நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

|

மனித வாழ்க்கையில் நன்மை செய்யும் நல்லவர்கள் அனைவரும் இறந்த பின் சொர்கத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாகக் கூறப்பட்டு வருகிறது. அதேபோல், தீமை விளைவிக்கும் மனிதர்கள் இறந்த பின் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் இந்த கருத்தை நம்புகின்றன. நம்முடைய பூமி கிரகத்தை நாம் சொர்கம் என்று எடுத்துக்கொள்ளலாம், அப்படியானால், நரகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கிரகம் நம்முடைய பிரபஞ்சத்தில் இருக்குகிறதா?

நரகத்தைப் பிரதிபலிக்கும் புதிய கிரகம் கண்டுபிடிப்பா?

நரகத்தைப் பிரதிபலிக்கும் புதிய கிரகம் கண்டுபிடிப்பா?

நாசாவின் புதிய கண்டுபிடிப்பு இந்த கேள்விக்கான மிக நெருக்கமான பதிலை நமக்கு இப்போது வழங்கியுள்ளது. ஆம், நமக்குத் தெரிந்த நரகத்திற்கு நெருக்கமான ஒரு கிரகம், நரகத்தைப் பிரதிபலிக்கும் தன்மையோடு இருப்பதை நாசா சமீபத்தில் கண்டறிந்துள்ளது. அழகான மற்றும் அமைதியான சோலைவனம் போன்ற ஒரு இடம் தான் சொர்க்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. அதேபோல், தீப்பிழம்புகளுக்கு மத்தியில் தீயவர்களை வாட்டி எடுக்கும் ஒரு நெருப்பு உலகமாக நரகம் சித்தரிக்கப்படுகிறது.

நாசா கண்டுபிடித்த எக்ஸோபிளானெட்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

நாசா கண்டுபிடித்த எக்ஸோபிளானெட்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

மனிதர்கள் இறந்த பின் இந்த இரண்டு இடங்களில் எதோ ஒரு இடத்திற்குச் செல்வார்கள் என்பதே ஐதீகம். எது எப்படியாக இருந்தாலும் நரகம் போன்ற ஒரு கிரகத்தை நாசா நமக்கு நெருங்கிய பிரபஞ்சத்தில் கண்டுபிடித்துள்ளது ஆச்சரியம். தெரியாதவர்களுக்கு, நாசா இதுவரை 3500க்கும் மேற்பட்ட புதிய எக்ஸோபிளானட் கிரகங்களைக் கண்டுபிடித்து, அதற்குப் பெயரிட்டுள்ளது. அதேபோல், நாசாவின் பட்டியலில் இன்னும் 2000திற்கும் மேலான எக்ஸோபிளானட் விபரங்கள் பெயரிடப்படாமல் இருக்கிறது.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

55 Cancri e என்பது நரகத்திற்கு நிகரான ஒரு விசித்திரமான கிரகம்

55 Cancri e என்பது நரகத்திற்கு நிகரான ஒரு விசித்திரமான கிரகம்

ஆக மொத்தம், நாசா இதுவரை விண்வெளியில் மொத்தம் 5000திற்கு அதிகமான கிரகங்களைக் கண்டறிந்துள்ளது. இந்த வரிசையில், நாசா இப்போது, 55 Cancri e என்று அழைக்கப்படும் ஒரு விசித்திரமான கிரகத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த கிரகம் அதன் சூரியனைப் போன்ற நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த புதிய கிரகத்தின் நிலைகள், டான்டேயின் இன்ஃபெர்னோவில் இருந்து வரும் நரகத்திற்கு ஒத்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆம், அதில் சித்தரிக்கப்படும் இயல்புகளுடன் நரகத்துடன் இது ஒத்துப்போகிறது.

2,400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இயங்கும் கிரகம்

2,400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இயங்கும் கிரகம்

நாசா வெப்பின் வலைத்தளத்தின்படி, இந்த கிரகம் அதன் மைய நட்சத்திரத்தை வெறும் 0.015 வானியல் அலகுகளில் சுற்றி வருகிறது. வானியல் அலகுகளில் என்பது 1 அஸ்ட்ரோனாமிகள் யூனிட்டை (astronomical unit) குறிக்கிறது. இது, அதன் நட்சத்திர மிகவும் நெருக்கமாகச் சுற்றி வருவதனால், இந்த கிரகம் முழுமையாக அதிக வெப்பமாக இருக்கிறது. பகல் நேரத்தில், இந்த கிரகத்தின் வெப்பநிலை 2,400 டிகிரி செல்சியஸைத் தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமக்குத் தெரிந்த மெல்டிங் பாயிண்ட்கும் அதிகமாக இருக்கிறது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

இந்த வெப்பமான 55 Cancrie கிரகம் எதனால் ஆனது?

