Home
News

Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!

நாசா நிறுவனம் புளூட்டோவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தில் நாசா ரெயின்போ வண்ணத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறது. நாசா, இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தகவலை விரிவாக பார்க்கலாம்.

நாசா பகிர்ந்துள்ள புகைப்படம்

நாசா பகிர்ந்துள்ள புகைப்படம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இணையத்தை வியப்பில் ஆழ்த்தும் வகையிலான ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறது. இந்த புகைப்படத்தில் கிரகமே வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கிறது. நாசாவால் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தில் இடம்பெற்ற கிரகம் புளூட்டோ ஆகும்.

ப்ளூட்டோ கிரத்தின் பொதுவான தோற்றம்

ப்ளூட்டோ கிரத்தின் பொதுவான தோற்றம்

ப்ளூட்டோ கிரகம் பொதுவாக வெள்ளை வண்ணத்தில் காட்சியளிக்கும். ஆனால் தற்போதைய புகைப்படத்தில் ப்ளூட்டோ வானவில் வண்ணத்தில் காட்யளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த வண்ண புகைப்படம் நியூ ஹொரைசன்ஸ் விஞ்ஞானிகளால் கிரகத்தின் தனித்துவமான பகுதிகளுக்கு இடையில் உள்ள பல நுட்பமான வண்ண வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டது என நாசா இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளது.

நியூ ஹொரைசன்ஸ் விண்வெளி ஆய்வு

நியூ ஹொரைசன்ஸ் விண்வெளி ஆய்வு

ப்ளூட்டோவின் மலைகள், பள்ளத்தாக்குகள், மென்மையான பனிக்கட்டி சமவெளி, அதிக பள்ளங்கள் மற்றும் அதீத காற்றுடன் கூடிய குன்றுகள் என வேறுபடுத்தி இந்த வண்ண புகைப்படத்தில் காண முடியும் என கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஏவப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் விண்வெளி ஆய்வு கண்காணிப்பு விண்கலம் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் குவியும் பாராட்டுகள்

நாசா இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்ட இந்த புகைப்படத்துக்கு ஒரே நாளில் 7.8 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கிறது. ப்ளூட்டோவின் அழகையும், விண்வெளி ஏஜென்சி பயன்படுத்திய வண்ண கலவையையும் நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

புகழ்ச்சி மழையில் நாசா: நெட்டிசன்கள் பாராட்டு

புகழ்ச்சி மழையில் நாசா: நெட்டிசன்கள் பாராட்டு

"கடவுளே, இது மிகவும் அழகாக இருக்கிறது" என இந்த புகைப்படத்துக்கு பயனர் ஒருவர் பதிலளித்துள்ளார். மற்றொருவர், "ப்ளூட்டோவின் அழகை உலகிற்கு வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள்! உங்களை (நாசா) நினைத்து பெருமைப்படுகிறேன்" என கமெண்ட் செய்துள்ளார்.

சூரியக் குடும்பத்தின் கிரகங்கள்

சூரியக் குடும்பத்தின் கிரகங்கள்

சூரியக் குடும்பம் போன்ற பல குடும்பங்கள் பால்வெளியை தாண்டி இருக்கிறது என கூறப்படுகிறது. சூரிய குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கிரகமாக இருப்பது ப்ளூட்டோ ஆகும். ஒவ்வொரு கிரகத்தில் இருக்கும் தன்மை குறித்து ஆராய்ந்து வரும் நேரத்தில் ப்ளூட்டோவை ஒரு கிரகமாக அங்கீகரிக்கலாமா என்ற விவாதத்தின் அடிப்படையில் தான் இந்த கிரகம் குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டது.

ப்ளூட்டோ கிரகத்தில் என்ன இருக்கிறது?

ப்ளூட்டோ கிரகத்தில் என்ன இருக்கிறது?

ப்ளூட்டோ குறித்து பல தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ப்ளூட்டோ குறித்து ஆராய ஏவப்பட்டு விண்கலம் மூலமாக பல ரகசியங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 11000 அடி உயர மலைகள், மீத்தேன் கூறுகளால் உருவான ஐஸ்கட்டிகள், பனிச்சறுக்கு போன்ற நிலப்பரப்புகள் என ப்ளூட்டோவின் பல ரகசியங்கள் கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கிறது.

