விண்வெளியில் தோன்றிய 'ஆழ்கடல் உலகம்'.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு..

|

நமது பிரபஞ்சம் மற்றும் பறந்து விரிந்த விண்வெளி இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல அழகிய விஷயங்களையும் சில மர்மமான புதிர்களையும் தன்னுள் மறைத்து வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அழகிய புதிர்களைக் கட்டவிழ்க்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் பல முயற்சிகளை விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விடா முயற்சியின் வெற்றியாய், இதுவரை பல புதிய விண்வெளி கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டிருக்கிறான்.

விண்வெளியில் நாசா கண்டுபிடித்த ஆழ்கடல் உலகமா இது?

விண்வெளியில் நாசா கண்டுபிடித்த ஆழ்கடல் உலகமா இது?

அந்த வரிசையில் இப்போது நாசாவின் விஞ்ஞானிகள், விண்வெளியில் ஒரு "ஆழ்கடல் உலகம்" என்று அழைக்கப்படும் மிகப் பிரமாண்டமான காஸ்மிக் ரீஃப் உருவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். பறந்து விரிந்த மிக ஆழமான விண்வெளியில் இருந்து இந்த பிரம்மாண்ட உருவத்தை நாசா இப்போது கண்டுபிடித்துள்ளது. "ஆழ்கடல் உலகம்" அல்லது "கடலுக்கு அடியில் உள்ள உலகம்" என்ற இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தை நாசா இப்போது மக்களுடன் பகிர்ந்துள்ளது.

காஸ்மிக் ரீஃப் மற்றும் இரண்டு வெவ்வேறு நெபுலாக்களைக் காட்டும் புகைப்படம்

காஸ்மிக் ரீஃப் மற்றும் இரண்டு வெவ்வேறு நெபுலாக்களைக் காட்டும் புகைப்படம்

இந்த புகைப்படத்தில் விண்வெளியில் இருக்கும் காஸ்மிக் ரீஃப் மற்றும் இரண்டு வெவ்வேறு நெபுலாக்களைக் கொண்டுள்ளது என்று நாசா கூறியுள்ளது. முதல் நெபுலா, சிவப்பு மற்றும் நீல நிறத்தில் ஒளிரும் விளக்குகள் கொண்ட கருப்பு பின்னணியில், பால்வீதியின் செயற்கைக்கோள் விண்மீன் மண்டலமான பெரிய மாகெல்லானிக் கிளவுட்டில் ஒரு பெரிய நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதியாகக் காட்சி அளிக்கிறது. நீல நிறத்தில் காணப்படுகிறது. இரண்டாவது நெபுலாவுடன் சேர்ந்து, இந்த முழு அமைப்பையும் நாசா காஸ்மிக் ரீஃப் என்று அழைக்கிறது.

நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பிரம்மாண்ட காஸ்மிக் ரீஃப் உருவம்

1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பிரம்மாண்ட காஸ்மிக் ரீஃப் உருவம்

இந்த காஸ்மிக் ரீஃப் சுமார் 600 ஒளியாண்டுகள் அளவில் பறந்து விரிந்து விண்வெளியில் படர்ந்துள்ளது. இந்த காஸ்மிக் ரீஃப் பகுதி பூமியில் இருந்து சுமார் 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் மிக முக்கியமான தொலைநோக்கிகளில் ஒன்றான, ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியால் கைப்பற்றப்பட்ட பிரம்மாண்டமான புகைப்படம் இது என்று நாசா தனது பதிவில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. தொலைநோக்கியின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் படத்தை வெளியிட்டது.

ஹப்பிள் படம்பிடித்து ஒரு பெரிய நட்சத்திரம் உருவாகும் பகுதியா?

ஹப்பிள் படம்பிடித்து ஒரு பெரிய நட்சத்திரம் உருவாகும் பகுதியா?

உண்மையைச் சொல்லப் போனால், ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் இந்த புகைப்படத்தை ஏப்ரல் 2020 இல் படம்பிடித்துள்ளது. இந்த பிரம்மாண்டமான நட்சத்திரம் பிறந்த நேரத்தில் விண்வெளியின் அழகையும் மர்மத்தையும் இந்த படம் தெளிவாக உயர் தரத்தில் காட்டுகிறது. "கடலுக்கு அடியில் உள்ள உலகத்தை இந்த உருவம் ஒத்திருப்பதால், காஸ்மிக் ரீஃப் என்று நாசாவால் செல்லப்பெயர் வைக்கப்பட்டு, இது அழைக்கப்படுகிறது. இது பெரிய மாகெல்லானிக் கிளவுட்டில் ஒரு பெரிய நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

சூரியனை விட 2,00,000 மடங்கு பிரகாசமானதா இது?

