இணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்! பின்நோக்கி நகரும் நேரம்?

|

அண்டார்டிகாவில் நடைபெறும் ஒரு ஆராய்ச்சியில் பணிபுரியும் நாசா விஞ்ஞானிகள் குழு நமக்கு இணையான பிரபஞ்சத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. அங்கு இயற்பியலின் விதிகள் நமக்கு நேர்மாறானவை என்று இதுகுறித்து வெளியான அறிக்கை கூறுகிறது.

கருத்து 1960 களின்

இணை பிரபஞ்சம் குறித்த கருத்து 1960 களின் முற்பகுதியில் இருந்து வரும் நிலையில், பெரும்பாலும் அறிவியல் புனைகதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் காமிக்ஸின் ரசிகர்களின் மனதில் உள்ளது. ஆனால் இப்போது ஒரு அண்ட கதிர் கண்டறிதல் பரிசோதனையானது, பெரும் வெடிப்பின் போது உருவான ஒரு இணை உலகில் இருந்து வரக்கூடிய துகள்களைக் கண்டறிந்துள்ளது.

பலூனை பயன்படுத்தி

வல்லுநர்கள் பிரம்மாண்ட பலூனை பயன்படுத்தி நாசாவின் அண்டார்டிக் இம்பல்சிவ் டிரான்சிண்ட் ஆன்டெனாவை( அனிடா) அண்டார்டிகாவிற்கு மேலே கொண்டு சென்ளனர். அங்குள்ள வேகமான, வறண்ட காற்று அதன் கண்டுபிடிப்புகளை சிதைக்கும் ரேடியோ சத்தம் இல்லாத சரியான சூழலை வழங்கியது.

நீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு?., உயரும் பங்குகள்!நீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு?., உயரும் பங்குகள்!

பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான நிறையை

உயர் ஆற்றல் துகள்களின் நிலையான "காற்று" தொடர்ந்து விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்து சேர்கிறது.

குறைந்த ஆற்றல், பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான நிறையை கொண்ட சப்அடோமிக் நியூட்ரினோக்கள் பூமி வழியாக முழுமையாகச் செல்ல முடியும். ஆனால் அதிக ஆற்றல் கொண்ட பொருள்கள் நமது கிரகத்தின் திடப்பொருளால் நிறுத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது‌.அதாவது உயர் ஆற்றல் துகள்கள் விண்வெளியில் இருந்து "கீழே" வருவதை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால் அனிடா பூமியிலிருந்து "மேலே" வரும் டவ் நியூட்ரினோக்கள் எனப்படும் கனமான துகள்களைக் கண்டறிந்தது.

நேரத்தில் பின்நோக்கிய

இந்த துகள்கள் உண்மையில் நேரத்தில் பின்நோக்கிய நிலையில் பயணிக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு இணை பிரபஞ்சத்தின் சான்றுகளைக் குறிக்கிறது.

அனிடா புலனாய்வாளருமான பீட்டர் கோர்ஹாம்

ஹவாய் பல்கலைக்கழகத்தின் சோதனை துகள் இயற்பியலாளரும், முதன்மை அனிடா புலனாய்வாளருமான பீட்டர் கோர்ஹாம், டவ் நியூட்ரினோ இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரடம், அது பூமியைக் கடந்து செல்வதற்கு முன்பு வேறு வகை துகள்களாக மாறி, கடந்த பின் மீண்டும் அதே துகளாக மாறும் என்கிறார்.

நிகழ்வை விவரிக்கும்

இந்த வித்தியாசமான நிகழ்வை விவரிக்கும் கார்னெல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையின் முன்னணி எழுத்தாளர் கோர்ஹாம் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும், சிலருக்கு சந்தேகம் ஏற்படுத்தும் இதுபோன்ற "சாத்தியமற்ற பல நிகழ்வுகளை" பார்த்ததாக குறிப்பிடுகின்றனர்.

"எல்லோரும் இந்த கருதுகோளை ஏற்றுக்கொள்வது இல்லை," என்கிறார் அவர்.

ல்லியன் ஆண்டு

இந்த நிகழ்விற்கான எளிய விளக்கம் என்னவென்றால், 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெடிப்பு தருணத்தில், இரண்டு பிரபஞ்சங்கள் உருவாகின. ஒன்று நம்முடையது, மற்றொன்று நம்முடைய பார்வையில் இருந்து நேரம் பின்னோக்கி சென்று தலைகீழாக இயங்குகிறது.

 இணை பிரபஞ்சத்தில்

நிச்சயமாக இந்த இணை பிரபஞ்சத்தில் வசிப்பவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் நாம் நேரத்தில் பின்நோக்கி நகர்வதாக கருதுவார்கள்.


"நமக்கு மிகவும் உற்சாகமான அல்லது மிகவும் சலிப்பான சாத்தியங்களே உள்ளன" என்று இந்த ஆய்வில் பணியாற்றிய இப்ராஹிம் சஃபா கூறுகிறார்.

News Source: nypost.com

Best Mobiles in India

English summary
NASA Scientists Found Evidence Of Parallel Universe In Antarctica: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X