இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?

|

NASA வானியலாளர்கள் ஆபத்தான சிறுகோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறுகோள் இன்று (ஜூலை 7) பூமியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் பூமியை தாக்குமா என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பூமிக்கு ஆபத்தான வகையில் வரும் சிறுகோள்

பூமிக்கு ஆபத்தான வகையில் வரும் சிறுகோள்

NASA வானியலாளர்கள் ஜூலை 7 (இன்று) ஆம் தேதி பூமிக்கு ஆபத்தான வகையில் வரும் சிறுகோளை கண்டறிந்துள்ளனர். இந்த சிறுகோளை நாசா சமீபத்தில் கண்டுபிடித்தது. இந்த சிறுகோள் பயணிக்கும் பாதை விஞ்ஞானிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

பேருந்து அளவு பெரிய சிறுகோள்

பேருந்து அளவு பெரிய சிறுகோள்

அறிக்கைகளின் படி, விஞ்ஞானிகள் கண்டறிந்த சிறுகோள் 41 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது. அதாவது ஒரு பேருந்து அளவு பெரியது. இந்த சிறுகோள் தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் பூமியை நெருங்கிய சில மணிநேரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுகோள் இதே பாதையில் பயணித்து நம்மை தாக்குமா என்பது தான் கேள்வி.

சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது எப்போது?

சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது எப்போது?

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், இந்த சிறுகோளின் பாதையை கவனித்து வருகிறது. இந்த சிறுகோளுக்கு 2022 NF என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோளின் பெயரில் உள்ள எண் அது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டை குறிக்கிறது. சிறுகோளானது பூமிக்கு 90,000 கிலோமீட்டர் தொலைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90,000 கிமீ தூரத்தில் வருகிறது இதில் என்ன ஆபத்து என்ற கேள்வி வருகிறதா?

சிறுகோளின் ஆபத்து என்ன?

சிறுகோளின் ஆபத்து என்ன?

90,000 கிமீ தொலைவு என்பது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தில் 1/4 பங்காகும். இந்த தொலைவில் பயணிக்கும் சிறுகோளின் ஆபத்து என்னவென்றால், பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக சிறுகோள் இழுக்கப்பட்டு பூமியை தாக்கக்கூடும். ஆனால் தற்போது சிறுகோள் பாதுகாப்பான பாதையில் பயணிக்க வாய்ப்புள்ளதாக நாசா கணித்திருக்கிறது. அதாவது ஈர்ப்பு விசை தூண்டப்பட்டால் சிறுகோள் பூமியை நோக்கி திசை திரும்பும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஜூலை 4 ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட சிறுகோள்

ஜூலை 4 ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட சிறுகோள்

பனோரமிக் சர்வே டெலஸ்கோப் மற்றும் ரேபிட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் ஆகியவற்றின் தரவுகளை பயன்படுத்தி சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொலைநோக்கிகள் மற்றும் அதில் உள்ள கேமராக்களின் நோக்கம் பூமிக்கு அருகில் வரும் பொருட்களை நுணுக்கமாக கண்காணிப்பது தான். இந்த சிறுகோள் சமீபத்தில் அதாவது ஜூலை 4 ஆம் தேதி தான் அடையாளம் காணப்பட்டது.

இது அபாயகரமான சிறுகோளா?

இது அபாயகரமான சிறுகோளா?

சிறுகோள் அதன் சிறிய அளவு காரணமாக "அபாகயரமான சிறுகோள்" என கருதப்படவில்லை. ஒரு சிறுகோள் பூமிக்கு ஆபத்து என கணக்கிடுவதற்கு குறைந்தபட்சம் அந்த சிறுகோளின் அளவு 460 அடி அல்லது 140 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் பயணித்தாலும் அதன் அளவு என்பது சிறியதாக இருப்பதால் கண்களில் புலப்படாது. வானியல் ஆர்வலர்கள் இந்த சிறுகோளை அமெச்சூர் தொலைநோக்கியை பயன்படுத்தி பார்க்கலாம் என கூறப்படுகிறது.

பூமியில் விழும் விண்கற்கள்

பூமியில் விழும் விண்கற்கள்

சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்கற்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. இவைகளில் சில பூமியின் இருக்கும் ஈர்ப்பு விசை காரணத்தால் அவ்வப்போது வளிமண்டலத்துக்குள் நுழைகிறது. விண்வெளியில் இருந்து கீழே விழும் பொருட்கள் காற்றின் அடர்த்தி மற்றும் அதன் அதிவேக பயணத்தால் தீப்பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வானில் இருந்து விழும் பெரும் பொருட்கள் கடலிலேயே விழும்.

ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் பயணிக்கும்

ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் பயணிக்கும்

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்பட்சத்தில் பூமியில் மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

நினைத்து பார்க்கமுடியாத அளவிலான பள்ளங்கள்

நினைத்து பார்க்கமுடியாத அளவிலான பள்ளங்கள்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிர்ந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியாத அளவிலான பள்ளங்களை ஏற்படுத்தும். சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

File Images

Source: hindustantimes.com

Best Mobiles in India

English summary
NASA Spotted dangerous Asteroid at Last Second: Approach Earth Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X