விண்வெளிக்கு "தக்காளி" அனுப்பும் NASA- வேற லெவல் திட்டம்.. காரணத்தை பாருங்க!

|

விண்வெளியில் தங்கி இருக்கும் 10 விண்வெளி வீரர்களுக்கு NASA பூமியில் இருந்து அனுப்ப இருக்கும் பொருட்களின் தொகுப்பு வெளியாகி உள்ளது. இந்த பொருட்களில் தக்காளி இடம்பெற்றிருக்கிறது. விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு ஏன் தக்காளி அனுப்ப வேண்டும் என கேள்வி வருகிறதா? காரணம் இருக்கிறது.

விண்வெளி ஆய்வு மையம்

விண்வெளி ஆய்வு மையம்

விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர்களுக்கான பொருளை நாசா பூமியில் இருந்து அணுப்பி வருகிறது. ஸ்பேஸ் எஸ்க் இன் வணிக ராக்கெட் மூலம் இந்த பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி நாசா தற்போது அனுப்பும் பொருட்களின் தொகுப்பு விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

விண்வெளியில் தக்காளி

விண்வெளியில் தக்காளி

விண்வெளி வீரர்களுக்கு நாசா அனுப்பிய புதிய உணவு பொருட்களுடன் ஒரு சிறிய செர்ரி தக்காளி வகையும் இடம்பெற்றுள்ளது. இது ரெட் ராபின் ரக தக்காளி வகை ஆகும். இந்த தக்காளி வகை அங்கு எவ்வாறு வளர்கிறது என்பதை ஆராய நாசா திட்டமிட்டுள்ளது. ISS இல் பலவிதமான இலை காய்கறிகள் பயிரிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது தக்காளf இடம்பெற்றுள்ளது.

விண்வெளியில் தக்காளி சோதனை

விண்வெளியில் தக்காளி சோதனை

நாசாவுடன் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் தக்காளியை சோதித்து வருகிறோம் பயிர் எவ்வளவு நன்றாக வளர்கிறது என்று. விளையும் தக்காளி எவ்வளவு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கிறது என்பதையும் ஆராய இருக்கிறோம். பழங்கள் மற்றும் தாவரங்களில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் குறித்தும் அறிய இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

மருத்துவ கிட்

மருத்துவ கிட்

நாசா அனுப்பும் பொருட்களில் மருத்துவக் கருவி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அது விமானத்தில் மருத்துவக் கண்டறிதலுக்கான மூன் மைக்ரோஸ்கோப் கருவி ஆகும். இது ஒரு கையடக்க நுண்ணோக்கி கருவி ஆகும். இது ரத்த மாதிரிகளை சோதனை செய்ய உதவும். நோய்வாய்ப்பட்டால் விண்வெளி வீரர்கள் ரத்த மாதிரியை இதில் சோதித்துக் கொள்ளலாம். அதோடு இந்த கருவி மூலம் மாதிரிகளை படம் எடுத்து பூமிக்கு அனுப்பலாம்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது பூமிக்கு மேலே வானில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆய்வு மையம் ஆகும். இந்த ஆய்வு மையத்தில் பல விஞ்ஞானிகள் தங்கி இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். பல சர்வதேச விண்வெளி அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 2030 ஆம் ஆண்டு இறுதியில் செயலிழந்து ஓய்வு பெற இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த உடன் விண்வெளி மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டிருக்கிறது.

விண்வெளி குப்பைகள்

விண்வெளி குப்பைகள்

2030 ஆம் ஆண்டில் இதற்கான பணியை தொடங்க நாசா திட்டமிட்டிருக்கிறது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் இடத்தில் அது விழும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விண்வெளி குப்பைகளில் ஒன்றாக சர்வதேச விண்வெளி மையம் மாறும் என கூறப்படுகிறது. முன்னதாக ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட நாடுகளின் 263-க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள் கடலில் புதைக்கப்பட்டுள்ளதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி

விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி

சர்வதேச விண்வெளி நிலையம் ஆனது அதன் செயல்பாட்டின் இறுதி தசாப்தத்தை நோக்கி செல்கிறது. நாசா அதை வணிக நடவடிக்கைகளுக்காக திறக்க திட்டமிட்டிருக்கிறது. எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல தனியார் ஆய்வு நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் விண்வெளி பொருளாதாரத்திற்காக செலவிட்டு போட்டியிடுகின்றன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னதாகவே ஆயிரக்கணக்கான சிறிய செற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி இருக்கிறது. அதேபோல் ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவனம் விண்வெளி சுற்றுலா தளங்களில் போட்டியிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

விண்வெளி நிலையம் உருவாக்க ஒப்பந்தம்

விண்வெளி நிலையம் உருவாக்க ஒப்பந்தம்

தொடர்ந்து மாற்றத்திற்கான நடவடிக்கையை தொடங்க நாசா முன்னதாகவே திட்டமிட்டுவிட்டது. டிசம்பர் 2021 ஆம் ஆண்டு வெளியான செய்திக் குறிப்பில், ப்ளூ ஆர்ஜின், நானோராக்ஸ் மற்றும் நார்த்ராப் க்ரம்மன் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் பூமியின் சுற்றுப்பாதையில் தனியார் விண்வெளி நிலையங்கள் உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக நாசா குறிப்பிட்டது.

Best Mobiles in India

English summary
NASA Sends Tomatoes to ISS by SpaceX's Commercial Resupply Mission

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X