Home
News

NASA விஞ்ஞானிகள் வெளியிட்ட நிலவு குறித்த அதிசய தகவல்கள் நிறைந்த வரைப்படம்!

பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும் இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் எதோ புதிய கிரகம் என்று நினைத்துவிடாதீர்கள், இந்த வண்ணமயமான புகைப்படம் நமது நிலவின் மேப் வரைபடமாகும். ஆம், நம் கண்களுக்குச் சாம்பல் மற்றும் இருண்ட நிறத்தில் தெரியும் நிலவின் புதிய வரைபடம் தான் இந்த புகைப்படம். நிலவு பற்றிய அதிசய தகவல்களை இந்த வரைபடம் சொல்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்படி என்ன தகவலை இந்த வரைபடம் கூறுகிறது என்று பார்க்கலாம்.

நம்பமுடியாத நிலவின் வரைபடம்

நம்பமுடியாத நிலவின் வரைபடம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இன்னும் பல ஆராய்ச்சி குழுக்களுடன் சேர்ந்து இந்த நம்பமுடியாத நிலவின் வரைபடத்தை உருவாகியுள்ளது. இந்த நிலவின் மேற்பரப்பு மற்றும் தரைப்பகுதிகளைத் தெளிவாகக் காட்டும் புதிய வரைபடமாக இந்த மேப் வெளியிடப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கும் மற்றும் அடுத்து எதிர்காலத்தில் நிலவு குறித்து நடத்தப்படும் திட்டங்களுக்கும் பெரிதும் இந்த மேப் உதவும் என்று நாசா கூறியுள்ளது.

விண்வெளி வீரர்களை வழிநடத்த வரைபடம்

விண்வெளி வீரர்களை வழிநடத்த வரைபடம்

மேலும், நிலவிற்குச் செல்லும் விண்வெளி வீரர்களைப் பொருத்தமான தரையிறங்கும் இடங்களில் தரையிறங்க இந்த மேப் உதவும் என்றும் நாசா கூறியுள்ளது. அதேபோல், நிலவு பற்றிய கூடுதல் அறிவியல் விசாரணை மற்றும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற தகுதியான பகுதிகளை நோக்கி வீரர்களை வழிநடத்தவும் இந்த வரைபடம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்)

மெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்)

நாசாவின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்), டெக்சாஸில் உள்ள சந்திர கிரக நிறுவனம் மற்றும் அரிசோனாவில் உள்ள அஸ்ட்ரோஜியோலஜி அறிவியல் மையம் ஆகிய ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து, நாசா இந்த புதிய சந்திர புவியியலின் கவர்ச்சிகரமான வரைபடத்தை, பல செயற்கைக்கோள் தகவல்களை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ளது.

சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது

சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது

எல்பிஐ என்ற நிலவு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நிலவின் இந்த புதிய வரைபடத்தை அமெரிக்க புவியியல்ஆய்வு நிறுவனம் (யுஎஸ்ஜிஎஸ்) தற்பொழுது வளைத்ததில் வெளியிட்டுள்ளது. சுமார் 1: 5,000,000 என்ற அளவில், ஆறு அப்பல்லோ-கால வரைபடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்தும், மிகச் சமீபத்திய செயற்கைக்கோள் படங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த வரைபடம் தொகுக்கப்பட்டுள்ளது.

சரியான தகவலை வழங்கும் மேப்

சரியான தகவலை வழங்கும் மேப்

நிலவின் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் சேகரித்து, ஒன்றுடன் ஒன்று இணைந்து வீரர்களுக்குக் குழப்பம் தரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தகவலையும் சரியாக பிரிவுபடுத்தி இந்த மேப் உருவாக்கப்பட்டுள்ளது.

புவியியல் மென்பொருள் உதவி

புவியியல் மென்பொருள் உதவி

இன்னும் தெளிவாக சொன்னால், நிலவின் அனைத்து பகுதி தகவல்களையும் ஒரே ஒத்திசைவானதாக ஒரே வரைபடமாக மாற்ற புவியியல் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தகவல்களும் ஒட்டி தைக்கப்பட்டு வரைபடமாக மற்ற பட்டுள்ளது.

நிலவின் புவியியல் வரைபடம் விலகும் தகவல்

நிலவின் புவியியல் வரைபடம் விலகும் தகவல்

அதேபோல், நிலவின் இடவியல் தகவல்களும் துல்லியமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது. நிலவில் உள்ள பள்ளங்கள், முகடுகள், பிளவுகள், பிஸ்ஸுர்ஸ், ரிட்ஜெஸ், ஃபால்ட்ஸ் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பிற தடங்கல் குறித்த தகவல்களை அதன் பாறை பெயர்கள், விளக்கங்கள் மற்றும் வயது ஆகிய விவரங்களுடன் உருவாகியுள்ளது. வல்லுநர்கள் எதிர்காலத்தில் இன்னும் விரிவான நிலவின் புவியியல் வரைபடங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

2024-ல் நிலவுக்கு மீண்டும் செல்லும் விண்வெளி வீரர்கள்

2024-ல் நிலவுக்கு மீண்டும் செல்லும் விண்வெளி வீரர்கள்

2024-ல் நிலவுக்கு மீண்டும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்பவுள்ளதாக நாசா கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த வரைபடம் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. நிலவு 450 கோடி ஆண்டுகள் பழமையானது, அதன் தகவல்களை வழங்கும் இந்த அதிசயிக்கத்தக்க விவரங்கள் நிலவு உருவான வரலாற்றை நன்கு புரிந்து கொள்ள இது உதவு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
NASA Scientists Group Released The Most Complete Geologic Moon Map : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X