சூரியனை விட 2,00,000 மடங்கு பிரகாசமானதா இது?

இது "பால்வீதியின் செயற்கைக்கோள் விண்மீன்" என்று நாசா தலைப்பில் கூறியுள்ளது. சிவப்பு மண்டலத்தின் மையப்பகுதி பிரகாசமான, கனமான நட்சத்திரங்களின் தொகுப்பாகும், இவை ஒவ்வொன்றும் நமது சூரியனை விட 10 முதல் 20 மடங்கு அளவில் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நேர்மாறாக, நீல நெபுலா உருவம், சூரியனை விட சுமார் 15 மடங்கு பெரியதாகவும் 2,00,000 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும் ஒரு தனி நட்சத்திரத்தைக் கொண்டுள்ளது என்று நாசா கூறியுள்ளது. இந்த மாமத் நட்சத்திரமானது தொடர்ச்சியான வெடிப்புகளின் மூலம் அதிர்ச்சியூட்டும் நீல வாயுவை உருவாக்கியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் காஸ்மிக் ரீஃப் புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் காஸ்மிக் ரீஃப் புகைப்படம்

இதன் விளைவாக அதன் வெளிப்புற உறை பகுதியளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. "உண்மையில் பிரபஞ்சம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது" என்று இன்ஸ்டாகிராம் இடுகையில் ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். ஆழ்கடல் உலகம் அல்லது கடலுக்கு அடியில் உள்ள உலகம் என்ற இந்த காஸ்மிக் ரீஃப் படங்கள் மீண்டும் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. உண்மையில் இதுவரை நாசா வெளியிட்ட அனைத்து விண்வெளி புகைப்படங்களும் தனக்கென்ற ஒரு தனித்த தகவலைக் கொண்டிருக்கிறது. நாசாவின் கண்டுபிடிப்புகள் எல்லாம் மனிதர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை.

800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

30 வருடங்களாகச் சேவை வழங்கும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்

30 வருடங்களாகச் சேவை வழங்கும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்

30 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு, நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, மில்லியன் கணக்கான கண்கவர் படங்களுடன் உலகின் கற்பனையைப் படம்பிடித்துள்ளது. விண்வெளி வானத்தின் மீது ஹப்பிள் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பின் பார்வை, மனிதனின் கண்களை விடத் தனித்துவமான பார்வையைக் கொண்டிருப்பதை அதன் தொடர் சேவை நிரூபித்துள்ளது.

ஹப்பிளை மிஞ்சும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

ஹப்பிளை மிஞ்சும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் பிரபஞ்சத்தின் மிகவும் தடையற்ற பார்வையைக் கொண்டுள்ளது. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) கூட்டுத் திட்டம் இந்த தசாப்தத்தில் செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் அது டிசம்பரில் அதிக சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் இணைக்கப்படும். James Webb Telescope என்பது மீண்டும் NASA, ESA மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஒத்துழைப்பால் உருவாகும் மிகப்பெரிய இராட்சச டெலஸ்கோப் கருவியாகும்.

இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

ஹப்பிள் டெலஸ்கோப்பின் சக்தி எத்தகையது?

ஹப்பிள் டெலஸ்கோப்பின் சக்தி எத்தகையது?

இது வரும் டிசம்பர் மாதம் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹப்பிள் டெலஸ்கோப் மற்றும் ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு என்ன என்பதைக் கட்டாயம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.ஹப்பிள் ஸ்பேஸ் டெலெஸ்கோபி சுமார் 12.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான மங்கலான ஒளியைக் காண முடியும் வகையில் உருவாக்கப்பட்டது. அதாவது, பிக் பேங்கிற்கு 1 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இருந்த ஒளியைக் காணக்கூடியது.

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பிற்கான வேறுபாடு என்ன தெரியுமா?

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பிற்கான வேறுபாடு என்ன தெரியுமா?

ஆனால், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST), ஹப்பிள் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தது. காரணம், JWST திட்டமிட்டபடி நடந்தால், ஆரம்பக்கால நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகத் தொடங்கியபோது நேர்ந்த ஒளியைக் காணக்கூடிய ஆற்றலை இது கொண்டுள்ளது. கிட்டத்தட்ட, 13.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒளியைக் கூட இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பார்க்க முடியும் என்று நாசா கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Shares Spectacular Image of Undersea World Cosmic Reef in Space Captured By Hubble Telescope : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X