இந்த வெப்பமான 55 Cancrie கிரகம் எதனால் ஆனது?

முந்தைய மதிப்பீடுகளின் படி, இந்த கிரகம் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனால் ஆன வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் அல்லது சிலிக்கான் ஆக்சைடு போன்ற கனிம நீராவியால் ஆன மிக மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் என்று நாசா வெளிப்படுத்தியது. இந்த கிரகம் நமது சந்திரனைப் போல அலையுடன் பூட்டப்பட்டிருந்தால், நட்சத்திரத்தை எதிர்கொள்ளும் அதன் மேற்பரப்பு நிரந்தரமாக உருகக்கூடும். இல்லையெனில், கிரகம் பூமியைப் போலவே பகல்-இரவு சுழற்சிகளை அனுபவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பாறைகள் உருகி, ஆவியாகி, நெருப்பு மழையாய் பொழிகிறதா?

பாறைகள் உருகி, ஆவியாகி, நெருப்பு மழையாய் பொழிகிறதா?

ஆனால், இந்த கிரகத்தில் இது ஒரு வழக்கமான நாள் அல்ல. நாட்கள் வெப்பமடைந்து பகலில் மேற்பரப்பு உருகும். இரவில், மேற்பரப்பு குளிர்ச்சியடைந்து திடப்படுத்தப்படுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. பகல் நாளின் அதீத வெப்பம் காரணமாக சில பாறைகள் உருகி, பின்னர் ஆவியாகி, கிரகத்தின் வளிமண்டலத்துடன் கலக்கிறது. இது கிரகம் "குறைந்த கனிம நீராவி வளிமண்டலத்தை" கொண்டிருக்கக்கூடும் என்பதைக் குறிப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. இங்கு, ஒரு முழு நாள் என்பது வெறும் 18 மணிநேரத்தில் நிறைவடைகிறது.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

எரிமலைக்குழம்பு மழையாக பெய்யும் கிரகம்

எரிமலைக்குழம்பு மழையாக பெய்யும் கிரகம்

மாலையில், இந்த நீராவி அடிப்படையில் ஒடுங்கி, எரிமலைக்குழம்பு மழையாகக் கிரகத்தின் மீது விழுகிறது. பின்னர் ஒரே இரவில் இது மீண்டும் திடமாக மாறும். உண்மையில், இந்த கிரகத்தின் பண்புகள் அனைத்தும் நமக்குத் தெரிந்த நரகத்திற்குச் சமமாக இருப்பதனால், இதை நரகத்தின் பூமி என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து, இந்த தகவலை வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெப்பம், தீயினால் ஆனா தரை, சூடான வாயு கற்று, மாலை நேரத்தில் எரிமலைக்குழம்பு மழை என்று இந்த கிரகம் சூப்பர் ஹாட் கிரகமாக இருக்கிறது.

நாசா ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்பை பயன்படுத்தத் திட்டமா?

நாசா ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்பை பயன்படுத்தத் திட்டமா?

நாசாவின் சமீபத்திய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு இப்போது வேலை வந்துவிட்டது. நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்பைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த கிரகத்தில் வளிமண்டலம் உள்ளதா என்பதை ஆராய உள்ளது. ஆம் எனில், அந்த வளிமண்டலம் எதனால் ஆனது என்பதைப் பார்க்க நாசா ஆர்வமாக இருக்கிறது. இந்த கிரகம் ஈர்ப்பு விசையால் பூட்டப்பட்டுள்ளதா, அதாவது நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு சுற்றுப் பாதையை முடிக்கும்போது அது சுழல்கிறதா என்பதையும் பார்க்க நாசா விரும்புகிறது. இந்த கிரகத்தின் பற்றிய உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

Best Mobiles in India

English summary
NASA Will Observe Hellish Planet 55 Cancri e Where It Rains Lava At Night : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X