Home
News

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் விண்கலம்: முழுவிவரம்.!

நாசா அமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரங்கியது. பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

நாசா அமைப்பு

நாசா அமைப்பு

இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைப்பு செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது.

ரோபோட்டிக் ரோவர்

ரோபோட்டிக் ரோவர்

குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது. சரியாக 7 மாத பயணத்தை அடுத்து வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்தது. மேலும் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், ஜெசிரா பள்ளத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது.

முதல் புகைப்படத்தை நாசா அமைப்பிற்கு அனுப்பிவைத்தது

முதல் புகைப்படத்தை நாசா அமைப்பிற்கு அனுப்பிவைத்தது

அதேபோல் விண்கலத்தில் இருந்து ரோவர் ஆனது 7 நிமிடங்கள் வரை தரையிரங்கியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சாஃப்ட்லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறக்கினர். அதன்பிறகு செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசா அமைப்பிற்கு அனுப்பிவைத்தது.

 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர்

குறிப்பாக 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் 5 மைல்கள் தூரம் வரை பயணித்து மாதிரிகளை சேகரிக்கும்.
இதற்கு முன்பு ஆற்றுப்படுகை இருந்த இடமாக கருதப்படுவதால், இங்கு கிடைக்கும் மாதிரிகள் செவ்வாய் கிரகம் குறித்த பல புதிய தகவல்களை வழங்கும்

றிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் செவ்வாய்

அதேபோல் இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031-ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது.குறிப்பாக ஓராண்டுக்கு ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள்.

கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக

மேலும் கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோவருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்துதான் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா வகுக்கும்.

சாதனையை நாசா

பின்பு இந்த விண்கலத்தில் சுமார் 2 கிலோ எடை கொண்ட குட்டி ஹெலிகாட்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக செவ்வாயில் பறந்தால் பூமிக்கு வெளியே ஹெலிகாப்டரை பறக்க செய்த சாதனையை நாசா படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA spacecraft successfully lands on Mars: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X