328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த NASA பெண்: சும்மா குதித்து குதித்து விளையாடுவோம்...

|

க்ரிஸ்டினா கோச் என்ற வீராங்கனை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர். வடக்கு கரோலினா மாகாண பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.

21 விண்வெளி வீரர்களுள் க்றிஸ்டினா கோச்சும் ஒருவர்

21 விண்வெளி வீரர்களுள் க்றிஸ்டினா கோச்சும் ஒருவர்

கடந்த 2013-ம் ஆண்டு விண்வெளி திட்டங்களுக்காக நாசா 21 விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. இந்த 21 விண்வெளி வீரர்களுள் க்றிஸ்டினா கோச்சும் ஒருவர். விண்வெளி பயணத்திற்குச் செல்வதற்கான பயிற்சிகளை 2015-ம் ஆண்டில் முடித்த க்றிஸ்டினா கோச், கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவால் அனுப்பப்பட்டார்.

சோயஸ் எம்எஸ்-12 விண்வெளி தடம்

சோயஸ் எம்எஸ்-12 விண்வெளி தடம்

சோயஸ் எம்எஸ்-12 விண்வெளி தடத்தில், க்றிஸ்டினாவுடன் அலெக்சே ஒவ்சினின் மற்றும் நிச்க் ஹாக் ஆகியோரும் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே தனது பணியை மார்ச் 29ல் முதலில் ஆரம்பித்த க்றிஸ்டினா கோச், அதன் பிறகு மேலும் ஒரு சாதனையை படைத்தார்.

திடீரென அக்கவுண்டில் ரூ.30 கோடி வந்தா என்ன செய்வீங்க: பூவிற்கும் பெண்ணின் கணக்கில் திடீரென அக்கவுண்டில் ரூ.30 கோடி வந்தா என்ன செய்வீங்க: பூவிற்கும் பெண்ணின் கணக்கில் "ரூ.30 கோடி" வரவு

வரலாற்று நிகழ்வை உடைக்கும் விதமான பெண்கள்

வரலாற்று நிகழ்வை உடைக்கும் விதமான பெண்கள்

இதுவரை ஆண்கள் மட்டுமே விண்வெளியில் இறங்கி நடந்தனர் என்ற வரலாற்று நிகழ்வை உடைக்கும் விதமாக பெண்கள் இருவர் மட்டும் விண்வெளியில் இறங்கி நடந்த நிகழ்வு நடைபெற்றது. க்றிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மெய்ர் ஆகியோர் அக்டோபர் 18ம் தேதி விண்வெளியில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சில மாதங்கள் பணியாற்ற வேண்டும் என நாசாவால் பரிந்துரை

சில மாதங்கள் பணியாற்ற வேண்டும் என நாசாவால் பரிந்துரை

ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு மட்டுமே விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்கு க்றிஸ்டினா அனுப்பப்பட்டார். பின் விண்வெளி சுற்றுலா திட்டத்திற்காக மேலும் சில மாதங்கள் பணியாற்ற வேண்டும் என நாசாவால் பரிந்துரைக்கப்பட்டார். இதனையடுத்து, க்றிஸ்டினா பூமிக்கு பிப்ரவரி 2020ல் திரும்புவார் என்று நாசா அறிவித்தது.

விண்வெளி வீரர் லூகா பர்மிடனோ

விண்வெளி வீரர் லூகா பர்மிடனோ

இதனையடுத்து தனது 328 நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு, ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வொர்ட்ஸோவ், ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் லூகா பர்மிடனோவுடன், சோயஸ் எம்எஸ்-12 விண்வெளி ஓடத்தில் நேற்று பூமிக்கு திரும்பினார்.

கஜகஸ்தான் பகுதியில் தரையிறங்கியது

கஜகஸ்தான் பகுதியில் தரையிறங்கியது

இந்த ஓடமானது கஜகஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. பூமிக்கு திரும்பிய க்றிஸ்டினாவிற்கு நாசா விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

பலே சைபர்போலீஸ்.,குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் ஒருவர் கைது:எப்படி சிக்கினான்,எத்தனை வயது தெரியுமா?பலே சைபர்போலீஸ்.,குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் ஒருவர் கைது:எப்படி சிக்கினான்,எத்தனை வயது தெரியுமா?

க்றிஸ்டினா 6 முறை விண்வெளியில் நடந்திருக்கிறார்

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் க்றிஸ்டினா 6 முறை விண்வெளியில் நடந்திருக்கிறார். இதன்மூலம், 42 மணி நேரம் 15 நிமிடம் விண்வெளி நிறுவனத்திற்கு வெளியே மட்டும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஆய்வு மட்டுமின்றி விண்வெளியில் மனிதர்களின் உடல்நிலை எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

பணிநாட்கள் நீட்டிப்பால் 328 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்

நாசாவின் பணிநாட்கள் நீட்டிப்பால் 328 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார் க்றிஸ்டினா. இதன் மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த நபராக மாறியுள்ளார். அதோடு அதிக நாட்கள் ஒரு மனிதர் விண்வெளியில் இருந்தால் அவரது உடலில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படும் என்பதை ஆராய்வதற்கான நபராகவே மாறி இருக்கிறார்.

விண்வெளியில் இருந்தபடி செய்தியாளர்களை சந்தித்த க்ரிஸ்டினா

விண்வெளியில் இருந்தபடி செய்தியாளர்களை சந்தித்த க்ரிஸ்டினா

விண்வெளித் தளத்தில் இருந்தபடி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கிரிஸ்டினா பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

எப்போது வேண்டுமானாலும் குதிக்கக்கூடிய ஒரு பகுதியில் இருந்தேன்

அதில், தரைக்கும், உச்சிக்கும் இடையில் எப்போது வேண்டுமானாலும் குதிக்கக்கூடிய ஒரு பகுதியில் இருப்பது, நிச்சயம் வேடிக்கையானது. விண்வெளியில் உள்ள மிகவும் பலவீனமான புவியீர்ப்பு விசை மிஸ் செய்வேன் என கூறினார்.

Best Mobiles in India

English summary
Nasa US astronaut returns to earth: Record breaking moment

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X