Home
News

5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.!

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு, மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.

By Jijo Gilbert

மாநில அளவில் இயக்கப்பட்டு வரும் பாரத் சன்சார் நிகம் லிமிடேட் மற்றும் மஹாநகர் டெலிபோன் நிகம் லிமிடேட் ஆகியவற்றை ஒன்றிணைப்பது குறித்து அதிகளவில் பேச்சுகள் எழுந்த நிலையில், இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் எந்த திட்டமும் இல்லை என்பதை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றை கூட்டிணைக்கும் எந்த திட்டமும் இல்லை.

5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.!

எம்டிஎன்எல்-லை புதுப்பிக்கும் வகையில், நாங்கள் நியமித்துள்ள ஆலோசகர் சில பரிந்துரைகளை அளித்துள்ளார். அதற்காக பணியாற்றி வருகிறோம்” என்றார். 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது எம்டிஎன்எல்-லின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எம்டிஎன்எல்-லின் தலைவராக பி.கே.புர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை, 5ஜி அலைவரிசையை இந்தியா தவறவிடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.!

எம்டிஎன்எல் என்பது மும்பை மற்றும் டெல்லி வட்டங்களிலும், மற்ற 20 வட்டங்களிலும் பிஎஸ்என்எல் இயங்கி வருகிறது. இந்த வகையில், என்டிஎன்எல்-க்கு மிக குறைவாகவும், பிஎஸ்என்எல்-க்கு நாடெங்கிலும் 110 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளார்கள். மேலும் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் பாரத்நெட் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த, பிஎஸ்என்எல் உதவியாக உள்ளது.

முன்னதாக, மத்திய பொது துறைகளை ஒன்றிணைக்கும் ஒரு ஆலோசனை அளிக்கப்பட்டு, மாநில அரசால் நடத்தப்படும் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய பொது நிறுவனமாக உருவாக்க போவதாக, கடந்த மாதத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.!

5ஜி தொழில்நுட்பத்தைக் குறித்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மனோஜ் சின்கா, மற்ற நாடுகளுடன் எல்லா 5ஜி சேவைகளின் இணைப்புகளை இந்தியா பெறும் என்பதை வலியுறுத்தும் வகையில், “5ஜி அலைவரிசையை கொண்டு வருவதே எங்கள் அரசின் முக்கியத்துவமாக உள்ளது. அதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்” என்றார்.

இந்தக் கருத்தரங்களில் கலந்து கொண்ட பிஎஸ்என்எல் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா, 5ஜி-யின் பேன்-இந்தியா வரிசைப்படுத்துதலுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது என்றார். மேலும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வரிசைப்படுத்துதல் நடைபெறும் என்று உறுதி அளித்தார்.

5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.!

ஏற்கனவே இந்திய தொலைத்தொடர்பு துறை கடனில் தள்ளாடி வரும் நிலையில், 5ஜி அலைவரிசைக்கான செலவீனம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சின்கா, அலைவரிசை சொத்துக்களின் விற்பனையைக் குறித்து கேட்டு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைத் தொலைத்தொடர்பு துறை நாடும், என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஏற்கனவே 2ஜி வழக்கில் ஒரு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. இது குறித்த பரிந்துரைகளை அளிக்குமாறு டிராயிடம் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை நாடுவோம். தற்போது தொலைத்தொடர்பு சேவையை அளிப்பவர்களை (டிஎஸ்பி-கள்) தவிர, 5ஜி சேவைகளை அளிப்பதில் மற்ற பலரும் கலந்து கொள்வார்கள்” என்றார்.

5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.!

தற்போது நிலவி வரும் கடும் போட்டி காரணமாக, தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தற்போது தொலைத்தொடர்பு சேவைகளை அளிப்பவர்கள் மட்டுமின்றி, பயன்பாட்டிற்கு ஏற்ப மற்ற சிலரும் 5ஜி அலைவரிசையை வழங்குவதில் முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் நாசூக்காக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தேவை இருக்கும் பட்சத்தில், அதற்கு அரசு உதவி செய்யும். எப்படியோ இந்த முறை நாம் 5ஜி அலைவரிசையை இழக்கப் போவதில்லை” என்றார்.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு, மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலம், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அல்லது இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nationwide Deployment of 5G to Require Rs 50 Lakh Crore of Investment CMD BSNL ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X