செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..

|

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளில் 'ஆர்ட்டெமிஸ் I மிஷன்' மிகமிக முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுகிறது. இது மனிதனின் அடுத்த ஜெயிண்ட் லீப் நிகழ்விற்கான அடித்தளமாக இருக்கப்போகிறது என்று நாசா கூறுகிறது. ஆர்ட்டெமிஸின் முக்கிய குறிக்கோள், சந்திரனில் முதல் நீண்ட கால மனித இருப்பை நிறுவுவதாகும். இந்த மாபெரும் நிகழ்வை நிகழ்த்துவதற்கு முன், இந்த பயணத்தில் ஈடுபடும் வீரர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி நாசா முழுமையாகக் கண்காணிக்க விரும்புகிறது.

ஆர்ட்டெமிஸ் மிஷன் என்றால் என்ன? நாசாவின் குறிக்கோள் என்ன?

ஆர்ட்டெமிஸ் மிஷன் என்றால் என்ன? நாசாவின் குறிக்கோள் என்ன?

அதற்காகவே, மனித குழு இல்லாமல் ஆர்ட்டெமிஸ் I மிஷனை விரைவில் நடத்தி முடிக்க நாசா திட்டமிட்டுள்ளது. நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷன் பற்றி தெரியாதவர்களுக்கு, ஆர்ட்டெமிஸ் மிஷனின் குறிக்கோள், சந்திரனில் முதல் நீண்ட கால மனித இருப்பை நிறுவுவதாகும். அது மனிதனின் அடுத்த மாபெரும் பாய்ச்சலை எடுக்க உதவும் அடிப்படை திட்டமாகும். இந்த அடிப்படை திட்டம் சந்திரன் மற்றும் அதைச் சுற்றியுள்ள விஷயங்களை நேரப்படியாக மனிதன் மூலம் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தும். இதற்குப் பின்னர், முதல் விண்வெளி வீரர் குழுவை நாசா செவ்வாய்க்கு அனுப்பும்.

செயற்கை பெண் உடலைச் சந்திரனுக்கு அனுப்பும் நாசா

செயற்கை பெண் உடலைச் சந்திரனுக்கு அனுப்பும் நாசா

இப்போது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், இந்த ஆர்ட்டெமிஸ் I மிஷன் பயணத்தில் ஈடுபடும் பெண் விண்வெளி வீரர்களுக்கான கதிர்வீச்சு அபாயங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக, ஹெல்கா மற்றும் சோஹர் என்ற ஒரு ஜோடி மேனெக்வின் மாதிரிகளை இந்த திட்டத்தில் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு மெனெக்வின்களில் ஒன்று வயதான பெண்மணியின் உடலை மாதிரியாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு ஜோடி மேனெக்வின்கள் சந்திரனைச் சுற்றி ஒரு பயணத்திற்குச் செல்ல தயாராகி வருகிறது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

மனித குழு இல்லாத முதல் ஓரியன் கேப்ஸ்யூல் பயணம்

மனித குழு இல்லாத முதல் ஓரியன் கேப்ஸ்யூல் பயணம்

இது நாசாவின் ஆர்ட்டெமிஸ் I மிஷனின் ஒரு பகுதியாக இருக்கும், இதில் மனித குழு இல்லாத ஓரியன் கேப்ஸ்யூல் சந்திரனுக்கும் திரும்பவும் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனெக்வின்கள் உண்மையில் ஜெர்மன் விண்வெளி மையம் (DLR) வடிவமைத்த MARE பரிசோதனையின் ஒரு பகுதியாகும் .
ஆர்ட்டெமிஸ் 1 ​​விமானம் முழுவதும் கதிர்வீச்சு வெளிப்படுவதை ஆராய்வதற்குப் பெண் உடலின் இரண்டு ஒத்த பிரதிநிதித்துவங்களைப் பயன்படுத்துவது இதில் அடங்கும்.

கரண்ட் பில் சிக்கல் இல்லாமல் ஏசி பயன்டுத்தலாம்.. இந்த கம்மி விலை இன்வெர்ட்டர் ஏசி மாடலை பாருங்க..கரண்ட் பில் சிக்கல் இல்லாமல் ஏசி பயன்டுத்தலாம்.. இந்த கம்மி விலை இன்வெர்ட்டர் ஏசி மாடலை பாருங்க..

