Home
News

நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் - உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று - பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..!

அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!

தேடல் :

தேடல் :

உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசம் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது..!

வரலாற்று பெருமை :

வரலாற்று பெருமை :

ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..!

நாசா முயற்சி :

நாசா முயற்சி :

அப்படியாகிய அந்த பந்தயத்தில், சூப்பர் பவர் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன..!

உறுதி :

உறுதி :

2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..!

உயிரினங்கள் :

உயிரினங்கள் :

நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..!

எங்களுக்கு தெரியும் :

எங்களுக்கு தெரியும் :

மேலும் எங்கே ஏலியன்களை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..!

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் :

பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்..!

பாதை :

பாதை :

"ஆக, நாங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம்..!" என்று உறுதிப்பட கூறியுள்ளார் எல்லன்..!

ஆய்வு :

ஆய்வு :

2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளதாம்..!

நேரடி ஆய்வு :

நேரடி ஆய்வு :

அதுமட்டுமின்றி 2030-ஆம் ஆண்டு வாக்கில், செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்கள் நேரடியாக சென்று ஏலியன்கள் சார்ந்த ஆய்வை மேற்க்கொள்ளும் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தொல்லுயிர் எச்சம் :

தொல்லுயிர் எச்சம் :

விரைவில் விண்வெளி பாறைகள் உடைக்கபடும், அதனுள் இருந்து தொல்லுயிர் எச்சம் தேடப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது..!

தொலைநோக்கி :

தொலைநோக்கி :

உடன் 2018-ஆம் ஆண்டு, 8.8 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட உள்ள, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் (James webb space) தொலைநோக்கியானதும், இந்த ஏலியன் தேடலில் உட்படுத்தப்பட இருக்கிறதாம்..!

திட்டம் :

திட்டம் :

மேலும் 2020-ஆம் ஆண்டில் அகச்சிவப்புகதிர் (Infrared) தொலைநோக்கி ஒன்றையும் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

கருத்து :

கருத்து :

எல்லனின் கருத்துக்கு ஆதரவாய் முன்னாள் விண்வெளி வீரர் மற்றும் நாசாவில் இணை நிர்வாகியாக பணிபுரியும் 'ஜான் கிரன்ஸ்பெல்ட்'டும் கருத்து தெரிவித்துள்ளார்..!

விரைவில் :

விரைவில் :

ஏலியன்கள் சார்ந்த அறிகுறி எதிர்பார்ப்பதை விட விரைவில் கிடைக்கும் என்றும், நம் சூரிய மண்டலத்தில் மட்டுமில்லாது அதை தாண்டிய அண்டவெளிகளில் இருந்தும் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுசூழல் :

சுற்றுசூழல் :

சமீபத்திய ஆராய்ச்சிகளில் இருந்து அண்டத்தில், உலக ஜீவராசிகளை தவிர்த்து வேறு உயிரினங்கள் வாழும்படியான சுற்றுசூழல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

நீர் இருப்பு :

நீர் இருப்பு :

எடுத்துக்காட்டுக்கு ஜுப்பிட்டர் கிரகத்தில், அதிக அளவிலான நீர் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதையும், செவ்வாய் கிரகம் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலால் சூழப்பட்டிருந்தததையும் சுட்டிக்காட்டியுள்ளார், ஜான் கிரன்ஸ்பெல்ட்..!

மூலக்கூறுகள் :

மூலக்கூறுகள் :

மேலும் நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் கார்பன் அடங்கிய உடல் உறுப்புகள் சார்ந்த மூலக்கூறுகளையும், 'நிலையான' நைட்ரஜனையும் கண்டுபிடித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேடுதல் பணி :

தேடுதல் பணி :

இந்த ஏலியன் சார்ந்த தேடுதல் பணியில் நாசாவின் கேப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Kepler space telescope) முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

உறுதி :

உறுதி :

ஏலியன் இருப்பு உறுதி என்பதை உணர்த்தும் வகையில் "பால்வழி மண்டலமானது நீரால் ஊறிப்போன ஒரு இடம்..!" என்று கருத்து தெரிவித்துள்ளார் நாசாவின் வான் இயற்பியல் துறையின் இயக்குநர் பால் ஹெர்ட்ஸ்.

ஏலியன் வேட்டை :

ஏலியன் வேட்டை :

வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய ஏலியன் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மேற்க்கண்ட தகவல்கள் மூலம் உறுதியாகிறது..!

முகநூல் :

முகநூல் :

மேலும் இது போன்ற பலசுவாரசியமான தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Signs of Alien Life Will Be Found by 2025, NASA's Chief Scientist Predicts. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X