Home
News

செவ்வாயில் திரவ நீர்.. 2 மில்லியன் ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? நாசா வெளியிட்ட உண்மை..

உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்ற, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமான விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றன. நிலவில் இருந்து ஆக்சிஜனை எப்படிப் பிரித்தெடுப்பது, சூரியனின் கொரோனா வட்டத்திற்குள் செயற்கோளை அனுப்பி சூரியனின் திறனை ஆராய்வது, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிவது போன்ற பல திட்டங்களை நாசா ஆராய்ச்சி விண்வெளி மையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பூமி வாழ் மனிதர்களுக்கான மறுவாழ்வு இடமா இந்த செவ்வாய் கிரகம்?

பூமி வாழ் மனிதர்களுக்கான மறுவாழ்வு இடமா இந்த செவ்வாய் கிரகம்?

இந்த விண்வெளி ஆராய்ச்சி வரிசையில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தின் திட்டம். பூமி வாழ் மனிதர்களுக்கான மறுவாழ்வு இடமாக இந்த கிரகத்தை மாற்ற முடியுமா என்ற கோணத்தில், அதற்கான சாத்திய கூறுகளைத் தேடிச் சேகரித்து வருகின்றனர். மனிதர்கள் செவ்வாயில் வாழத் தேவையான முக்கியமான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆதாரங்களை நாசா மற்றும் பிற நாடுகள் சேகரித்து வருகிறது.

நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர்

நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர்

அதில் முக்கியமானதாகச் செவ்வாயில் உயிர் வாழச் சாத்தியம் உள்ளதா? இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் எதுவும் உள்ளதா? உயிர்களின் அடையாளத்தைக் காண்பிக்கும் வகையில் ஆதாரங்களை நாசா சேகரித்து வருகிறது. இதற்காக, தனிச் சிறப்பான செயற்கைக்கோள் மற்றும் ஆர்பிட்டரை நாசா செவ்வாய் கிரகத்தில் நிறுவியுள்ளது. கடந்த, 2005 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் (MRO - Mars Reconnaissance Orbiter) இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் புதிய ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்ததா?

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்ததா?

நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் (MRO - Mars Reconnaissance Orbiter) இப்போது கண்டுபிடித்துள்ள மிக முக்கியமான தடையும் என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான உறுதியான அடையாளங்களை நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் எதிர்கால ஆராய்ச்சிகளுக்குக் கூடுதல் தகவலை வழங்கியுள்ளது. முந்தைய ஆய்வுகளின் முடிவுகளை இந்த கண்டுபிடிப்பு மாற்றியுள்ளது.

செவ்வாயில் உள்ள பனி நீர் ஆவியாகி குளோரைடு உப்பு படிவுகளாக மாறியதா?

செவ்வாயில் உள்ள பனி நீர் ஆவியாகி குளோரைடு உப்பு படிவுகளாக மாறியதா?

இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பின் படி, செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகிவிட்டதாகவும், இந்த புதிய கண்டுபிடிப்பு அந்த காலவரிசையைக் கணிசமாகக் குறைக்கிறது என்றும் நாசா கூறியுள்ளது. இது முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளின் தகவலை மாறி அமைத்துள்ளது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், கடந்த மாதம் AGU அட்வான்சஸில் வெளியிடப்பட்டன. செவ்வாயில் உள்ள பனி நீர் ஆவியாகி விடப்பட்ட பின்னர், குளோரைடு உப்பு படிவுகளை (chloride salt deposits) ஆய்வு செய்து குழு இந்த தகவலைக் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாயில் திரவ நீர் இருந்ததற்கான கனிம ஆதாரம் கிடைத்தது

செவ்வாயில் திரவ நீர் இருந்ததற்கான கனிம ஆதாரம் கிடைத்தது

செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருப்பதற்கான முதல் கனிம ஆதாரத்தையும் உப்பு படிவுகள் வழங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது. MRO விண்கலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான காம்பாக்ட் ரீகனைசன்ஸ் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (CRISM) என்ற கருவியில் இருந்து இந்த தரவை சேகரிக்கக் குழு பயன்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளம் முழுவதும் குளோரைடு உப்புகளின் அளவை வரைபடமாக்க, அவர்கள் விண்கலத்தில் உள்ள சூழல் கேமரா மற்றும் உயர்-தெளிவு இமேஜிங் அறிவியல் பரிசோதனை (HiRISE) வண்ண கேமராவைப் பயன்படுத்தியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் இருந்த பண்டைய குளங்களின் தன்மை மற்றும் நேரம் பற்றிய தகவல்

செவ்வாய் கிரகத்தில் இருந்த பண்டைய குளங்களின் தன்மை மற்றும் நேரம் பற்றிய தகவல்

இந்த ஆராய்ச்சியின் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் ஆழமற்ற குளங்கள் இருந்ததாகவும், அந்த பள்ளங்களில் இருந்த நீர் ஆவியாகி உப்புகளாகக் காணப்பட்டுள்ளன என்றும் நாசா கூறியுள்ளது. "ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உயர் தெளிவுத்திறன் இமேஜ் கொண்ட ஸ்டீரியோ மற்றும் அகச்சிவப்பு தரவுகளை வழங்கியதில் ஆச்சரியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. MRO இந்த நதியுடன் இணைக்கப்பட்ட பண்டைய உப்பு குளங்களின் தன்மை மற்றும் நேரம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளை உந்தியுள்ளது." என்று இந்த ஆராய்ச்சியுடன் தொடர்புடைய எழுத்தாளர் பெத்தானி எல். எல்மேன் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் ஆர்பிட்டர் தகவல்கள்

"எம்ஆர்ஓவின் மதிப்பின் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் ஒரு முக்கியமான பகுதி என்னவென்றால், இந்த ஆர்பிட்டர் உதவியுடன் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது பார்வை காலப்போக்கில் இன்னும் விரிவாகப் பெறுகிறது" என்று நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணியின் துணைத் திட்ட விஞ்ஞானி லெஸ்லி தம்பாரி கூறினார். "எங்கள் கருவிகளைக் கொண்டு நாம் எவ்வளவு கிரகத்தை வரைபடமாக்குகிறோமோ, அவ்வளவு சிறப்பாக அதன் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும்." என்றும் அவர் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தின் முழு வரைபடத்தையும் அதன் தன்மையையும் முதலில் அறிந்துகொள்வது முக்கியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நிலவில் ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

நிலவில் ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

இதேபோல், சமீபத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடும் ஆராய்ச்சியின் முடிவில் மிகவும் சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்புகள் படி, மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. சந்திரனின் பாறைகளின் அடுக்கு, ரெகோலித் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உயிர்களைத் தக்கவைக்க போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

நிலவில் 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வாழ முடியுமா?

நிலவில் 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வாழ முடியுமா?

நம்பப்பட ஒரு புதிய ஆய்வின் கணிப்புகள், சந்திரனின் மேற்பரப்பில் 8 பில்லியன் அல்லது 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வைத்திருக்க போதுமான ஆக்ஸிஜன் நிலவில் புதைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பற்றி முழுமையாக அறிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்.

Best Mobiles in India

English summary
NASA Scientists Discover Water Flowed On Mars 2 Billion Years Ago : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X