உண்மையான மனிதர்களைச் சந்திரனுக்குக் கொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ் மிஷன் 2

உண்மையான மனிதர்களைச் சந்திரனுக்குக் கொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ் மிஷன் 2

இது ஆர்ட்டெமிஸ் மிஷன் 2க்கு அடித்தளமாகச் செயல்படும் என்று நாசா கூறியுள்ளது. ஆர்ட்டெமிஸ் மிஷன் 2வில் உண்மையான மனிதர்களை ராக்கெட் ஏற்றிச் செல்லும். ஓரியன் காப்ஸ்யூல் மூலம் நீண்ட கால நிலவு பயணத்தின் விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குப் பறப்பார்கள் என்று நாசா கூறுகிறது. இந்த ஆர்ட்டெமிஸ் மிஷன் 2 திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. நீண்ட விண்வெளி பயணத்தில் ஈடுபடும் வீரர்களின் பாதுகாப்பை அறிவதற்காக நாசா ஆர்ட்டெமிஸ் மிஷன் 1 திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டத்தின் செலவு எவ்வளவு தெரியுமா?

ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டத்தின் செலவு எவ்வளவு தெரியுமா?

இந்த ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டத்தின் முதல் நான்கு மிஷன்களுக்கான செலவு மதிப்பு மட்டும் சுமார் 4.1 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இரு பாலினருக்கும் வெவ்வேறு கதிர்வீச்சு அளவீடுகள் குறித்து எந்த ஆராய்ச்சியும் இதுவரை நடத்தப்படவில்லை. இப்போது ​​​​நாசா பெண் விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்பத் தயாராகி வருவதால், இந்த பயணத்தில் அதன் குழுவினருக்கு விண்வெளி கதிர்வீச்சின் விளைவுகளைக் குறைக்க நாசா, இந்த முதற்கட்ட ஆராய்ச்சியைச் செய்து முடிக்கப் பார்க்கிறது.

10,000-க்கும் மேற்பட்ட சென்சார்கள் கொண்ட செயற்கை பெண் உடல்

10,000-க்கும் மேற்பட்ட சென்சார்கள் கொண்ட செயற்கை பெண் உடல்

DLR இன் கூற்றுப்படி, 10,000-க்கும் மேற்பட்ட சென்சார்கள் மற்றும் 34 செயலில் உள்ள கதிர்வீச்சு கண்டுபிடிப்பாளர்களால் இந்த பெண்ணின் மேனெக்வின் உடல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வயது வந்த பெண்ணின் எலும்புகள், மென்மையான திசுக்கள் மற்றும் உள் உறுப்புகளை உருவகப்படுத்தும் பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இந்த பயணத்தில் என்ன சிக்கல்கள் எழக்கூடும், எந்த அளவு கதிர்வீச்சை பெண் விண்வெளி வீரர்கள் சந்திக்க வேண்டும் என்பதை நாசா இதன் மூலம் கண்டறியும்.

இதுதான் சூப்பர் கேட்ச்: நடுவானில் ராக்கெட்டை கேட்ச் பிடித்த ஹெலிகாப்டர்.!இதுதான் சூப்பர் கேட்ச்: நடுவானில் ராக்கெட்டை கேட்ச் பிடித்த ஹெலிகாப்டர்.!

ஒரு உடல் பாதுகாப்புடன் பயணிக்கும்.. மற்றொன்று பாதுகாப்பின்றி பயணிக்குமா?

ஒரு உடல் பாதுகாப்புடன் பயணிக்கும்.. மற்றொன்று பாதுகாப்பின்றி பயணிக்குமா?

இந்த இரண்டு மேனெக்வின்களும் மற்ற மேனிக்வின்களால் அனுபவிக்கும் அதிர்வுகள் மற்றும் ஜி ஃபோர்ஸ் பற்றிய தரவைத் தொகுக்கப் பொறுப்பான மூன்றாவதாக இணைக்கப்படும். அதேபோல், ஹெல்கா பாதுகாப்பின்றி சந்திரனுக்குப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜோஹர் ஆஸ்ட்ரோராட் என்று அழைக்கப்படும் கதிர்வீச்சு பாதுகாப்பு உடையை அணிந்து சந்திரனுக்குப் பறக்கும் என்று நாசா தகவல் தெரிவிக்கிறது. இதன் மூலம் கண்டுபிடிக்கப்படும் தகவலை வைத்து, விண்வெளி வீரர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை நாசா சரி செய்யும் என்று கூறப்படுகிறது.

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திற்கு வந்து சேர்ந்த மேனெக்வின்கள்

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திற்கு வந்து சேர்ந்த மேனெக்வின்கள்

இந்த மேனெக்வின்கள் ஏற்கனவே புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அங்குத் திட்டமிடப்பட்ட ஏவுதலுக்கு சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு அவர்கள் ஓரியன் விண்கலத்தில் ஏற்றப்படுவார்கள் என்று நாசா கூறியுள்ளது. இதற்கிடையில், நாசா ஏற்கனவே அதன் விண்வெளி வெளியீட்டு அமைப்பில் வேலை செய்து வருகிறது. இது இந்த கோடையில் எப்போதாவது தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

Best Mobiles in India

English summary
NASA Will Send Artificial Female Bodies To The Moon To Study Radiation Effects From Artemis I mission : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X