நிலாவில் இருப்பது போன்ற பள்ளம்

நிலாவில் இருப்பது போன்ற பள்ளம்

நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக ப்ளூட்டோவின் பல ஆச்சிரயங்களை நமக்கு புகைப்படமாக பதிவு செய்து அனுப்பி வருகிறது. நிலாவில் இருப்பது போன்ற வட்ட வடிவ பள்ளங்கள், உயர்ந்த மலைகள் என பல ஆச்சரியங்கள் இதன்மூலம் கண்டறிந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விண்கலம் அனுப்பும் புகைப்படங்கள் என்பது மிக தெளிவாக இருக்கிறது என்பது கூடுதல் பலமாகும்.

மார்ஸ் கிரகம் குறித்த சுவாரஸ்ய தகவல்

மார்ஸ் கிரகம் குறித்த சுவாரஸ்ய தகவல்

நாசா அனைத்து கிரகங்கள் குறித்து ஆய்வு செய்து பல ஆச்சரியங்களை நமக்கு தெரியப்படுத்தி வருகிறது. அதன்படி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் நேரடியாக மார்ஸ் கிரகத்தில் தரையிறக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையில் இருந்த பளபளப்பான வெள்ளை நிற பொருளின் அரிய புகைப்படத்தை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் பதிவு செய்து அனுப்பியது. ஆனால் குறிப்பிட்ட தினங்களுக்கு பிறகு இது ரோவரினால் ஏற்பட்ட குப்பையின் ஒரு பகுதி என கண்டுபிடிக்கப்பட்டது.

நூடுல் போன்ற பொருள் என்னவாக இருக்கும்

நூடுல் போன்ற பொருள் என்னவாக இருக்கும்

தொடர்ந்து சிவப்பு கிரகமான மார்ஸ் இன் ஏணைய இடத்தை காட்சியாக பதிவு செய்து ரோவர் புகைப்படமாக அனுப்பி வருகிறது. அதன்படி சமீபத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் நூடுல் வடிவத்தில் உள்ள மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்தது. இது என்ன என்பதை கண்டறியவே விஞ்ஞானிகளுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. ரோவரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள அபாயத் தடுப்பு கேமராக்கள் மூலம் இந்த நூடுல்ஸ் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பொருள் என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நிச்சயமாக உண்ணக்கூடிய பொருட்கள் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

பெரும் சிக்கலாக இருக்கும் விண்வெளி குப்பை

பெரும் சிக்கலாக இருக்கும் விண்வெளி குப்பை

அதேபோல் முன்னதாக இரண்டு பாறைகளுக்கு இடையில் இருந்த பளபளப்பான வெள்ளை நிற பொருளின் அரிய புகைப்படத்தை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் பகிர்ந்தது. பின் இது ரோவரினால் ஏற்பட்ட குப்பை என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை விண்வெளி குப்பை என்பது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகிறது.

மற்றொரு பிரபஞ்சத்திற்கான நுழைவு வாயில்

மற்றொரு பிரபஞ்சத்திற்கான நுழைவு வாயில்

இதுமட்டுமில்லை நாசாவின் மார்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தில் கச்சிதமாக செதுக்கப்பட்ட நுழைவு வாயில் கண்டுபிடிக்கப்பட்டது. மார்ஸ் ரோவர் கிளிக் செய்த புகைப்படத்தில் இது சுவாரஸ்யமானதாகும். இது வேற்றுகிரக வாசிகளால் செதுக்கப்பட்டிருக்கும் என வதந்தித் தகவல்கள் தெரிவித்தது. அதேபோல் செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான ஆதாரமாகவும் இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பாறைகளுக்குள் அமைந்திருக்கும் இந்த வாசல் ஆனது செவ்வாய் கிரகத்தின் மறைவிடம் அல்லது மற்றொரு பிரபஞ்சத்திற்கான நுழைவு வாயிலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.

Best Mobiles in India

English summary
Nasa shares rainbow coloured image of pluto: Viral Pic
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X