பூமி, சூரியனுக்கு நடுவில் நிலா: நச்சுனு கிளிக் செய்த நாசா- சூரிய கிரகணத்தின் அற்புத காட்சி!

|

கடந்த 10 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது நிகழ்ந்த சிறந்த தருணத்தை நாசா காட்சியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது. விண்வெளியில் காலநிலையை கண்காணிக்க செயற்கைகோளில் எபிக் எனப்படும் எர்த் பாலிக்ரோமேட்டிக் இமேஜிங் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆர்க்டிக் துருவ பகுதியில் மீது சந்திரனின் நிழல் புகைப்படத்தை நாசா பதிவு செய்துள்ளது. இந்த செயற்கைகோளானது பூமியில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பூமி, சூரியனுக்கு நடுவில் நிலா: நச்சுனு கிளிக் செய்த நாசா!

இந்த நிழல் குறித்து பார்க்கையில், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது இந்த நிழலின் கடைசி பகுதியானது ஆர்க்டிக் பகுதியில் ஒரு புள்ளி போன்று தோன்றியது. இதை நாசா காலநிலை செயற்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் எபிக் கேமரா மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (நாசா வெளியிட்ட காட்சியை காண)

பூமி, சூரியனுக்கு நடுவில் நிலா: நச்சுனு கிளிக் செய்த நாசா!

சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, ​​இது 'ரிங் ஆஃப் ஃபயர்' வளையத்தை ஏற்படுத்துகிறது. இது சந்திரனைச் சுற்றித் தெரியும். எளிமையான சொற்களில் சொன்னால், இது தூரத்தின் காரணமாக நிகழ்கிறது, சந்திரன் சற்று சிறியதாகத் தோன்றுகிறது மற்றும் சூரியனின் முழு பார்வையையும் இது தடுக்காது, வளையம் போன்ற ஒளியை உருவாக்குகிறது. எனவே, நீங்கள் ஒளியின் வளையத்திற்குச் சாட்சியாக இருப்பீர்கள். இது 'நெருப்பு வளையம்' அல்லது 'ரிங் ஆஃப் ஃபயர்' என்று குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இந்த சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும் எனத் தெரிவித்தனர்.

ஆண்டு தோறும் சூரிய கிரகண நிகழ்வுகளும், சந்திரன் சார்த்த பிங்க் மூன், ரெட் மூன் போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கின்றன, அப்படி வானில் ஏராளமான அதிசயங்கள் நமது கண்களுக்குத் தென்படாமல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதில் சில நிகழ்வுகளை மட்டும் நம்மால் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அதன்படி பல்வேறு நிகழ்வுகளை நாசா காட்சிப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத வானில் பறக்கும் பொருட்கள், விண்கற்கள் உட்பட பல்வேறு ஆபத்துகள் குறித்து நாசா அவ்வப்போது தகவல்கள் தெரிவித்து வருவதோடு அதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களாக பதிவிட்டு அனுப்புகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nasa Shared the Solar Eclipse Pics: Moon positioned Between Sun and Earth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X