இன்னும் 2 வாரத்தில் 160-அடி விண்கல் மீது மோதும் NASA விண்கலம்! அடுத்து என்ன?

|

ஏதாவது ஒரு விண்கல் (Asteroid) பூமியை நோக்கி வந்தால் போதும்!

உடனே.. அது பூமி மீது மோதுமா? மோதினால் என்ன ஆகும்? ISRO-வும் NASA-வும் என்ன செய்ய போகிறது.. மனித இனம் தப்பிக்குமா? அது இதுவென்று.. செய்திகள் பறக்கும்!

அது போகும் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி!

அது போகும் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி!

"பூமி அழிந்து விடுமோ?" என்று எண்ணும் அளவிற்கு மக்கள் மத்தியில் பீதிகளை கிளப்பும் விண்கற்கள் ஆனது உண்மையில் பூமியில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தபடி.. மிகவும் பாதுகாப்பாகவே நம்மை கடந்து செல்லும்.

ஆனால் எல்லா நேரமும் இப்படியே நடக்காது; எல்லா விண்கற்களும் நம்மை பாதுகாப்பாக கடக்காது!

NASA-வையே நக்கல் அடிக்கும் சீனா! அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுச்சா?NASA-வையே நக்கல் அடிக்கும் சீனா! அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுச்சா?

ஏனென்றால்?

ஏனென்றால்?

பூமியை கடந்து செல்லும் விண்கற்கள் ஆனது, நம்மில் பலரும் நினைப்பது போல, ஸ்லோ மோஷனில் கடந்து செல்லாது! அது மணிக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும்.

அப்படியான வேகத்தில் வரும் ஒரு விண்கல்லின் "பயண பாதையில்" கடைசி நிமிட மாற்றம் ஏற்பட்டாலும் கூட, அது பூமிக்கும், பூமியில் வாழும் நமக்கும் பெரிய ஆபத்தாக முடியலாம்!

மனித உயிர்களை பாதுகாக்க.. வேறு ஒன்றை தியாகம் செய்ய வேண்டும்!

மனித உயிர்களை பாதுகாக்க.. வேறு ஒன்றை தியாகம் செய்ய வேண்டும்!

விண்வெளியின் கட்டுப்படுத்த முடியாத சக்திகளில் ஒன்றான- விண்கற்கள் வழியாக பூமிக்கும், பூமி வாசிகளுக்கும் எந்த ஆபத்தும் வராது என்று யாராலும் உறுதி தர முடியாது என்பது தான் நிதர்சனம்.

அதற்காக எதுவுமே செய்யாமல், பூமியை நோக்கி வரும் அல்லது பூமிக்கு மிக அருகில் வரும் விண்கற்களை வேடிக்கை பார்க்க முடியுமா? முடியாது! குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால்.. முடியவே முடியாது!

சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

விண்கல் ஒன்றின் மீது நேரடியாக மோதும் நாசாவின் விண்கலம்!

விண்கல் ஒன்றின் மீது நேரடியாக மோதும் நாசாவின் விண்கலம்!

ஆம்! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் டார்ட் (DART - Double Asteroid Redirection Test) விண்கலம், வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி (இந்திய தேதிப்படி செப்டம்பர் 27 ஆம் தேதி) அன்று Dimorphos என்கிற சிறுகோள் உடன் மோத உள்ளது!

இதுவொரு திட்டமிடப்பட்ட மோதல் ஆகம் மற்றும் மனிதகுலத்தின் முதல் கிரக பாதுகாப்பு சோதனை (Planetary defence test mission) ஆகும்.

NASA மோதுவது ஒரு 160 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் மீது!

NASA மோதுவது ஒரு 160 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் மீது!

ஆம்! நாசாவின் டார்ட் விண்கலம் மோதப்போவது 160 மீட்டர் அகலமுள்ள டிமார்ஃபோஸ் (Dimorphos) என்கிற ஒரு சிறுகோள் மீது தான்!

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், டிமார்ஃபோஸ் ஆனது சுமார் 780 மீட்டர் அகலம் கொண்ட டிடிமோஸ் (Didymos) என்ற மிகப்பெரிய சிறுகோளை சுற்றி வரும் ஒரு குட்டி சிறுகோள் ஆகும்.

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

இந்த இரண்டும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கும் விண்கற்களா?

இந்த இரண்டும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கும் விண்கற்களா?

