300 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மிகப்பெரிய சூப்பர்நோவா வெடிப்பு.. நாசா வெளியிட்ட 'கலீடோஸ்கோப் ஆஃப் கலர்' படம்

|

விண்வெளியில் பல அரியவகை நிகழ்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன, இதில் சில நிகழ்வுகள் பார்ப்பதற்கே மிகவும் அழகானதாகத் தோன்றும், அப்படியான நிகழ்வைப் பற்றித் தான் நாம் பார்க்கப்போகிறோம். இந்த புகைப்படத்தைப் பார்த்ததும், அடடா என்ன அழகு, இதில் எத்தனை வண்ணங்கள் என்று உங்கள் மனதில் நினைத்திருக்க வாய்ப்புள்ளது. கலர் ஃபுல்லாக காட்சியளிக்கும் இந்த நிகழ்வு ஒரு சூப்பர்நோவா வெடிப்பாகும்.

நாசா வெளியிட்ட 'கலீடோஸ்கோப் ஆஃப் கலர்' படம்

நாசா வெளியிட்ட 'கலீடோஸ்கோப் ஆஃப் கலர்' படம்

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்று தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நாசா தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த 'கலீடோஸ்கோப் ஆஃப் கலர்' என்ற புகைப்படத்தை நாம் கூறலாம். காரணம், இந்த புகைப்படம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகானதாக இருக்கிறதோ, அதேபோல் இதன் விளைவிற்கான காரணம் ஒரு மிகப்பெரிய அபாயகர வெடிப்பினால் உருவாகியுள்ளது என்பது தான் உண்மை.

11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த சூப்பர்நோவா வெடிப்பு

11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த சூப்பர்நோவா வெடிப்பு

ஆம், இந்த புகைப்படம் விண்வெளியில் நிகழ்ந்த ஒரு சூப்பர்நோவா வெடிப்பினால் உருவானது. பூமியிலிருந்து சுமார் 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய நட்சத்திரத்தின் சூப்பர்நோவா வெடிப்பால் உருவான 300 ஆண்டுகள் பழமையான அடையாளத்தைத் தான் நாசா தற்போது படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. மூன்று ஆய்வகங்களைப் பயன்படுத்தி "காசியோபியா ஏ (Cassiopeia A)" வெடிப்பு அதன் முழு மகிமையில் எவ்வாறு கைப்பற்றப்பட்டது என்பதையும் இது விளக்கியது.

சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?

மிகப்பெரிய நட்சத்திரத்தின் வெடிப்பு இப்படி அழகானதா?

மிகப்பெரிய நட்சத்திரத்தின் வெடிப்பு இப்படி அழகானதா?

விண்வெளி ஏஜென்சியின் வலைத்தளத்தின்படி, ஒரு சூப்பர்நோவா அல்லது ஒரு நட்சத்திரத்தின் வெடிப்பு என்பது விண்வெளியில் நடக்கும் மிகப்பெரிய வெடிப்புகளில் ஒன்றாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாசா படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியபோது, "கலீடோஸ்கோப் ஆஃப் கலர்" என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இடுகை இது வரை சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்று வைரல் ஆகியுள்ளது. இந்த படத்தில் இருக்கும் வண்ணங்கள் எதைக் குறிக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

வெவ்வேறு நிறங்கள் எதை குறிக்கிறது?

இடுகையின் படி, படத்தில் உள்ள வெவ்வேறு நிறங்கள் ஒவ்வொரு ஆய்வகத்தால் கைப்பற்றப்பட்ட வெவ்வேறு விவரங்களை வழங்குகின்றன, இது வானியலாளர்களுக்கு 'காஸ் ஏ' பற்றிய முழுமையான பார்வையை அளிக்கிறது. நீலம் மற்றும் பச்சை என்பது நாசா சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகத்தின் எக்ஸ்-ரே தரவு மற்றும் 10 மில்லியன் டிகிரி செல்சியஸில் வாயுக்களைக் காட்டுகிறது.

10 மில்லியன் மைல் வேகத்தில் சூடான வாயு

10 மில்லியன் மைல் வேகத்தில் சூடான வாயு

நாசாவின் கூற்றுப்படி, "சூப்பர்நோவாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பொருட்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 மில்லியன் மைல் வேகத்தில் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி மீது நொறுக்கப்பட்ட போது இந்த சூடான வாயு உருவாக்கப்படுகிறது." சிவப்பு நிறம் என்பது ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் அகச்சிவப்பு தரவு மற்றும் இது "சுமார் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெளிப்புற ஷெல்லில்" சூடான தூசியைக் காட்டுகிறது.

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..

10,000 டிகிரி செல்சியஸ் வெப்பம்

10,000 டிகிரி செல்சியஸ் வெப்பம்

மஞ்சள் என்பது நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியின் ஒளியியல் தரவு மற்றும் இது "சுமார் 10,000 டிகிரி செல்சியஸ்" வெப்ப வாயுக்களின் "மென்மையான இழை அமைப்பை" காட்டுகிறது. "படங்களின் ஒப்பீடு வானியல் ஆய்வாளர்களுக்கு சூப்பர்நோவா எச்சத்தில் உள்ள பெரும்பாலான தூசுகள் வெடிப்பதற்கு முன்பு பாரிய நட்சத்திரத்திலிருந்து வந்ததா அல்லது வேகமாக விரிவடையும் சூப்பர்நோவா எஜெக்டாவிலிருந்து வந்ததா என்பதை நன்கு தீர்மானிக்க உதவும்" என்று நாசா விளக்கினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Shares Kaleidoscope Of Color Breathtaking Picture Of 300 Year Old Supernova Remnant : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X