கடற்படை தெரிவித்திருக்கிறது.

பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை

பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை

பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை மூலம் ஒரே இலக்குக்கு எதிராக இரண்டு வெற்றிகரமான நேரடி தாக்கதல் நடைபெற்றுள்ளது. பயன்பாடறற கப்பலை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெல்லி ஏவுகணை அழிப்பு கப்பலில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டு வெற்றிகரமாக இலக்கை தாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்திய விமானப்படையின் Su-30MKI விமானம் மூலம் அடுத்த வான்வழி தாக்குதல் குறிவைத்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நிறைவேற்றப்பட்டது.

கப்பலில் ஏற்பட்ட பெரிய துளை

இந்த தாக்குதலின் மூலம் பயன்பாடற்ற கப்பலில் பெரிய துளை ஏற்படுத்தப்பட்டது. இது மணிக்கு சுமார் 3000 கி.மீ வேகத்தில் பயணித்தது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த பிரம்மோஸ் ஏவுகணையானது நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரை பகுதியில் இருந்து ஏவக்கூடிய திறன் படைத்தது. இந்த ஏவுகணையானது ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக அதாவது 208 மேக் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

அதிவேகத்தில் சூப்பர்சோனிக் ஏவுகணை

மேம்படுத்தல் வசதியுடன் கூடிய மாடுலர் லாஞ்சர் பயன்படுத்தி இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை ஏவப்பட்டது. ஐஎன்எஸ் டெல்லி ஏவுகணை அழிப்பு கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்திய விமானப்படையின் Su-30MKI விமானம் மூலம் அதே கப்பலை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ஏவுகணை தாக்குதலில் கப்பல் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. க்ரூஸ் ஏவுகணையின் கூடுதல் ஏவுதல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீண்ட தூரம் தாக்கும் திறன்

நீண்ட தூரம் தாக்கும் திறன், ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க் திறன் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என இந்திய கடற்படை தெரிவித்திருக்கிறது. அதேபோல் தொடர்ந்து சுகோய் Su-30MKI போர் விமானம் மூலம் கிழக்கு கடற்பரப்பில் இருந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஏவப்பட்டது. குறிவைக்கப்பட்ட இலக்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படை கூறுகையில், இந்திய கடற்படையுடனான நெருக்கமான ஒருங்கிணைப்பே இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு காரணம் என விமானப்படை தெரிவித்துள்ளது.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை

முன்னதாக நடத்தப்பட்ட சோதனை குறித்து பார்க்கையில், ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததை இந்திய கடற்படை பாராட்டியது. ஒலியை விட வேகமாக பயணிக்கும் பிரமோஸ் ஏவுகணை முப்படையினரும் உபயோகிக்கும் வகையில் இருக்கிறது. காரணம் ராணுவம், விமானப்படையினர் முன்னதாக இந்த ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடற்படை இந்த சோதனையில் கடல் டூ கடலில் இலக்கு நிர்ணயித்து நடத்தப்பட்ட சோதனையும் வெற்றிகரமாக நடந்தது.

இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்

இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்

இதேபோல் நீருக்கு அடியில் இலக்கை நிர்ணயித்து அதை தாக்கி துல்லியமாக அழிக்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடல் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரம்மோஸ் ஏவுகணை முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஏவுகணையை ஏவிய பிறகும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நகர்ந்தால் இருப்பிடத்திற்கு ஏற்ப திசைமாறி தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணையின் எடையானது 3000 கிலோவாகவும், 2 அடி விட்டமும், 28 அடி நீளமும் கொண்டதாகும். இந்த ஏவுகணையில் 200 கிலோ வரை எடை கொண்ட வெடிகுண்டை வைத்து ஏவ முடியும். இந்த ஏவுகணையானது 800 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் துல்லியமாக தாக்கும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

இந்த ஏவுகணை கடற்படை மற்றும் நாட்டிற்கு வழங்கும் புதிய திறனை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதேபோல் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் என்பிஓஎம் இணைந்து கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இது நவீன கால போர்க்களங்களின் பெரும் தடுப்பு ஏவுகணை ஆகும். இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை ஆனது கடல், நிலம் மற்றும் வான் இலக்குகளுக்கு எதிராக அதன் வலிமையை நிரூபித்துள்ளது.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Navy and Air Force Successfully Tested Brahmos Missile: Two BrahMos missiles Launched at the Same Ship
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X