அப்படி எதுவுமே இல்லை! உண்மையில், Dimorphos ஆனது பூமிக்கு எந்தவகையான அச்சுறுத்தலையும் வழங்கவில்லை. இது முழுக்க முழுக்க Kinetic Impact Method தொடர்பான ஒரு சோதனையே ஆகும்!

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்.. நமது கிரகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுகோள்களை "இதுபோன்ற" மோதல்களின் வழியாக திசைத்திருப்ப முடியுமா என்கிற சோதனையை தான் நாசா செய்யப்போகிறது!

டிமார்ஃபோஸ் மீது நாசாவின் DART  மோதிய பிறகு?

டிமார்ஃபோஸ் மீது நாசாவின் DART மோதிய பிறகு?

நாசாவின் திட்டப்படி, டிடிமோஸைச் சுற்றி வரும் டிமார்ஃபோஸ் மீது டார்ட் விண்கலம் மோதிய பிறகு, அதன் சுற்றுப்பாதையில் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என்று கண்காணிக்கப்படும்.

இந்த கண்காணிப்பு, விண்வெளியில் உள்ள ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் ஹப்பிள் டெலஸ்கோப்புகள் வழியாக நிகழ்த்தப்படும்; அதுதொடர்பான ஆய்வுகளும் நடத்தப்படும்!

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

5 பில்லியன் கிலோ கிராம் VS 600 கிலோ கிராம்!

5 பில்லியன் கிலோ கிராம் VS 600 கிலோ கிராம்!

டிமார்போஸின் எடை எவ்வளவு என்று யாருக்குமே தெரியாது. நாசாவின் கணிப்புப்படி, அது ஐந்து பில்லியன் கிலோகிராம் ஆக இருக்கலாம். மறுகையில் உள்ள நாசாவின் டார்ட், சுமார் 600 கிலோகிராம் எடையுள்ள ஒரு விண்கலம் ஆகும்.

நாசாவின் கூற்றுப்படி, இந்த மோதல் - ஒரு கோல்ஃப் வண்டியை ஒரு பெரிய பிரமிட் மீது மோதுவதற்கு சமம்! இருந்தாலும் கூட, இந்த மோதல் வழியாக வருங்கால ஆபத்துகளை சமாளிப்பதற்கான தரவுகள் கிடைக்கும் என்று நாசா நம்புகிறது!

DART விண்கலத்தில் ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு!

DART விண்கலத்தில் ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு!

நாசாவின் டார்ட் விண்கலத்தில் DRACO அல்லது டிடிமோஸ் ரீகனைசன்ஸ் அன்ட் ஆஸ்ட்ராய்ட் கேமரா ஃபார் ஆப்டிகல் நேவிகேஷன் (Didymos Reconnaissance and Asteroid Camera for Optical navigation) என்கிற ஒரே ஒரு கருவி மட்டுமே உள்ளது; இதுவொரு ஹை-ரெசல்யூஷன் கேமராவாகும்.

அது டிடிமோஸ் மற்றும் டிமார்போஸை புகைப்படம் எடுக்கும் அதே நேரத்தில் DART-இன் தன்னியக்க வழிகாட்டல் அமைப்பிற்கும் (Autonomous guidance system) ஆதரவு அளிக்கும்.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

அடுத்த 100 ஆண்டுகளில் எந்த பயமும் வேண்டாம்!

அடுத்த 100 ஆண்டுகளில் எந்த பயமும் வேண்டாம்!

இந்த கட்டுரையின் முடிவில், "இன்று இல்லை என்றாலும் கூட வரும் காலத்தில் ஏதாவது ஒரு சிறுகோள் பூமி மீது வந்து மோதும் வாய்ப்பு உள்ளதா?" என்கிற கேள்விக்கு பதில் சொல்வதற்கும் நாங்கள் கடமை பட்டுள்ளோம்.

நாசாவின் Science Mission Directorate-இன் இணை நிர்வாகி ஆன தாமஸ் ஸுர்புசென், "அடுத்த 100 ஆண்டுகளில் பூமியை அச்சுறுத்தும் எந்தவொரு (விண்வெளி) பொருளையும் நாங்கள் காணவில்லை! ஆனால் இறுதியில் கண்டிப்பாக ஒரு மோதல் நடக்கும். நமது கிரகத்தின் புவியியல் பதிவுகளும், சந்திரனில் நமக்கு கிடைத்த தரவுகளுமே அதற்கு சாட்சி!" என்கிறார்!

Photo Courtesy: NASA

Best Mobiles in India

English summary
NASA Vs Asteroid DART Spacecraft To Crash On 160 Metre Wide Space Rock on September 26 Here is Why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X